கச்சிராயபாளையம் அருகே வேப்ப மரத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் விக்னேஷ் தாய் செல்வி புகார் கொடுத்தார்.விக்னேஷ் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா?
கச்சிராயபாளையம் அருகே  வேப்ப மரத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் மகன் விக்னேஷ் (வயது 19) கூலி வேலை செய்துவந்தார். கடந்த 21-ந் தேதி வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அருகிலுள்ள இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடி எங்கேயும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில்விக்னேஷ் தாய் செல்வி புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காணாமல் போன விக்னேசை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பொட்டியம் சுடுகாட்டில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக கச்சிராயபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது இவர் காணாமல் போன விக்னேஷ் என்பது தெரியவந்தது . இது குறித்து கொலையா? அல்லது விக்னேஷ் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஷ் வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அவ்வகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com