search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் 8-ந் தேதி நடக்கிறது
    X

    ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் 8-ந் தேதி நடக்கிறது

    • வரும் 8-ந் தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
    • இதில் அமைச்சர்கள் சேகர் பாபு, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 800 ஆண்டுகள் பழமையான வன்னி மரம், நடராஜர் , 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர் சந்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி தேரோட்டம். குரு பெயர்ச்சி விழா, 63 நாயன்மார்கள் குருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.

    இதில் விமான கோபுரங்களுக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசும் பணி, தரைத்தளம் செட் பணியிடுதல், ஆகம விதிப்படி கருவறை சிற்பங்கள், சிலைகள் மாற்றம் செய்யாமல் புதுப்பிக்கும் பணி, கொடி மரத்திற்கு தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தும் பணி, கோபுர கலசத்திற்கு தங்க முலாம்பூசும் பணிகள், அன்னதான கூடம், வாகன மடம், வசந்த மடம் போன்றவற்றை புரணமைக்கும் பணிகள் நடந்தது.

    இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வரும் 8-ந் தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கடந்த மாதம் 31ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் (பாலக்கால்) நடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாள் சிறப்பு பூஜைகள், கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை யொட்டி ஈஸ்வரன் கோவிலில் பிரம்மாண்ட யாக–சாலைகள் அமைக்கப்பட்டு ள்ளன.

    வருகிற 8-ந் தேதி காலை 10.35 மணி முதல் 11.35 மணிக்குள் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் சேகர் பாபு, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    Next Story
    ×