search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A direct government paddy procurement station"

    • மத்திய அரசு மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்த பட்ச ஆதார விலை அடிப படையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • கொள்முதல் செய்யும் இடங்களை தேர்வு செய்தல் பருவ கால பணியாளர்க ளுக்கு பயிற்சி அளித்தல், காவலாளிகள் நியமனம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

    கோபி:

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை மற்றும் பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கொடிவேரி அணை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதையொட்டி நெல் நடவு செய்து களையெடுப்பு முடிந்து தற்போது நெல் அறுவடைக்கு தயார் நிலை யில் உள்ளது. மத்திய அரசு மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்த பட்ச ஆதார விலை அடிப படையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் மத்திய அரசு 2022-23-ம் ஆண்டுக் கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்துள்ளது. அதன்படி மோட்ட ரகத்துக்கு ரூ.20.40-ம், சன்னரகத்துக்கு ரூ.20.60-ம், நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.1 அதிகமாகும்.

    இந்த நிலையில் மோட்ட ரகத்துக்கு ரூ.1-ம், சன்னரகத்துக்கு 75 பைசாவும் ஊக்க தொகை வழங்க தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் மோட்ட ரகத்துக்கு ரூ.21.15-ம், சன்ன ரகத்துக்கு ரூ.21.60-ம் விவ சாயிகளுக்கு கொள்முதல் விலை கிடைக்கும்.

    விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரும் நெல் பதர் நீக்குதல், எடை போடுதல், முத்திரையிட்டு தையல் இடுதல், அட்டியிடுதல், லாரியில் ஏற்றுதல் மற்றும் கோணி சாக்கு, மின்சார கட்டணம், பில்யிடுதல், கொள்முதல் தொகையினை வங்கி வழி விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்தல், மேலாண்மை பாதுகாப்பு காவலர் என செலவினங்க ளுக்காக 40 கிலோ சிப்பத்தி ற்கு சுமார் 20 ரூபாய் அரசு கொடுக்கிறது.

    எனவே இந்த தொகைக்கு மேல் 40 கிலோ சிப்பம் ஒன்றுக்கு விவசாயிகளிடம் அதிக தொகையினை பெறுவதில்லை என்பதை முகவரான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் அட்டியிடுதலுக்கான மரக்கட்டைகள், தார்ப்பாய்கள் தரமான கோணி சாக்குகள், பழுது இல்லாத பதர் நீக்கும் எந்திரம், லாரிகள் ஆகிய வற்றை உடனடியாக தயார் நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

    கொள்முதல் செய்யும் இடங்களை தேர்வு செய்தல் பருவ கால பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், காவலாளிகள் நியமனம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

    மேலும் வருகின்ற 8-ந் தேதி முதல் கொடிவேரி அணை பாசன பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்திட ஈரோடு மாவட்ட மண்டல மேலாளர் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×