search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Failure of love"

    • கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் விக்னேஷ் தாய் செல்வி புகார் கொடுத்தார்.
    • விக்னேஷ் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா?

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் மகன் விக்னேஷ் (வயது 19) கூலி வேலை செய்துவந்தார். கடந்த 21-ந் தேதி வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அருகிலுள்ள இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடி எங்கேயும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில்விக்னேஷ் தாய் செல்வி புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காணாமல் போன விக்னேசை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பொட்டியம் சுடுகாட்டில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக கச்சிராயபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது இவர் காணாமல் போன விக்னேஷ் என்பது தெரியவந்தது . இது குறித்து கொலையா? அல்லது விக்னேஷ் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஷ் வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அவ்வகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    • காதல் தோல்வி அடைந்ததால் சுபாஷ் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார்.
    • காவிரி ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பவானி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ராசிகவுண்டனூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சுபாஷ் (24). டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டதாரி.

    சுபாஷ் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காதல் தோல்வி அடைந்ததால் சுபாஷ் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள காவிரி ஆற்றுப்பாலத்திற்கு வந்தார். பின்னர் திடீரென அவர் காவிரி ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள இரும்பு குழாயில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தற்போது காவிரி ஆற்றில் 1 லட்சத்து 20 ஆயிரம்கன அடிதண்ணீர் ஓடுவதால் தற்கொலை செய்த சுபாஷின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

    இதையடுத்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் சுபாஷின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×