சாலை விபத்தில் புது மாப்பிள்ளை பலி

ஷங்கரின் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற லாரி மீது சங்கரின் பைக் திடீரென மோதியது.இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் புது மாப்பிள்ளை பலி
Published on

சென்னிமலை:

சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் உள்ளது வாய்க்கால்புதூர். இங்குள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (35). இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவரது மனைவி பவித்ரா. சங்கர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சங்கர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் பசுவபட்டி பிரிவு அருகே இரவு நேரத்தில்  சென்று கொண்டிருந்தார்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஷங்கரின் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற லாரி மீது சங்கரின் பைக் திடீரென மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சங்கரை பெருந்துறையில் உள்ள ஐ ஆர்.டி.டி. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சங்கர் இறந்து விட்டார்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com