என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அம்மாபேட்டை பகுதியில் 4 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை கொட்டியது
    X

    வீட்டுக்குள் புகுந்த மழைநீரை வெளிவேற்றிய பெண்கள்.

    அம்மாபேட்டை பகுதியில் 4 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை கொட்டியது

    • அம்மாபேட்டை பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை நள்ளிரவு 12 மணி வரை 4 மணி நேரம் இடைவிடாமல் கொட்டியது.
    • ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 421.8 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. இரவு 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய கொட்டியது.

    பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், பவானி, கொடுமுடி, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    இந்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் விவசாய நிலங்களிலும் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    அம்மாபேட்டை பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை நள்ளிரவு 12 மணி வரை 4 மணி நேரம் இடைவிடாமல் கொட்டியது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக இங்கு 4 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    மற்ற இடங்களில் பெய்த மழை மி.மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-14, பெருந்துறை-40, கோபிசெட்டிபாளையம்-40, தாளவாடி-24, சத்தியமங்கலம்-12, பவானிசாகர்-30, பவானி-29.40, கொடுமுடி-25, நம்பியூர்-2, சென்னிமலை-10, மொடக்குறிச்சி-29, கவுந்தப்பாடி-19.60, எலந்தகுட்டைமேடு-8.40, அம்மாபேட்டை-92, கொடிவேரி-23.2, குண்டேரிபள்ளம்-12.20, வரட்டுப்பள்ளம்-11.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 421.8 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    Next Story
    ×