என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற கோரிக்கை
    X

    அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற கோரிக்கை

    • அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • இதன் மூலமாக அப்பகுதி விவசாயிகள் பயன் பெறுவதுடன் வெற்றிலை சாகுபடி பரப்பும் அதிகமாகும்

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, நஞ்ச க்கவுண்டன்பாளையம், வந்தனாங்காடு பகுதியை சேர்ந்த நாகேஸ்வரன் கலெக்டருக்கு அனுப்பி–யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரத்தில் விளையும் வெற்றிலையை தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மா நிலங்களிலும் விரும்பி வாங்கிச் சுவைப்பார்கள். பிற பகுதியில் விளையும் வெற்றிலைகளுக்கு இல்லாத சுவையும், இயற்கை விவசாயம் மூலமாக விளையும் தன்மையும் இதற்கு உண்டு.

    எனவே பிரசித்தி பெற்ற அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் நான் மனு வழங்கியபோது, 'தனி நபராக விண்ணப்பித்து புவிசார் குறியீடு பெற இயலாது' என பதிலளித்தனர்.

    மாவட்ட நிர்வாகமும், அந்த தொகுதி எம்.எல்.ஏ. போன்றோர் இதற்கான முயற்சியை மேற்கொண்டு, அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக அப்பகுதி விவசாயிகள் பயன் பெறுவதுடன் வெற்றிலை சாகுபடி பரப்பும் அதிகமாகும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×