என் மலர்
ஈரோடு
- மூட்டையில் இருந்து கயிற்றை அவிழ்த்து பிரித்து பார்த்தபோது அதில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.
- இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பெயரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மோளகவுண்டம் பாளையம் ஜீவானந்தம் வீதியில் செல்லும் சாக்கடையில் இருந்து நேற்று இரவு பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது சாக்கடையில் ஒரு மூட்டை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், தீபா, கோமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் சாக்கடையில் கிடந்த மூட்டையை வெளியே எடுத்தனர். அப்போது அந்த மூட்டை கயிற்றால் கட்டப்பட்டிருந்தது.
மூட்டையில் இருந்து கயிற்றை அவிழ்த்து பிரித்து பார்த்தபோது அதில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. பிணம் அழுகிய நிலையில் இருந்ததால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு சாக்கு மற்றும் போர்வையால் உடலை கட்டி கொண்டுவந்து சாக்கடையில் வீசி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோப்பநாய் ஜெர்ரி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் சென்று விட்டு நின்றது. இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணம் கிடந்த பகுதியில் ஒரு சில வீடுகள் மட்டுமே உள்ளன.
மேலும் இருட்டாக இருப்பதால் மர்மநபர்கள் கொலை செய்த பிணத்தை கொண்டு வந்து வீசி சென்று இருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
எனவே ஜீவானந்தம் வீதிக்கு செல்ல வேண்டிய கரூர் ரோடு, கல்யாணசுந்தரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள்.
கொலை செய்யப் பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? போன்ற விவரங்களை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பெயரில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், கோமதி, தீபா ஆகிய கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் ஈரோடு. திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
- பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- தரைப்பாலத்தின் அருகில் இருந்த பழமை வாய்ந்த பெரிய மரம் முறிந்து தரை பாலத்தின் குறுக்கே விழுந்ததால் தரைபாலம் சேதாரம் அடைந்துள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தொடர்ந்து பலத்த மழை கொட்டியது.
பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கும் கொள்ளேகால் சாலை அரேப்பாளையம் பிரிவு அருகே உள்ள தரைப் பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தரைப்பாலத்தின் அருகில் இருந்த பழமை வாய்ந்த பெரிய மரம் முறிந்து தரை பாலத்தின் குறுக்கே விழுந்ததால் தரைபாலம் சேதாரம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக கேர்மாளம், குளியாடா, மாவள்ளம், கானக்கரை, தேவர்நத்தம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மலை கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
இதே போல் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் இரவு பலத்த மழை பெய்தது, இதனால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, விவசாய நிலங்களில் மழை நீர்குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- நீலகிரி மலைப்ப குதியில் கடந்த சில நாட்க ளாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது.
- இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணை க்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியி லேயே நீடித்து வருகிறது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்ப குதியில் கடந்த சில நாட்க ளாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. நேற்று அணைக்கு வினா டிக்கு 6,800 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் இன்று மீண்டும் நீர்வரத்து அதிக ரித்து 9,800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 9,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
- இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், குமாரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அந்த வழியாக வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.
அப்போது அந்த 2 வாலிபர்களும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் விசாரணையில் ஒருவர் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (20), மற்றொருவர் சேலம் மாவட்டம் உடையாபட்டி பகுதியை சேர்ந்த குமார்(19) என தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், குமாரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதால் ஒரு ஓட்டு வீடு சேதம் ஏற்பட்டு வீட்டை வெள்ளம் சூழ்ந்து திடீரென இடிந்து விழுந்தது.
- இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராஜன் மற்றும் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சேதமான பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
பவானி:
மேட்டூர் அணை நிரம்பி யதை யொட்டி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.
இதேபோல் அம்மா பேட்டை, பவானி பகுதி களில் உள்ள காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.
இதையொட்டி பவானி மற்றும் அம்மா பேட்டை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் குடியிருந்த பொதுமக்கள் அருகே உள்ள பள்ளி மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்த ஒரு சில வீடுகள் பாதிப்பு அடைந்து வருகிறது.
இந்த நிலையில் பவானி பாலக்கரை பகுதியை சேவர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி முனிரத்தினம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வீடு பாலக்கரை பகுதியில் காவிரி கரை யோரம் அமைந்துள்ளது.
ஆற்றில் அதிகளவவு தண்ணீர் செல்வதால் இவர் களது வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது. இதையொட்டி அவர்கள் ௪ பேரும் அருகே உள்ள ஒரு முகாமில் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதால் அவர்களது வீடு ஓட்டு வீடு என்பதால் சேதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவர்களது வீடு வெள்ளம் சூழ்ந்து திடீரென இடிந்து விழுந்தது. அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்ட தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராஜன் மற்றும் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சேதமான பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
- பர்கூர்-கர்நாடகா செல்லும் பிரதான சாலை பகுதியில் பர்கூர் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சாலையில் ஒற்றை யானை சென்றது.
- இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலை பகுதிகளில் யானை, மான், கரடி செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது ஒற்றை யானை ஊருக்குள் பூகுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் பர்கூர்-கர்நாடகா செல்லும் பிரதான சாலை பகுதியில் பர்கூர் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சாலையில் ஒற்றை யானை சென்றது.
இதனால் சாலையில் செல்லக்கூடிய இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஒட்டிகள் வாகன த்தை ஓரமாக நிறுத்தினர். சில வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் யானையை படம் பிடித்தனர்.
சுமார் அரை மணி நேரம் சாலையில் வலம் வந்த ஒற்றை யானை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் பர்கூர் போலீஸ் நிலையத்தில் பின்புற மதில் சுவற்றின் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
- சென்னிமலை அடுத்த கூரபாளையம் பஸ் நிலையம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தி வருபவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
அதன்படி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீ ர்செல்வம் மேற்பார்வையில் போலீசார் சென்னிமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சென்னிமலை அடுத்த கூரபாளையம் பஸ் நிலையம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டதில் அங்குள்ள ஒரு பகுதியில் 25 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்ப ட்டிருப்பது தெரியவந்தது. மொத்தம் 1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரேஷன் அரிசியை பதுக்கியது சென்னிமலை அடுத்த மேலப்பாளையம், ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா (50) என தெரிய வந்தது. இவர் ரேஷன் அரிசியை பதுக்கி வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கருங்கல்பாளையம் சங்க நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 1,550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர். வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலையில் அரிசியை விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள், 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு:
மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை யையும் உயர்த்தியுள்ளது.அண்மையில் அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் மீதும் ஜிஎஸ்டி விதித்து ள்ளது. மேலும், பெட் ரோல், டீசல் விலைகளையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
அதுமட்டுமின்றி, மின்சார சட்டத்திருத்த மசோதா மூலமாக மின் வினியோகத்தை கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்க வழிவகுத்துள்ளது. இதன் மூலமாக விவசாயத்துக்கான இலவச மின்சாரம், மின் கட்டண மானியங்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மறியல் போரா ட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
ஆனால் தடையை மீறி இன்று ஈரோட்டில், தலைமை தபால் அலுவலகம் அருகில் நடைபெற்ற இப்போரா ட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். நிர்வாகி ஸ்டாலின் குணசே கரன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில், மாவட்ட துணை செயலாளர்கள் சின்னசாமி, குணசேகரன், பொருளாளர் ரமணி, மாவட்டக் குழு உறுப்பினர் துளசிமணி, வட்டாரச் செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெருந்துறை, புஞ்சை புளியம்பட்டி, பவானி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் இதே கோரி க்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு மாவட்ட முழுவதும் 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- காட்டுப்பன்றி குறுக்கே வந்ததை கண்டு மோகனரங்கம் திடீரென மோட்டார் சைக்கிளில் பிரேக் போட்டுள்ளார்.
- மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மோகனரங்கம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பா ளையம் அண்ணமார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகனரங்கம் (58). விவசாயம் செய்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று அதிகாலை கொங்கர்பாளையம் சமனாக்காடு பகுதியில் இருக்கும் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் வாணிபுத்தூர்-ஆயாத்தோட்டம் வழியாக வாய்க்கால் கரையினை ஓட்டிய சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காட்டுப்பன்றி குறுக்கே வந்ததை கண்டு மோகனரங்கம் திடீரென மோட்டார் சைக்கிளில் பிரேக் போட்டுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவர் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த மோகனரங்கனை அவ்வ ழியாக வந்த சிலர் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மோகனரங்கம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை மோகனரங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்திலேயே இதற்கு முன்பாக காட்டுப்பன்றி குறுக்கே வந்து அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு உள்ளதா அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து குறித்து பங்களாப்பு தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஓணம் பண்டிகை வருவதையொட்டி புதிய ஜவுளி ரகங்கள் வரத்தா கியுள்ளன. இதனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக உள்ளது.
- சந்தையில் சில்லரை வியாபாரம் 40 சதவீதமும், மொத்த வியாபாரம் 30 சதவீதமும் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தையானது கனி மார்கெட், பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கி ழமைகளில் ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது.
வாரந்தோறும் நடைபெறும் இந்த ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கிச் செல்வார்கள். கடந்த சில வாரங்களாக வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வரும் 8-ந் தேதி ஓணம் பண்டிகை வருவதையொட்டி புதிய ஜவுளி ரகங்கள் வரத்தா கியுள்ளன. இதனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக உள்ளது.
ஓணம் பண்டிகையையொட்டி இன்று ஏராளமான கேரளா வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால் மழை காரணமாக மற்ற வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.
இதனால் மொத்த வியாபாரம் சுமாராகவே இருந்தது. இன்று நடந்த சந்தையில் சில்லரை வியாபாரம் 40 சதவீதமும், மொத்த வியாபாரம் 30 சதவீதமும் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த வாரம் ஓணம் பண்டிகை நெருங்க உள்ளதால் வியாபாரம் களைக்கட்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், விபத்தை தடுக்கவும் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் முதல் கவுந்தப்பாடி வரை ரோடு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
- காளிங்கராயன் பகுதியில் ரோடு விரிவாக்கம் பணிகள் நீண்ட நாட்களாக மெதுவாக நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.
பவானி:
பவானி அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் தினமும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.
இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், விபத்தை தடுக்கவும் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் முதல் கவுந்தப்பாடி வரை ரோடு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் காளிங்கராயன் பகுதியில் ரோடு அகலப்படுத்தும் பணி கடந்த சில மாத ங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இதனால் ரோட்டோரம் இருந்த ஒரு சில மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
இந்த நிலையில் காளிங்கராயன் பகுதியில் ரோடு விரிவாக்கம் பணிகள் நீண்ட நாட்களாக மெதுவாக நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் அவதி அடைந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.இதேபோல் காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வெட்ட ப்பட்ட ஒரு மரத்தின் வேர் பகுதியை அப்புறப்படுத்தாமல் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதாக கூறப்படு கிறது.
இதனால் வேர் உள்ள இடத்தில் மீண்டும் மரம் வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ரோடு சேதம் அடையும் நிலை உள்ளது. எனவே மரத்தின் வேரை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் ரோடு விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் ரோட்டோரங்களில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி பொது மக்கள் வலியுறுத்தி உள்ள னர்.
- பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை, பசுவேசுரர் வீதி, தந்தை பெரியார் வீதி, காவிரி நகர் பகுதியில் தாழ்வான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
- அவர்களுக்கு தேவையான உணவு வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உபரி நீர் அதிக அளவில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து 16 மதகு வழியாக வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி உட்பட காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வருவாய்த்து றையினர் முடிவு செய்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை, பசுவேசுரர் வீதி, தந்தை பெரியார் வீதி, காவிரி நகர் பகுதியில் தாழ்வான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உணவு வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை இரவு முதல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மெல்ல மெல்ல அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் 3 நாட்களாக பவானியில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.






