என் மலர்tooltip icon

    ஈரோடு

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
    • பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த மாதம் 5-ந்தேதி 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    நேற்று 2 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பங்களாப்புதூர் போலீசார் அண்ணாதுரையிடம் இருந்து 24 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் மதுபானம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நேற்று பங்களாப்புதூர் போலீசார் கள்ளிப்பட்டி தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (37) என்பவர், சாக்கு பையில் மது பாட்டில்களை கொண்டு வந்து,தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை அருகே விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    பங்களாப்புதூர் போலீசார் அண்ணாதுரையிடம் இருந்து 24 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத வகையில் சண்முகம் மீது மோதியது.
    • அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள ஆரியகவுண்டனூர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (45). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா. சண்முகம் தற்போது தனது மாமியார் ஊரான செல்லிகவுண்டனூரில் வசித்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் சண்முகம் வேலை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் அந்தியூர் ரோட்டில் குறிச்சி பிரிவு என்ற பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத வகையில் சண்முகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும்இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    • மத்திய அரசு மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்த பட்ச ஆதார விலை அடிப படையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • கொள்முதல் செய்யும் இடங்களை தேர்வு செய்தல் பருவ கால பணியாளர்க ளுக்கு பயிற்சி அளித்தல், காவலாளிகள் நியமனம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

    கோபி:

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை மற்றும் பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கொடிவேரி அணை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதையொட்டி நெல் நடவு செய்து களையெடுப்பு முடிந்து தற்போது நெல் அறுவடைக்கு தயார் நிலை யில் உள்ளது. மத்திய அரசு மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்த பட்ச ஆதார விலை அடிப படையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் மத்திய அரசு 2022-23-ம் ஆண்டுக் கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்துள்ளது. அதன்படி மோட்ட ரகத்துக்கு ரூ.20.40-ம், சன்னரகத்துக்கு ரூ.20.60-ம், நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.1 அதிகமாகும்.

    இந்த நிலையில் மோட்ட ரகத்துக்கு ரூ.1-ம், சன்னரகத்துக்கு 75 பைசாவும் ஊக்க தொகை வழங்க தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் மோட்ட ரகத்துக்கு ரூ.21.15-ம், சன்ன ரகத்துக்கு ரூ.21.60-ம் விவ சாயிகளுக்கு கொள்முதல் விலை கிடைக்கும்.

    விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரும் நெல் பதர் நீக்குதல், எடை போடுதல், முத்திரையிட்டு தையல் இடுதல், அட்டியிடுதல், லாரியில் ஏற்றுதல் மற்றும் கோணி சாக்கு, மின்சார கட்டணம், பில்யிடுதல், கொள்முதல் தொகையினை வங்கி வழி விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்தல், மேலாண்மை பாதுகாப்பு காவலர் என செலவினங்க ளுக்காக 40 கிலோ சிப்பத்தி ற்கு சுமார் 20 ரூபாய் அரசு கொடுக்கிறது.

    எனவே இந்த தொகைக்கு மேல் 40 கிலோ சிப்பம் ஒன்றுக்கு விவசாயிகளிடம் அதிக தொகையினை பெறுவதில்லை என்பதை முகவரான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் அட்டியிடுதலுக்கான மரக்கட்டைகள், தார்ப்பாய்கள் தரமான கோணி சாக்குகள், பழுது இல்லாத பதர் நீக்கும் எந்திரம், லாரிகள் ஆகிய வற்றை உடனடியாக தயார் நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

    கொள்முதல் செய்யும் இடங்களை தேர்வு செய்தல் பருவ கால பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், காவலாளிகள் நியமனம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

    மேலும் வருகின்ற 8-ந் தேதி முதல் கொடிவேரி அணை பாசன பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்திட ஈரோடு மாவட்ட மண்டல மேலாளர் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    • 21,807 தடுப்பூசி பேர் செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு, செப்.5-

    ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டன.

    இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்ப–ட்டது.

    நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 858 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 8ஆயிரத்து 948 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 12 ஆயிரத்து 1 பேரும் என மொத்தம் 21,807 தடுப்பூசி பேர் செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த சில மாதங்களாக பருத்தி மூட்டைகள் வரத்து அதிக அளவில் இருந்தது.
    • இந்த வாரம் ஆயிரம் மூட்டைகள் மட்டும் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம்அமைந்துள்ளது. இங்கு விவசாயிகளின் விளை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.

    இந்த நிலையில் அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்தி நகர், சங்கரா பாளை யம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளி மடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டு உள்ளனர்.

    இதையொட்டி வெள்ளிக்கிழமை முதல்திங்கட்கிழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் பருத்தி வைக்கப்பட்டு அதன் ஏலம் திங்கட்கிழமை காலை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெறும்.

    இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் எடுத்து வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக பருத்தி மூட்டைகள் வரத்து அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் பருத்தி விளைச்சல் குறைவானதை யொட்டி அந்தியூர் ஒழுங்கு முறை கூடத்துக்கு பருத்தி வரத்து குறைந்தது.

    இதையடுத்து இந்த வாரம் ஆயிரம் மூட்டைகள் மட்டும் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.

    • சம்பவத்தன்று ஜோதிநாதன் பாலப்பாளையம் ரைஸ் மில் வீதியில் உள்ள குப்புசாமி என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டுவதற்காக ஏறிக் கொண்டிருந்தார்.
    • இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பொம்மநாயக்க ன்பாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜோதிநாதன் (73).

    சம்பவத்தன்று ஜோதிநாதன் பாலப்பாளையம் ரைஸ் மில் வீதியில் உள்ள குப்புசாமி என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டுவதற்காக ஏறிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஜோதிநாதன் தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆம்புலன்சில் வந்த மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்த போது ஜோதிநாதன் இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கோபி செட்டிபாளையம் அடுத்த கொல்லுமேட்டு காலனி பகுதியில் சிலர் சூதாடுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அவர்களிடம் இருந்து ரூ.620 பறிமுதல் செய்யப்பட்டது.

    கோபி:

    கோபி செட்டிபாளையம் அடுத்த கொல்லுமேட்டு காலனி பகுதியில் சிலர் சூதாடுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் 6 பேர் சூதாடி கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள்அளுக்குளி பகுதியை சேர்ந்த சூர்யா, கார்த்திக், சதீஸ், லட்சுமணன் என தெரிய வந்தது.

    அவர்களிடம் இருந்து ரூ.620 பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் பணியாற்றி வந்த ஏ.கே., சரவணன் பதவி உயர்வு பெற்று இன்று காலை சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலராக அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் பணியாற்றி வந்த ஏ.கே., சரவணன் பதவி உயர்வு பெற்று இன்று காலை சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    பொறுப்பேற்றுக்கொண்ட செயல் அலுவலர் சரவணனுக்கு கோயில் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

    • அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் ரோட்டில் கவிழ்ந்தது.
    • சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனை களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள புது கொத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் உள்பட 27 பேர் ஒரு வேனில் தாண்டாம்பாளையம் கிராமத்திற்கு கறி விருந்துக்கு சென்றனர். வேனை சல்மான் என்பவர் ஓட்டி வந்தார்.

    தொடர்ந்து அவர்கள் விருந்தை முடித்துக்கொண்டு மீண்டும் வேனில் சத்திய மங்கலத்துக்கு வந்து கொண்டு இருந்தனர்.

    அவர்கள் சத்தியமங்கலம் அடுத்த தாண்டாம்பாளையம் டி.என்.ஆர். நகர் பகுதியில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் ரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் சில தொழிலா ளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். மேலும் இதில் கட்டிட பெண் தொழிலாளர்கள் கவிதா (30), ஜோதி (50) ஆகிய 2 பெண்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    மேலும் வேனில் வந்த கலைவாணி (38), முரளி (36), அம்ச வாணி (42), சுமதி (21), சேகர் (30), அமுதா (28), லட்சுமி (50), கார்த்தி (25), ரம்யா (28), கண்ணம்மாள் (60) செல்வி (30) பரமசிவன் (46) உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனை களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.

    • கடந்த ஒரு வாரமாக சுந்தர கிருஷ்ணன் மனகஷ்டத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வெட்டுக்காட்டுவலசு அடுத்த சைவ மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரகிருஷ்ணன்(43). இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுந்தரகிருஷ்ணன் தனது தம்பியுடன் சேர்ந்து தறிப்பட்டறை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சுந்தர கிருஷ்ணன் மனகஷ்டத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் அனைவரும் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டனர்.

    சுந்தரகிருஷ்ணன் தறி பட்டறைக்கு சென்று விட்டு பின்னர் விசேஷத்திற்கு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் விசேஷத்திற்கு வராததால் அவரது தம்பி தறிப்பட்டறைக்கு சென்று பார்த்தார்.

    அப்போது சுந்தரகிருஷ்ணன் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

    ஆனால் வரும் வழியிலேயே சுந்தரகிருஷ்ணன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • செங்கல் சூளைக்கு தேவையான முக்கிய முலப்பொருளான செம்மன் எடுக்க கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
    • செம்மன் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் அந்தியூர்-அத்தாணி பிரதான சாலையில் திடீரென மறியல் போராட்டம் செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதிக்கும், மற்ற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    செங்கல் சூளைக்கு தேவையான முக்கிய முலப்பொருளான செம்மன் எடுக்க கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் செங்கல் உற்பத்தி முடங்கியது. மேலும் தொழிலாளர்களும் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து செம்மன் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் அந்தியூர்-அத்தாணி பிரதான சாலையில் திடீரென மறியல் போராட்டம் செய்தனர்.

    இதன் காரணமாக ரோட்டின் இருபுறமும்வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, விஜயகுமார், மற்றும் வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர் விரைந்து வந்து மறியல் செய்த தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    ×