மினிலாரி கவிழ்ந்து 18 பேர் படுகாயம்

நிலை தடுமாறிய மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மினிலாரி கவிழ்ந்து 18 பேர் படுகாயம்
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அரியப்பம் பாளையம் நோக்கி மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 18 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு மினிலாரி நேற்று இரவு புறப்பட்டது.

அப்போது சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ஜெயசக்தி மேடு என்ற பகுதியில் சென்ற போது ஒரு வளைவில் திரும்ப டிரைவர் திடீர் பிரேக் போட்டார்.

இதில் நிலை தடுமாறிய மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் மினி லாரியில் இருந்த 18 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுப்பற்றி தெரியவந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com