என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளது.
    • மேலும் செண்டு மல்லி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக பூக்கள் தேவை அதிகரித்து விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் வரும் 8-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது.மேலும் கோவில்களில் தொடர்ந்து திருவிழா மற்றும் முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் பூக்களின் தேவை மேலும் அதிக ரித்துள்ளது.

    ஈரோடு பஸ் நிலையத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இங்கு தினமும் அந்தியூர், சத்தியமங்கலம் ,சேலம், திண்டுக்கல், ஓசூர் போன்ற பகுதிகளிலிருந்து பூக்கள் வரத் ஆகி வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் ரூ.500- க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ விலை இந்த வாரம் மழை காரணமாக வரத்து குறைந்ததால் மல்லிகை பூக்களின் விலை மேலும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இன்று ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 2000-க்கு மேல் விற்பனையானது. மேலும் ஓணம் பண்டிகை வருவதால் இன்னும் வரும் நாட்களில் இதன் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    இதேபோல் மற்ற பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

    முல்லை - 400, ஜாதிப்பூ - 300, ரோஜா பூ - 200, சம்மங்கி - 145, செவ்வந்தி பூ - 160, பட்டுப் பூ - 50.

    இதே போல் சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று காலை மல்லிகைப்பூ கிலோ ரூ.2400-க்கு விற்பனையானது. இங்கு இருந்து ஓணம் பண்டிகை க்காக அதிகளவு கேரளாவுக்கு மல்லிகைப்பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் செண்டு மல்லி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • நிலை தடுமாறிய மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
    • சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அரியப்பம் பாளையம் நோக்கி மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 18 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு மினிலாரி நேற்று இரவு புறப்பட்டது.

    அப்போது சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ஜெயசக்தி மேடு என்ற பகுதியில் சென்ற போது ஒரு வளைவில் திரும்ப டிரைவர் திடீர் பிரேக் போட்டார்.

    இதில் நிலை தடுமாறிய மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் மினி லாரியில் இருந்த 18 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அம்மாபேட்டை பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை நள்ளிரவு 12 மணி வரை 4 மணி நேரம் இடைவிடாமல் கொட்டியது.
    • ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 421.8 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. இரவு 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய கொட்டியது.

    பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், பவானி, கொடுமுடி, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    இந்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் விவசாய நிலங்களிலும் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    அம்மாபேட்டை பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை நள்ளிரவு 12 மணி வரை 4 மணி நேரம் இடைவிடாமல் கொட்டியது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக இங்கு 4 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    மற்ற இடங்களில் பெய்த மழை மி.மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-14, பெருந்துறை-40, கோபிசெட்டிபாளையம்-40, தாளவாடி-24, சத்தியமங்கலம்-12, பவானிசாகர்-30, பவானி-29.40, கொடுமுடி-25, நம்பியூர்-2, சென்னிமலை-10, மொடக்குறிச்சி-29, கவுந்தப்பாடி-19.60, எலந்தகுட்டைமேடு-8.40, அம்மாபேட்டை-92, கொடிவேரி-23.2, குண்டேரிபள்ளம்-12.20, வரட்டுப்பள்ளம்-11.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 421.8 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    • ஈரோடு மாநகர பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக நீடித்தது.
    • தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மாநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர், பர்கூர் போன்ற மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் காலை முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென இரவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது.

    ஈரோடு மாநகர பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக நீடித்தது. தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மாநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சில இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இரவு 10 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னரும் மழை தூறி கொண்டே இருந்தது.

    இதனால் ஈரோடு பஸ் நிலையம், முனிசிபல் காலனி, பெருந்துறை ரோடு, பெரிய வலசு, வீரப்பன்சத்திரம், மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஈ.வி.என்.ரோடு, கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    பிச்சைக்காரன் பள்ளம் ஓடை பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதியில் உள்ள ஒரு தரைப்பாலம் மழை நீரில் மூழ்கியது. மேலும் ஈரோடு சத்யா நகரில் கீழ்த்தளத்திலுள்ள 50 வீடுகளில் நள்ளிரவில் மழை நீர் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இதனால் அந்த குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். பின்னர் அதிகாலை வீடுகளில் புகுந்த மழைநீர் வடிந்தது. மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் ஈரோடு மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட மடிக்காரர் காலனியில் வீதி 1, 2, 3, பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இந்த பகுதிகளில் உள்ள 25 வீடுகளில் மழை நீர் புகுந்தது.

    இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். கடந்த 3 மாதங்களில் இந்த பகுதிகளில் மட்டும் 5-வது முறையாக வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இந்த பகுதிகளில் மழை நீர் வெளியேற சாக்கடை வசதிகள் இல்லை. வீடுகளில் புகுந்த மழை நீரை அப்பகுதி மக்கள் வாளிகள் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

    இந்த பகுதிகளில் சிறிதளவு மழை பெய்தாலே மழைநீர் வெளியேற வழி இல்லாமல் வீடுகளில் புகுந்து விடுவதாக இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக அமைத்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை, பூதம்பாடி, குருவரெட்டியூர், சித்தார் போன்ற பகுதிகளில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இந்நிலையில் அம்மாபேட்டை காமராஜர் வீதியைச் சேர்ந்த சரசாள் (55) என்பவர் தனது மகள் ரத்னா (30) என்பவருடன் அதே பகுதியில் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. தாய்- மகள் இருவரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 9 மணி அளவில் திடீரென சரசாள் வீட்டை இடி தாக்கியது. இதில் வீடு முடிவதும் இடிந்து விழுந்தது.

    நல்ல வேளையாக இடி சத்தம் கேட்டவுடன் தூங்கிக் கொண்டிருந்த சரசாள் மற்றும் அவரது மகள் ரத்னா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. ஒருசில இடங்களில் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இந்த மழையின் காரணமாக கடும் குளிரும் நிலவியது.

    • ஈரோடு அடுத்த சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
    • ஈரோடு அடுத்த சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனால் சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல் பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், காலிங்கராயன்பாளையம், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம்

    மேட்டுப்பாளையம், நொச்சிப்பாளையம், தயிர்ப்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம்பாளையம், கே.ஆர்.பாளையம், ராசாம்பாளையம், தொட்டம் பட்டி, பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எஸ்.நகர், கே.ஆர்.குளம், காவிரி நகர், பாலாஜி நகர்

    மாணிக்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலவன் நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை, பெருந்துறை சந்தை, அணைக்கட்டு, பழையூர், பெரியார் நகர், எலவமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது/

    என ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • இதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு மாஸ் கிளினீங்(ஒருங்கிணைந்த தூய்மை பணி) நடந்தது.
    • இதை அடுத்து அந்த குடியிருப்பு வாசிகளுக்கு மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை 36-வது வார்டில் மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தின் பின்புறம் ஏராளமான மரங்கள், புற்கள் வளா்ந்து புதர் போல காட்சியளித்தது. மேலும், வணிக வளாகங்க–ளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசி வந்தது.

    இதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு மாஸ் கிளினீங்(ஒருங்கிணைந்த தூய்மை பணி) நடந்தது. சுகாதார ஆய்வாளர் பூபாலன் தலைமையில் சுகாதார உதவியாளர் தங்கராஜ் முன்னிலையில் 38 பேர் கொண்ட தூய்மை பணியாளர்கள் ஜே.சி.பி. வாகனம் மூலம் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

    இந்த பணிகளை மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவல–கத்தின் பின்புறம் உள்ள 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து சாக்கடையில் குப்பையையும், கழிவு பொருட்களையும் வீசியது தெரியவந்தது.

    இதை அடுத்து அந்த குடியிருப்பு வாசிகளுக்கு மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வணிக வளாகங்கள், குடியிருப்புகளில் முறையாக கழிவு நீர் வெளியேற பைப் லைன் அமைக்காவிட்டால், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இணைப்பு முற்றிலுமாக அடைக்கப்படும். ஓரிரு நாளில் அதற்கான கட்டமைப்பினை உருவாக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் சிறப்பு தூய்மை பணி முகாம் நடை பெற்றது.
    • லும் அவர்கள் பஸ்நிலைய தூண்களை சுத்தம் செய்யும் பணி களையும் மேற்கொ ண்டனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் சிறப்பு தூய்மை பணி முகாம் நடை பெற்றது. இதில் நகராட்சி ஆணை யாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகி த்தார். நகர மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் முகாமை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் 30 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பஸ் நிலைய மையப் பகுதியில் அமைந்துள்ள தோட்டத்தில் வளர்ந்துள்ள செடி, கொடி களை அகற்றி தூய்மை ப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

    மேலும் அவர்கள் பஸ்நிலைய தூண்களை சுத்தம் செய்யும் பணி களையும் மேற்கொ ண்டனர். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் பழனிச்சாமி, பூங்கொடி, தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் அருள் பிரசாத், அருள், காளியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியானது வாக்காளர் பட்டியலினை 100 சதவிகிதம் சரி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
    • காலை முதலே ஆர்வத்துடன் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியானது வாக்காளர் பட்டியலினை 100 சதவிகிதம் சரி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

    இப்பணியினை விரைந்து முடிக்கவும் பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் தொடங்கியது. ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் வாக்கு–சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டு–ள்ளார்.

    அவரிடம் பொதுமக்கள் சென்று 6-பி படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர்.காலை முதலே ஆர்வத்துடன் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

    • அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.
    • அணைக்கு வினாடிக்கு 3,750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    தொடர்ந்து ஒரு மாதமாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடித்து வருகிறது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 3,750 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • வரும் 8-ந் தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
    • இதில் அமைச்சர்கள் சேகர் பாபு, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 800 ஆண்டுகள் பழமையான வன்னி மரம், நடராஜர் , 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர் சந்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி தேரோட்டம். குரு பெயர்ச்சி விழா, 63 நாயன்மார்கள் குருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.

    இதில் விமான கோபுரங்களுக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசும் பணி, தரைத்தளம் செட் பணியிடுதல், ஆகம விதிப்படி கருவறை சிற்பங்கள், சிலைகள் மாற்றம் செய்யாமல் புதுப்பிக்கும் பணி, கொடி மரத்திற்கு தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தும் பணி, கோபுர கலசத்திற்கு தங்க முலாம்பூசும் பணிகள், அன்னதான கூடம், வாகன மடம், வசந்த மடம் போன்றவற்றை புரணமைக்கும் பணிகள் நடந்தது.

    இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வரும் 8-ந் தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கடந்த மாதம் 31ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் (பாலக்கால்) நடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாள் சிறப்பு பூஜைகள், கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை யொட்டி ஈஸ்வரன் கோவிலில் பிரம்மாண்ட யாக–சாலைகள் அமைக்கப்பட்டு ள்ளன.

    வருகிற 8-ந் தேதி காலை 10.35 மணி முதல் 11.35 மணிக்குள் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் சேகர் பாபு, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • கொலை நடந்த இடத்துக்கு ஈரோட்டில் இருந்து துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.
    • போலீசார் கொலை செய்யப்பட்ட சுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலை ஓரங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கால்வாய் அமைக்க கம்பி கட்டும் வேலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்கள் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பழனியப்ப நகர் என்ற பகுதியில் தகர ஷெட் அமைத்து தங்கி உள்ளனர்.

    தினமும் இங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று வந்தனர். தற்போது இவர்கள் கோபிசெட்டிபாளையம்- அத்தாணி சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று இரவு வேலை முடிந்து தொழிலாளர்கள் தாங்கள் தங்கியுள்ள இடத்துக்கு திரும்பி வந்தனர். இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் மது குடித்துவிட்டு சீட்டு விளையாடினர்.

    அப்போது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள அயரோனிபுரம் பகுதியை சேர்ந்த சுஷின் (40), மருங்கூர் தாலுகா ராஜாவூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோருக்கும் இடையே நள்ளிரவு 2 மணி அளவில் சீட்டு விளையாடுவதில் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அருகில் கிடந்த கடப்பாரையால் சுஷினை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இது குறித்து கவுந்தப்பாடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ் (கவுந்தப்பாடி), சண்முகம் (கோபி செட்டிபாளையம்), துரை பாண்டி (கடத்தூர்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை நடந்த இடத்துக்கு ஈரோட்டில் இருந்து துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

    இதையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட சுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.

    • போலீஸ் சீருடையில் மது அருந்திவிட்டு ஒரு டீ கடையில் விழுந்து கிடந்துள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் நல்லசாமி (வயது 35). இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

    அப்போது அவர் போலீஸ் சீருடையில் மது அருந்திவிட்டு ஒரு டீ கடையில் விழுந்து கிடந்துள்ளார். அப்போது அங்கு நின்ற பொதுமக்கள் சிறுவல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அங்கு செல்வதற்குள் நல்லசாமி அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகி விட்டார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். போலீசார் ஒருவர் மது போதையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    ×