என் மலர்
ஈரோடு
ஈரோடு அருகே வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையையும், ரூ.1 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள 46புதூர் 19அடிரோடு வள்ளி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60). கட்டுமான பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அம்சவள்ளி (56). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன் ஆந்திரா மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் பரமசிவமும், அம்சவள்ளியும் 46புதூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.
அவர்கள் 2 பேரும் தினமும் இரவு வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறைக்கு சென்று தூங்குவது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் இரவும் வீட்டின் கதவை உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவர்கள் 2 பேரும் முதல் தளத்தில் உள்ள அறைக்கு தூங்க சென்றுவிட்டனர்.
நேற்று அதிகாலை 5 மணிஅளவில் அம்சவள்ளி எழுந்து கீழே இறங்கி வந்தார். அப்போது வீட்டில் பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், வீட்டில் உள்ள அறைகளில் பொருட்கள் சிதறி கிடந்தன. அங்கிருந்த பீரோவும் திறக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் முதல் தளத்திற்கு சென்று தூங்கியிருந்த தனது கணவரை எழுப்பினார். அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் நகையும், ரூ.1 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுபற்றி அவர்கள் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நள்ளிரவில் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் நகையையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீடுகளில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து சென்றார்கள்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். வீட்டில் ஆட்கள் இருந்தபோதே துணிச்சலாக கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எத்தனை நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்? அவர்கள் ஏற்கனவே நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டார்களா? அந்த பகுதியில் சில நாட்களாக மர்மநபர்களின் நடமாட்டம் காணப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சித்தோடு பகுதியில் திருட்டில் ஈடுபட்டதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வாலிபரிடம் இருந்து 25 பவுன் நகையை போலீசார் மீட்டதுடன், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
பவானி:
பவானியை அடுத்த சித்தோடு நால்ரோடு பகுதியில் சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், ‘அவர் மதுரை ஆலப்பாளையம் செக்கடி தெருவை சேர்ந்த சோனையன் என்பவரின் மகன் சுரேஷ் என்கிற பட்டறை சுரேஷ் (வயது 31) என்பதும், அவர் சித்தோடு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுரேசை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 25 பவுன் நகையை போலீசார் மீட்டனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கடத்தூர்:
ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக நியாய விலை கடைகளில் பயோ மெட்ரிக் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர் தான் முதலிடம் பெற்றுள்ளார். 12 ஆண்டு காலத்துக்கு பிறகு மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இருந்து தான் நீட் தேர்வில் 180 கேள்விகளில் 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், இ-பாக்ஸ் நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே அரசு இலவச பயிற்சி அளிக்கும். 2-ம் முறை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தனியார் மூலம் பயிற்சி பெற்று தான் தேர்வு எழுத வேண்டும்.
மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க முதல்-அமைச்சர் சட்டம் இயற்றியுள்ளார். பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை. மேலும் பள்ளிகள் திறப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக நியாய விலை கடைகளில் பயோ மெட்ரிக் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர் தான் முதலிடம் பெற்றுள்ளார். 12 ஆண்டு காலத்துக்கு பிறகு மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இருந்து தான் நீட் தேர்வில் 180 கேள்விகளில் 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், இ-பாக்ஸ் நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே அரசு இலவச பயிற்சி அளிக்கும். 2-ம் முறை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தனியார் மூலம் பயிற்சி பெற்று தான் தேர்வு எழுத வேண்டும்.
மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க முதல்-அமைச்சர் சட்டம் இயற்றியுள்ளார். பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை. மேலும் பள்ளிகள் திறப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
மேலும் பிளஸ்-1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் மத்திய அரசின் www.scholarshiap.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2020-2021-ம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ -மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.
கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் வருகிற 31-ந் தேதிக்குள் மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாணவ -மாணவிகளின் ஆதார் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் அலுவலர்களுக்கு இணைய தளத்தால் பகிரப்பட மாட்டாது.
மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ -மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCVT குறியீட்டு எண்ணை மாணவ -மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5-வது தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த மாணவ -மாணவிகள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்து 362-க்கு விற்பனை ஆனது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான 40 கிராமங்களில் இருந்து 5 டன் பூக்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தார்கள்.
இந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2,362-க்கும், முல்லைப்பூ ரூ.680-க்கும், காக்கடா ரூ.650-க்கும், செண்டுமல்லி ரூ.46-க்கும், பட்டு பூ ரூ.150-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது. அதேபோல் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,400-க்கும், முல்லை ரூ.480-க்கும், காக்கடா ரூ.550-க்கும், செண்டு மல்லி ரூ.37-க்கும், பட்டுப் பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும் ஏலம் போனது.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தை விட நேற்று மல்லிகை பூ ஒரு கிலோவுக்கு 962 ரூபாய் அதிகரித்து விற்பனை ஆனது. அதேபோல் ஒரு கிலோ முல்லை பூ ரூ.200-ம், காக்கடா ரூ.100-ம், பட்டுப்பூ ரூ.70-ம், செண்டுமல்லி ரூ.9-ம் விலை அதிகரித்திருந்தது. மேலும் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.150 விலை குறைந்து ஏலம் போனது.
இதுபற்றி பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறும்போது, ‘சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு தற்போது பூக்கள் குறைவாக வருகிறது. ஆனால் வியாபாரிகளுக்கு அதிகமாக பூக்கள் தேவைப்படுகிறது. இதனால் வியாபாரிகள் அதிக விலை கூறி பூக்களை வாங்கி செல்வதால் தொடர்ந்து பூக்களின் விலை உயர்ந்து வருகிறது’ என்றனர்.
அந்தியூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன் அய்யாசாமி (வயது 27). எலக்ட்ரீசியன். திருமணம் ஆகாதவர்.
இந்த நிலையில் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டப்பட்டு வருகிறது.
இங்கு நேற்று அய்யாசாமி மின் இணைப்பு கொடுத்து கொண்டிருந்தார். அவருடன் பிரகாஷ் என்பவரும் வேலை பார்த்தார்.
அப்போது அய்யாசாமியை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். உடனே இதுபற்றி ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யாசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. விவசாய தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் துக்கம் விசாரித்துவிட்டு ஊருக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். பர்கூர் மலைப்பாதையில் நெய்கரை என்ற இடத்தில் சென்றபோது, அவர் திடீரென மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவமூர்த்தி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சிவமூர்த்திக்கு ஜெயா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,400-க்கு விற்பனை ஆனது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 40 கிராமங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள்.
நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ 1,400-க்கும், முல்லை ரூ.480-க்கும், காக்கடா ரூ.550-க்கும், செண்டுமல்லி ரூ.37-க்கும், பட்டுப் பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும் விற்பனை ஆனது. இதேபோல் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,260-க்கும், முல்லை ரூ.540-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.25-க்கும், பட்டுப்பூ ரூ.97-க்கும், ஜாதி மல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.530-க்கும், சம்பங்கி ரூ.90-க்கும் ஏலம் போனது.
நேற்று முன்தினத்தை விட நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.140-ம், கனகாம்பரம் ரூ.320-ம், செண்டுமல்லி ரூ.12-ம் அதிகரித்து விற்பனை ஆனது. அதேபோல் ஒரு கிலோ முல்லை பூ ரூ.60-ம், காக்கடா ரூ.50-ம், பட்டுப்பூ ரூ.17-ம், சம்பங்கி ரூ.30-ம் குறைந்து ஏலம் போனது. கனகாம்பரம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வரத்து குறைந்ததால் கனகாம்பரம், மல்லிகை ஆகிய பூக்களின் விலைகள் அதிகரித்தது என்று மலர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 40 கிராமங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள்.
நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ 1,400-க்கும், முல்லை ரூ.480-க்கும், காக்கடா ரூ.550-க்கும், செண்டுமல்லி ரூ.37-க்கும், பட்டுப் பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும் விற்பனை ஆனது. இதேபோல் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,260-க்கும், முல்லை ரூ.540-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.25-க்கும், பட்டுப்பூ ரூ.97-க்கும், ஜாதி மல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.530-க்கும், சம்பங்கி ரூ.90-க்கும் ஏலம் போனது.
நேற்று முன்தினத்தை விட நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.140-ம், கனகாம்பரம் ரூ.320-ம், செண்டுமல்லி ரூ.12-ம் அதிகரித்து விற்பனை ஆனது. அதேபோல் ஒரு கிலோ முல்லை பூ ரூ.60-ம், காக்கடா ரூ.50-ம், பட்டுப்பூ ரூ.17-ம், சம்பங்கி ரூ.30-ம் குறைந்து ஏலம் போனது. கனகாம்பரம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வரத்து குறைந்ததால் கனகாம்பரம், மல்லிகை ஆகிய பூக்களின் விலைகள் அதிகரித்தது என்று மலர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஈரோட்டில் கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு நசியனூர் ரோடு நாராயணவலசு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சில்லி சிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஈரோடு முனிசிபல் காலனி 2-வது வீதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 41) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சில்லி கடைக்கு 2 வாலிபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த ரூ.500-ஐ பால்ராஜிடம் கொடுத்து டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிவருமாறு கூறி உள்ளனர். இதனால் பால்ராஜ் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு டாஸ்மாக்கடையில் மது வாங்குவதற்காக புறப்பட்டார்.
அப்போது அந்த வாலிபர்கள் கொடுத்த ரூபாய் நோட்டு, கள்ள நோட்டு போல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பால்ராஜ் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாரத், ஹபிபூர் ரகுமான் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பால்ராஜிடம் கள்ள நோட்டு கொடுத்தது, ஈரோடு மாணிக்கம்பாளையம் ராம் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சவுந்தர் (20), சதீஸ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களும், காரில் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்ததும், சமீபகாலமாக வியாபாரம் சரிவர இல்லாததால் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வந்துள்ளனர். இந்த நிலையில், யூடியூப் மூலம் கள்ள நோட்டுகள் தயாரிப்பது எப்படி என்று பார்த்து ஜெராக்ஸ் எந்திரம் மூலம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்டதை 2 பேரும் ஒப்புக்கொண்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் எந்திரம், கள்ள நோட்டுகள் ரூ.20,100, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டன.
பாவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 99.4 அடியாக உள்ளது.
ஈரோடு:
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்ட பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது.
இன்றைய நிலவரப்படி பாவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.4 அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து தற்போது 1,037 கன அடியாக உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 3,250 கன அடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையில் 28.3 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை நீக்கக்கோரி சித்தோட்டில் தி.மு.க. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பவானி:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவியில் இருந்து நீக்கக்கோரி தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோடு நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மு.பெ.சாமிநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட நெசவாளர் அணி பொறுப்பாளர் சச்சிதானந்தம், மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளர் ஈரோடு இறையவன், கோபி ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.முருகன் மற்றும் ஈரோடு, கரூர், நாமக்கல் உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாநில துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசின் நிதி ஆதாரங்களோடு இயங்கி வருகின்ற அமைப்பாகும். இந்த நிலையில் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ரூ.1,500 கோடி நிதி ஈட்டக் கூடிய சக்தி உள்ளது. எனவே மாநில அரசின் நிதி தேவையில்லை. இதனால் மாநில அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆண்டுக்கு ரூ.1,500 கோடி நிதி ஈட்டக்கூடிய இந்த கல்வி நிறுவனத்தை மத்திய அரசு மறைமுகமாக கையில் எடுக்க சூரப்பாவை பயன்படுத்துகிறது. இதற்கு மாநில அரசு துணை போகிறது. நீட் தேர்வின் காரணமாக தமிழக மாணவர்கள் டாக்டராக பணியாற்ற முடியாத நிலையை ஏற்படுத்திய மத்திய அரசு, வருங்காலத்தில் அவர்களை பொறியியல் படிக்க முடியாத நிலைக்கு தள்ள வாய்ப்பு உள்ளது. எனவே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து சூரப்பாவை நீக்க வேண்டும்.
பெருந்துறை அம்மாபேட்டை பகுதியில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் வசித்து வந்தவர் சுரேஷ் கண்ணன் (வயது 35). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவருடைய மனைவி சண்முகப்பிரியா அவரிடம் கோபித்துக்கொண்டு சில நாட்களுக்கு முன்பு தேனியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதில் மனம் உடைந்த சுரேஷ் கண்ணன், நேற்று முன்தினம் பெருந்துறை அருகே உள்ள துடுப்பதிக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதுபற்றி அறிந்த அவரது கடை முதலாளி 108 ஆம்புலன்ஸ் மூலம் சுரேஷ் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேஷ் கண்ணன் நேற்று இறந்தார்.






