என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Micro composting centers"

    • கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • இந்த உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதில் ஒரு பகுதியாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதன்படி அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குருவரெட்டியூர், பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கவுந்தப்பாடி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முகாசிபிடாரியூர், ஓட்டப்பாறை, ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம், பிச்சாண்டாம்பாளையம், கோபி ஊராட்சி ஒன்றி யத்துக்கு உள்பட்ட குள்ளம்பாளையம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோசனம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட துடுப்பதி ஆகிய 10 கிராம ஊராட்சிகளில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த மையங்களில், ஊராட்சிகளில் உள்ள வீடுகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் மூலமாக பெறப்படும் காய்கறிக் கழிவுகள், பழக்கழிவுகள் மற்றும் இலை, தழைக் கழிவுகள் ஆகியவற்றை கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இதுவரை 9,970 கிலோ உரம் தயாரிக்கப்பட்டு அதில் 5,367 கிலோ உரம் விற்பனை செய்யப்பட்டு ள்ளது. இந்த நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை த்திட்ட இயக்குனருமான மதுபாலன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலு வலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×