தறிப்பட்டறை உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை

கடந்த ஒரு வாரமாக சுந்தர கிருஷ்ணன் மனகஷ்டத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தறிப்பட்டறை உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு அடுத்த சைவ மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரகிருஷ்ணன்(43). இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுந்தரகிருஷ்ணன் தனது தம்பியுடன் சேர்ந்து தறிப்பட்டறை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சுந்தர கிருஷ்ணன் மனகஷ்டத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் அனைவரும் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டனர்.

சுந்தரகிருஷ்ணன் தறி பட்டறைக்கு சென்று விட்டு பின்னர் விசேஷத்திற்கு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் விசேஷத்திற்கு வராததால் அவரது தம்பி தறிப்பட்டறைக்கு சென்று பார்த்தார்.

அப்போது சுந்தரகிருஷ்ணன் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

ஆனால் வரும் வழியிலேயே சுந்தரகிருஷ்ணன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com