என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோட்டில் வேன் கவிழ்ந்து"

    • அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் ரோட்டில் கவிழ்ந்தது.
    • சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனை களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள புது கொத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் உள்பட 27 பேர் ஒரு வேனில் தாண்டாம்பாளையம் கிராமத்திற்கு கறி விருந்துக்கு சென்றனர். வேனை சல்மான் என்பவர் ஓட்டி வந்தார்.

    தொடர்ந்து அவர்கள் விருந்தை முடித்துக்கொண்டு மீண்டும் வேனில் சத்திய மங்கலத்துக்கு வந்து கொண்டு இருந்தனர்.

    அவர்கள் சத்தியமங்கலம் அடுத்த தாண்டாம்பாளையம் டி.என்.ஆர். நகர் பகுதியில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் ரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் சில தொழிலா ளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். மேலும் இதில் கட்டிட பெண் தொழிலாளர்கள் கவிதா (30), ஜோதி (50) ஆகிய 2 பெண்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    மேலும் வேனில் வந்த கலைவாணி (38), முரளி (36), அம்ச வாணி (42), சுமதி (21), சேகர் (30), அமுதா (28), லட்சுமி (50), கார்த்தி (25), ரம்யா (28), கண்ணம்மாள் (60) செல்வி (30) பரமசிவன் (46) உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனை களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.

    ×