என் மலர்
ஈரோடு
- ஷங்கரின் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற லாரி மீது சங்கரின் பைக் திடீரென மோதியது.
- இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் உள்ளது வாய்க்கால்புதூர். இங்குள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (35). இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவரது மனைவி பவித்ரா. சங்கர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சங்கர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் பசுவபட்டி பிரிவு அருகே இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஷங்கரின் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற லாரி மீது சங்கரின் பைக் திடீரென மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சங்கரை பெருந்துறையில் உள்ள ஐ ஆர்.டி.டி. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சங்கர் இறந்து விட்டார்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- இதன் மூலமாக அப்பகுதி விவசாயிகள் பயன் பெறுவதுடன் வெற்றிலை சாகுபடி பரப்பும் அதிகமாகும்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, நஞ்ச க்கவுண்டன்பாளையம், வந்தனாங்காடு பகுதியை சேர்ந்த நாகேஸ்வரன் கலெக்டருக்கு அனுப்பி–யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரத்தில் விளையும் வெற்றிலையை தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மா நிலங்களிலும் விரும்பி வாங்கிச் சுவைப்பார்கள். பிற பகுதியில் விளையும் வெற்றிலைகளுக்கு இல்லாத சுவையும், இயற்கை விவசாயம் மூலமாக விளையும் தன்மையும் இதற்கு உண்டு.
எனவே பிரசித்தி பெற்ற அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் நான் மனு வழங்கியபோது, 'தனி நபராக விண்ணப்பித்து புவிசார் குறியீடு பெற இயலாது' என பதிலளித்தனர்.
மாவட்ட நிர்வாகமும், அந்த தொகுதி எம்.எல்.ஏ. போன்றோர் இதற்கான முயற்சியை மேற்கொண்டு, அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக அப்பகுதி விவசாயிகள் பயன் பெறுவதுடன் வெற்றிலை சாகுபடி பரப்பும் அதிகமாகும் என தெரிவித்துள்ளார்.
- காவல் துறை தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் ஆகிய பணிகளுக்கு பணிமன அணை வழங்கப்பட்டு வருகிறது.
- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 29 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
ஈரோடு:
தமிழக காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த 1,132 போலீசாரின் வாரிசு களுக்கு கருணை அடிப்ப டையில் பணி நியமனம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார்.
கருணை அடிப்படையில் பணி நியம னத்தையும் சென்னையில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து முதற்கட்டமாக 912 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. காவல் துறை தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் ஆகிய பணிகளுக்கு பணிமன அணை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பணியின் போது மரணம் அடைந்த போலீசாரின் வாரிசுகள் 29 பேருக்கு பணி நியமன ஆனைகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 29 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
- கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- இந்த உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குருவரெட்டியூர், பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கவுந்தப்பாடி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முகாசிபிடாரியூர், ஓட்டப்பாறை, ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம், பிச்சாண்டாம்பாளையம், கோபி ஊராட்சி ஒன்றி யத்துக்கு உள்பட்ட குள்ளம்பாளையம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோசனம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட துடுப்பதி ஆகிய 10 கிராம ஊராட்சிகளில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்களில், ஊராட்சிகளில் உள்ள வீடுகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் மூலமாக பெறப்படும் காய்கறிக் கழிவுகள், பழக்கழிவுகள் மற்றும் இலை, தழைக் கழிவுகள் ஆகியவற்றை கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை 9,970 கிலோ உரம் தயாரிக்கப்பட்டு அதில் 5,367 கிலோ உரம் விற்பனை செய்யப்பட்டு ள்ளது. இந்த நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை த்திட்ட இயக்குனருமான மதுபாலன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலு வலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- ஈரோட்டில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் வந்திருந்தனர். கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கினார்.
கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் தங்களது பிரச்சினைகள் குறித்த மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்து கொண்டிருந்தனர். பின்னர் விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது காலிங்கராயன் பாசன பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாகவும், குறைகளை தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் கூறி கையில் பதாகைகளுடன் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
காலிங்கராயன் தண்ணீர் திறப்பு, நெல்கொள்முதல் மையம் உள்ளிட்டவற்றிற்கு மாவட்ட அதிகாரிகள் முன்னுரிமை தருவதில்லை என குற்றம்சாட்டினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய வருவாய் அலுவலர், விவசாயிகள் பிரச்சனைகளை களைய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
போராட்டம் குறித்து காலிங்கராயன் விவசாயிகள் நலச்சங்கம் தலைவர் சேது கூறியதாவது:-
காலிங்கராயன் பாசனப்பகுதியில் பிரச்சனைகள் பல உள்ளன. இது தொடர்பாக கலெக்டரிடம் கடந்த 6 மாத காலமாக மனுக்களை கொடுத்து வந்தோம். சட்டவிரோதமாக செங்கல் சூலைகளுக்கு மண் அள்ளப்படுகிறது.
காலிங்கராயன் கால்வாயில் கட்டுமான பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக மனுக்களை அளித்தோம். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேசுவதற்கு கூட்டத்தில் அனுமதியும் மறுக்கப்பட்டது. எனவே இதனை கண்டித்து நாங்கள் தர்ணாவில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பிரச்சினைகள் குறித்து பேசினர்.
- ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது.
- பக்தர்கள் குளிக்கும் பகுதிகளில் படிக்கட்டுகளை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது.
இதனால் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பவானிக்கு வருகிறார்கள். அவர்கள் அங்கு 3 நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை ஆற்றில் குளித்து முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.
மேலும் கர்நாடக, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பலர் குடும்பத்துடன் வந்து ஆற்றில் புனித நீராடி சங்க மேஸ்வரரரை வழிபடுகிறார்கள். இதனால் கூடு துறையில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி அணையில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு கூருகிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதே போல் பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் படிதுறைகளை தொட்டப்படி தண்ணீர் அதிகளவு செல்கிறது. மேலும் பக்தர்கள் குளிக்கும் பகுதிகளில் படிக்கட்டுகளை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்கவோ, திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதனால் கூடுதுறைக்கு பொதுமக்கள் புனித நீராடவும், திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் கூடுதுறைக்கு வர வேண்டாம். மேலும் பக்தர்கள் வழக்கம் போல் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம். பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வழிபாடு செய்ய வேண்டும் என்றனர்.
இதையொட்டி கூடுதுறை ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதை அறியாமல் வந்த சில பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இபோல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தடுப்பணையில் குளிப்பதற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகிறார்கள்.
இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து 6500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் குளிக்கும் இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பவானி ஆற்றில் தண்ணீர் அதிகளவு திறக்கப்படுவதால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, சுற்றி பார்க்கவோ அனுமதி இல்லை. ஆற்றில் தண்ணீர் குறையும் வரை இதே நிலை தான் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று பொதுமக்கள் பலர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்தனர். தடை விதிக்கப்பட்டு இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.
- விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று நடந்த ஏலத்திற்கு 939 வாழைத்தார் களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் வளர்பிறை முகூர்த்த தினங்கள் உள்ளதால் வாழைத்தார்கள் நல்ல விலைக்கு விற்பனையானது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது வழக்கம். இதில் சத்தியமங்கலம், கெம்பநாயக்கன் பாளையம், டி.ஜி. புதூர், சிக்கரசம்பாளையம், புது வடவள்ளி, அரசூர், உக்ரம், செண்பகபுதூர், பெரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைவித்த வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று நடந்த ஏலத்திற்கு 939 வாழைத்தார் களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் ரக ஆளு உயர வாழைத்தார் ரூ.900 வரையிலும், தேன் வாழை ரூ.600, செவ்வாழை ரூ.650, மொந்தன் ரூ. 250 வரையிலும் விற்பனையானது.
இதில் சத்தியமங்கலம் அருகே உள்ள காளியூரை சேர்ந்த விவசாயி அம்மாசை குட்டி என்பவர் தனது தோட்டத்தில் விளைந்திருந்த ராட்சத ஆள் உயர பூவன் ரக வாழைத்தாரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்.
இந்த வாழைத்தாரை உடுமலையை சேர்ந்த ஒரு வியாபாரி போட்டி போட்டு ஏலம் எடுத்ததில் ரூ. 900-க்கு ராட்சத வாழைத்தார் விற்பனையானது. இந்த ராட்சத வாழைத்தாரை இரண்டு பேர் கை தாங்கலாக தூக்கி சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் வளர்பிறை முகூர்த்த தினங்கள் உள்ளதால் வாழைத்தார்கள் நல்ல விலைக்கு விற்பனையானது.
- திடீரென தான் மறைத்து வைத்து இருந்த மண் எண்ணை கேனை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார்.
- எனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் குடிசை அமைக்க சென்றால் இங்கு வரகூடாது என மிரட்டுகிறார்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர். அவர்களிடம் இருந்து மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா மனுக்கள் வாங்கினார்.
இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு மூதாட்டி வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த மண் எண்ணை கேனை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவலரிடம் இருந்து மண் எண்ணை கேனை பிடிங்கி விசாரித்தனர். அப்போது அவர் ஈரோடு அடுத்த பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி பகுதியை சேர்ந்த பத்மா என தெரியவந்தது.
இதையடுத்து அவர் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் ஒரு மனு கொடுத்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
எனது வீடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சிலேட்டர் நகரில் உள்ளது. எனது அண்ணன் எனது வீட்டை ஒருவருக்கு மாத வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டார். வாடகை ஒப்பந்த அடிப்படையில் நான் கடந்த 14.7.2021 அன்று வீடு வாடகைக்கு கொடுத்தேன்.
இந்த நிலையில் ஒரு சில பிரச்சினைகளால் வீட்டை காலி செய்ய சொன்னேன். இதற்கு அவர் ஒரு ஆண்டுக்கு பிறகு தான் காலி செய்வேன். அதற்கு முன்பு இங்கு வரக்கூடாது என மிரட்டுகிறார்.
இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் எனக்கு உடல்நிலை சரியில்லை. இதற்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும். அதற்காக சிலேட்டர் நகரில் உள்ள எனது வீட்டில் தங்கி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தற்போது அவர் வீட்டை காலி செய்ய மறுக்கிறார். மேலும் எனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் குடிசை அமைக்க சென்றால் இங்கு வரகூடாது என மிரட்டுகிறார். எனவே தாங்கள் விசாரணை நடத்தி எனது வீட்டை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
- சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.
- மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் படை வீரர்களின் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் வழங்கினர்.
இதில் 11 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திருமண மானியம், கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி மானியம் என 8 முன்னாள் படை வீரர்கள் மற்றும் படை வீரர்களின் சார்ந்தோர்களுக்கு ரூ.74 ஆயிரம் மதிப்பில் மானியத்தொகைக்கான உத்தரவு ஆணைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) குமரன், மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் - கலெக்டர் உத்தரவுமுன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் - கலெக்டர் உத்தரவுஇயக்குநர் மணிவண்ணண் உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
- 3 நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
சத்தியமங்கலம்:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 3 நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து வாய்க்காலில் வினாடிக்கு 1,600 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 300 கனஅடியும், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனத்துக்கு 800 கன அடியும், பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 6,700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானி ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
- காதல் தோல்வி அடைந்ததால் சுபாஷ் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார்.
- காவிரி ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பவானி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ராசிகவுண்டனூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சுபாஷ் (24). டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டதாரி.
சுபாஷ் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காதல் தோல்வி அடைந்ததால் சுபாஷ் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள காவிரி ஆற்றுப்பாலத்திற்கு வந்தார். பின்னர் திடீரென அவர் காவிரி ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள இரும்பு குழாயில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தற்போது காவிரி ஆற்றில் 1 லட்சத்து 20 ஆயிரம்கன அடிதண்ணீர் ஓடுவதால் தற்கொலை செய்த சுபாஷின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் சுபாஷின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தாயார் இந்திரா தனது மகன் கிஷோரிடம் கடன் வாங்கி படிக்க வைத்தோம் என கண்டித்துள்ளார்.
- சைக்கிள் நிறுத்தும் இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே சென்னப்ப நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவரது மனைவி இந்திரா (35). இவர்களது மகன் கிஷோர் (16).
இவர் கடந்த ஆண்டு ஈரோடு ெரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது நடந்த தேர்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு படித்து வருகிறார்.
இதை தொடர்ந்து அவர் மீண்டும் தேர்வு எழுதினார். இதில் அவர் சமூக அறிவியல் பாடத்தில் மீண்டும் தோல்வி அடைந்தாராம். இதனால் கிஷோரின் தாயார் இந்திரா தனது மகன் கிஷோரிடம் கடன் வாங்கி படிக்க வைத்தோம். தேர்ச்சி பெறாததை குறித்து கண்டித்து உள்ளார்.
இதனால் கிஷோர் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து அவர் சைக்கிளை எடுத்து கொண்டு நஞ்சை ஊத்துக்குளி சென்றார். அங்கு சைக்கிள் நிறுத்தும் இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.
ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.






