என் மலர்
நீங்கள் தேடியது "India picketed"
- மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு:
மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை யையும் உயர்த்தியுள்ளது.அண்மையில் அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் மீதும் ஜிஎஸ்டி விதித்து ள்ளது. மேலும், பெட் ரோல், டீசல் விலைகளையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
அதுமட்டுமின்றி, மின்சார சட்டத்திருத்த மசோதா மூலமாக மின் வினியோகத்தை கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்க வழிவகுத்துள்ளது. இதன் மூலமாக விவசாயத்துக்கான இலவச மின்சாரம், மின் கட்டண மானியங்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மறியல் போரா ட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
ஆனால் தடையை மீறி இன்று ஈரோட்டில், தலைமை தபால் அலுவலகம் அருகில் நடைபெற்ற இப்போரா ட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். நிர்வாகி ஸ்டாலின் குணசே கரன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில், மாவட்ட துணை செயலாளர்கள் சின்னசாமி, குணசேகரன், பொருளாளர் ரமணி, மாவட்டக் குழு உறுப்பினர் துளசிமணி, வட்டாரச் செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெருந்துறை, புஞ்சை புளியம்பட்டி, பவானி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் இதே கோரி க்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு மாவட்ட முழுவதும் 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.






