search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Floods surround residences"

    • பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை, பசுவேசுரர் வீதி, தந்தை பெரியார் வீதி, காவிரி நகர் பகுதியில் தாழ்வான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • அவர்களுக்கு தேவையான உணவு வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உபரி நீர் அதிக அளவில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து 16 மதகு வழியாக வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதனால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி உட்பட காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வருவாய்த்து றையினர் முடிவு செய்து உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை, பசுவேசுரர் வீதி, தந்தை பெரியார் வீதி, காவிரி நகர் பகுதியில் தாழ்வான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை இரவு முதல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மெல்ல மெல்ல அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் 3 நாட்களாக பவானியில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ×