என் மலர்
செய்திகள்

தற்கொலை
ஈரோட்டில் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
ஈரோட்டில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). பெயிண்டர். இவருடைய மனைவி ஜெனிசா (28) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கோவிந்தராஜுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் கோவிந்தராஜ் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். பின்னர் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கோவிந்தராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






