search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகை பூ
    X
    மல்லிகை பூ

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,400-க்கு விற்பனை

    சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,400-க்கு விற்பனை ஆனது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 40 கிராமங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள்.

    நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ 1,400-க்கும், முல்லை ரூ.480-க்கும், காக்கடா ரூ.550-க்கும், செண்டுமல்லி ரூ.37-க்கும், பட்டுப் பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும் விற்பனை ஆனது. இதேபோல் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,260-க்கும், முல்லை ரூ.540-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.25-க்கும், பட்டுப்பூ ரூ.97-க்கும், ஜாதி மல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.530-க்கும், சம்பங்கி ரூ.90-க்கும் ஏலம் போனது.

    நேற்று முன்தினத்தை விட நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.140-ம், கனகாம்பரம் ரூ.320-ம், செண்டுமல்லி ரூ.12-ம் அதிகரித்து விற்பனை ஆனது. அதேபோல் ஒரு கிலோ முல்லை பூ ரூ.60-ம், காக்கடா ரூ.50-ம், பட்டுப்பூ ரூ.17-ம், சம்பங்கி ரூ.30-ம் குறைந்து ஏலம் போனது. கனகாம்பரம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    வரத்து குறைந்ததால் கனகாம்பரம், மல்லிகை ஆகிய பூக்களின் விலைகள் அதிகரித்தது என்று மலர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×