என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பெண்கள் மாவிளக்கு எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான குண்டம் திருவிழா நாளை காலை நடைபெறுகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி இரவு பூச்சாட்டு–தலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி ஆண்கள், பெண்கள் குண்டம்இறங்குவதற்காக மாலைஅணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

    தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. குண்டம் திருவிழாவை யொட்டி குண்டத்துக்கு தேவையான விறகுகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர்.

    விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) காலை பெண்கள் மாவிளக்கு எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    இதில் கோபிசெட்டிபாளையம், சவுண்டப்பூர், புதுபாளையம், நல்ல கவுண்டன்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்நத ஏராள மான பெண்கள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து இன்று மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு குண்டம் வளர்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி கோவில் முன்பு குண்டத்துக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய விறகுகள் குண்டத்தில் போட்டு தீ பற்ற வைத்து குண்டம் வளர்க்கப்படுகிறது. விடிய, விடிய குண்டம் சரி செய்ய ப்படுகிறது.

    இதையொட்டி பக்தர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பே வந்து வரிசையில் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

    இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான குண்டம் திருவிழா நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நடை பெறுகிறது.

    முன்னதாக 50 அடி குண்டத்தில் முதன்முதலாக தலைமை பூசாரி ஆனந்த் என்பவர் குண்டம் இறங்கி தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்குவார்கள்.

    மேலும் 13-ந் தேதி மாலை 4 மணி அளவில் தேர் திருவிழா நடை பெறுகிறது. 14-ந் தேதி மலர் பல்லக்கு நடைபெற உள்ளது.

    அன்று இரவு 11 மணி அளவில் மலர் பல்லக்கு பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு அம்மன் மலர் பல்லக்கில் கோபி பெரு மாள் கோவிலை வந்து அடைகிறது.

    அதைத் தொடர்ந்து 15-ந்தேதி கோபியில் தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற உள்ளது. 21-ந் தேதி சனிக்கிழமை மறுபூஜை விழா நடக்கிறது.

    விழாவையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு கனகேஸ்வரி தலை மையில் 2 டி.எஸ்.பிக்கள், 13 இன்ஸ்பெக்டர் கள், 93 சப்-இன்ஸ்பெக்டர்கள், 532 போலீசார், 80 ஊர்க்காவல் படை வீரர்கள் என 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகிறார்கள்.

    • எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    ஈரோடு:

    அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 4 நாட்கள் பிறந்த நாள் பொது விழா பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், கழக அமைப்பு செயல்பட்டு கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.

    பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் இணைக்கப்ப ட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்களில் பேசுபவர் விவரம் வருமாறு:

    ஈரோடு மேற்கு தொகுதியில் 19-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், நடிகர் காதல் சுகுமார், கோவை பலகுரல் தாமு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    பவானி தொகுதியில் 20-ந் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ, திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான சி.ஆர். சி.ரங்கநாதன், பி.ஏ. சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 20-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., நடிகர் வையாபுரி, குன்னூர் ஆர். விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    அந்தியூர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஸ்வரி, கோவை அழகு, திருப்பூர் டி.ஏ.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 21-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.வும், தேர்தல் பிரிவு துணைச் செயலா ளருமான இன்பத்துரை, குன்னூர் ஆர். விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 22-ந் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான திருப்பூர் சிவசாமி, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயரும், மகளிர் அணி மாவட்ட செயலாளருமான மல்லிகா பரமசிவம், சிட்கோ சீனு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    பெருந்துறை பகுதியில் 22-ந் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கருப்பணன் எம். எல். ஏ, ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜே.கே. என்கிற எஸ்.ஜெயக்குமார், புதூர் மணி, என். கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 22-ந் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பண்ணாரி, சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், முன்னாள் எம்.எல்.ஏ. பூவை செழியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.41 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 812 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.41 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 812 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு இதுவரை 1,700 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று முதல் 200 கன அடி வீதம் தண்ணீர் குறைந்து 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 900 கன அடி, பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 2,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    • பெருந்துறை சிப்காட்டில் தொழிலாளர்கள் கியாஸ் நிரப்பி கொண்டிருந்தனர்.
    • அப்போது சரவணன் முகம் மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வர் ராஜு. இவரது மகன் சரவணன் (வயது 22). இவர் பெருந்துறை, கோவை மெயின் ரோடு, சின்ன மடத்துப்பாளையம் பகுதியில் தங்கி இருந்தார்.

    பி.காம். பட்டதாரியான இவர் கடந்த 1½ வருடங்க ளாக பெருந்துறை சிப்காட்டில் உள்ள இந்தியன் ஆயில் கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் நிரப்பும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் பெருந்துறை சிப்காட்டில் தொழிலாளர்கள் கியாஸ் நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது.

    இதையடுத்து அருகே இருந்த அவரது உறவினர் அருள் மற்றும் சக தொழிலாளிகள் ஜெகன், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது சரவணன் அங்கு முகம் மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு கார் மூலம் பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சரவ ணனை பரிசோதனை செய்தனர். இதில் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடு த்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் சரவணன் 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் நிரப்பி கொண்டு இருந்தபோது சிலிண்டரின் அடிப்பாகம் கழன்று அழுத்தம் ஏற்பட்டு சிலிண்டர் சரவணனின் நெஞ்சு மற்றும் உடல் பகுதியில் அடித்து அவரை தூக்கி வீசியதும். இதில் படுகாயம் அடைந்து இறந்த தும் தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பவானி அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பொதுமக்களுக்கும், நோயாள பயனாளிகளுக்கும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.

    பவானி:

    பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவின் மூலம் 6-வது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

    தேசிய சித்த மருத்துவ தினத்தின் இந்த ஆண்டு கருத்துரு, ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் என்ற அடிப்படையில் பாரம்பரிய சிறு தானியங்கள் மூலம் செய்யப்பட்ட நிலக்கடலை உருண்டை, எள் உருண்டை, பாசிப்பயறு உருண்டை, சிறு தானிய பிஸ்கெட்டுகள், சாமை அவுல், தினை அவுல், வரகு அவுல், கம்பு வெல்ல உருண்டை, நெல்லித்தேனூறல், இஞ்சித்தேனூறல், மூலிகை பாணம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு அதன் பயன்கள் பற்றி சித்த மருத்துவர் கண்ணுச்சாமி எடுத்துரைத்தார்.

    அதேபோல் மூலிகைக் கண்காட்சி, உணவே மருந்தாகும் கடைச்சரக்குகள் கண்காட்சி, புத்தக கண்காட்சி, நஞ்சில்லா உணவுகள் கண்காட்சி ஆகியன மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு அதன் பயன்கள் கூறப்பட்டது.

    விழாவின் முடிவில் பொதுமக்களுக்கும், நோயாள பயனாளி களுக்கும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.

    • ரயான் நூல், துணி விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளதால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
    • இதனால் கேரளா சேலை உற்பத்திக்கு மாற விசைத்தறி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ரயான் துணிகள் உற்பத்தியும், அதை மதிப்பு கூட்டிய துணிகளாக மாற்றி விற்பனை செய்வதும் அதிகம்.

    அடுத்தபடியாக காட்டன் பாலீஸ்டர் துணிகளை உற்பத்தி செய்கின்றனர்.சமீப காலமாக இத்துணி களை டையிங், பிளீச்சிங், பிராசசிங், பிரிண்டிங் செய்து முழுமையான ஆடையாக மாற்ற தேவையான அளவு பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதனால் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி இப்பணிகளை செய்ய வேண்டி உள்ளது.

    இதனால் செலவு அதிகரிப்பதுடன் ரயான் நூல், துணி விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் உள்ளதால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். இதனால் கேரளா சேலை உற்பத்திக்கு மாற விசைத்தறி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:

    ஈரோடு, நாமக்கல் மாவட்ட பார்டர் பகுதியில் முழு அளவில் ரயான் துணிகள் உற்பத்தி ஆகி வந்தது. அவற்றை மதிப்பு கூட்ட செய்யும் சாய, சலவை, பிரிண்டிங், கேலண்டரிங் உள்ளிட்ட பணிகளுக்கான வசதி இங்கு குறைவு.

    வெளிமாநி லங்களுக்கு அனுப்பி திரும்ப பெற செலவு அதிகமாகிறது.எனவே கேரளா சேலை உற்பத்திக்கு விசைத்தறி–யாளர்கள் மாறி வருகின்றனர்.

    குறிப்பாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம், ஆவத்திபாளையம் தார்காடு, வெளியரசம் பாளையம், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளா சேலை உற்பத்திக்கு விசைத்தறி–யாளர்கள் மாறி வருகின்ற–னர்.

    ரயான்நூல், உற்பத்தி கூலி, ரயான் துணிகளை மதிப்பு கூட்டிய பொருளாக்க ஆகும் செலவை விட கேரளா சேலைகளுக்கு ரூ.50 முதல் ரூ.100 ரூபாய்க்கு மேல் குறைவு.

    5 அல்லது 5.5 மீட்டர் கேரளா சேலைக்கு ஜருகை பார்டர் துணி 10 ரூபாய்க்குள் வாங்கலாம்.

    ஒரு மீட்டர் உற்பத்திக்கு 40 ரூபாய் என 5 மீட்டருக்கு 200 ரூபாய்க்குள் அடக்க–லாம். 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்தால் 50 முதல் 100 ரூபாய் லாபம் நிற்கும். இதை மொத்தமாக செய்யும் போது வியாபாரிகளுக்கு சற்று குறைந்த விலையில் வழங்கலாம்.

    இவற்றுக்கு சாய பிரிண்டிங் பணிகள் குறைவு. கிரே துணியாக ஒட்டி டை பயன்படுத்தாமல் தேவையான நிற ஜருகை பார்டரை இணைத்து விற்கலாம்.

    தவிர பிற துணிகளை விட கேரளா சேலைகளுக்கு தற்போது ஆர்டர் அதிகம் வருவதால் அதனை உற்பத்தி செய்ய விசைத்தறியாளர்கள் விரும்புகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகம் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்துள்ளார்.
    • வீட்டின் பின்பகுதியில் திடீரென அவர் வாந்தி எடுத்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை கரண்டிபாளையம், பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், அரவிந்த் என்ற மகனும், ஹேமப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

    மகன் அரவிந்த் திருமணமாகி கவுந்தப்பாடியில் உள்ள மாமனார் வீட்டில் உள்ளார். மகள் ஹேமப்பிரியா திருமணம் ஆகாமல் ஆறுமுகத்துடன் குடியிருந்து வருகிறார். ஆறுமுகமும் அவரது மனைவியும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    ஆறுமுகம் கரண்டி பாளையம் பகுதியில் உள்ள ஒருவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட வருடங்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    தினமும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து குடும்பத்தாருடன் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகம் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டின் பின்பகுதியில் திடீரென அவர் வாந்தி எடுத்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    உடனடியாக அவரது மனைவியும், மகளும் அவரை சென்று பார்த்த போது அங்கு செடிகளுக்கு அடிக்கும் பூச்சி மருந்தின் வாடை அடித்துள்ளது.

    மேலும் அவரது அருகில் பூச்சி மருந்து (விஷம்) பாட்டில் ஒன்று கிடந்தது. மயங்கி இருந்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆறுமுகம் இறந்து விட்டதாக ெதரிவித்தனர்.

    பின்னர் செல்லம்மாள் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர–மணியம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஈரோடு மாவட்டத்திலும் இன்று 37 தியேட்டர்களில் அஜித்-விஜய் நடித்த துணிவு-வாரிசு படம் இன்று அதிகாலை ரிலீஸ் ஆனது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் , அஜித். 2 பேருக்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

    இவர்கள் நடித்த படம் ரிலீஸ் ஆகும் போது தியேட்டர்களில் ரசிகர்கள் விழாக்கோலம் பூண்டு படத்தை வரவேற்பார்கள்.

    இந்நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்-அஜித் நடித்த வாரிசு, துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. இதனால் தியேட்டர்களில் இன்று ரசிகர்கள் அதிகாலை முதல் குவிந்தனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் இன்று அஜித்-விஜய் நடித்த துணிவு-வாரிசு படம் இன்று அதிகாலை ரிலீஸ் ஆனது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 37 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனது. ஈரோடு மாநகர பகுதியில் 11 தியேட்டர்களும் இதில் அடங்கும்.

    அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் தீ பிடிக்கக்கூடிய வெடி பொருட்கள் எதையும் எடுத்து வரக்கூ டாது. குடிபோதையில் திரைப் படம் பார்க்க வரக்கூடாது. மேடையில் ஏறி ஆடக்கூடாது.

    நாற்காலி மற்றும் திரை துணி ஆகியவை சேதம் ஏற்பட்டால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்களே உரிய இழப்பீடு தர வேண்டும். பொதுமக்கள் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது.

    திரைப்படம் பார்க்க வரும் பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது. ரசிகர் மன்ற காட்சி திரையிடும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் பொறுப்பு. ட்ரம் செட், பேண்ட் ஆகியவை கொண்டு வரக்கூடாது என பல கட்டுப்பாடுகளை போலீசார் விதித்திருந்தனர்.

    ஈரோட்டில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இதனால் இன்று அதிகாலை முதலே தியேட்டர் முன்பு ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள்.

    விஜய், அஜித் படங்களை கையில் வைத்துக்கொண்டு நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர்.

    மேலும் பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். சில ரசிகர்கள் அஜித் -விஜய் பட டீ சர்ட் அணிந்து வந்திருந்தனர். சில ரசிகர்கள் உற்சாகமாக கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்-அஜித் படங்கள் ஒன்றாக தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளதால் தியேட்ட ர்களில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் சிலர் கட்டுசேவல் வளர்ப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.
    • சேவல்களுக்கு சண்டை விடப்பட்டு வியாபாரிகள் சேவல்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    கவுந்தப்பாடி:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் விற்பனை களை கட்டி உள்ளது.

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பஸ் நிலையம் பகுதியில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வளர்க்கப்படும் கட்டுசேவல்கள், நாட்டு சேவல், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    இந்த கோழிகளை வாங்க ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள், வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள்.

    இந்த சந்தையில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை 3 மணி நேரம் மட்டுமே இந்த கட்டு சேவல் சந்தை நடைபெறும். சுமாராக வாரந்தோறும் ரூ.10 லட்சம் அளவுக்கு கட்டு சேவல் விற்பனை நடைபெறும். ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 வாரமாகவே சேவல் விற்பனை அதிகரித்தது.

    ஈரோடு மாவட்டத்தில் வல்லூறு, பூதி, கீரி, காகம், மயில், செங்கருப்பு, பொறிவெள்ளை, வெள்ளை உள்ளிட்ட ஏராளமான கட்டுசேவல்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். சுமார் 8 மாதம் முதல் 10 மாதம் வரை நன்கு பராமரித்து விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    நேற்று இரவு முதல் சந்தைக்கு கட்டுசேவல்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டது. இதேபோல் சேவல் சண்டை பிரியர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, மங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர்.

    அவர்கள் கட்டுசேவல்களை சண்டைவிட்டு பார்த்து தேர்வு செய்தனர். இன்று ஒரு கட்டுசேவல் குறைந்தது ரூ.4 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் விற்பனை ஆனது. ஆந்திரா, கர்நாடக வியாபாரிகள் கட்டுசேவல்களை அதிகளவில் வாங்கி பெரிய மூங்கில் கூடைகளில் போட்டு தண்ணீர் நனைத்த சாக்கு பையால் மூடி அவற்றை ரெயில் மூலம் கொண்டு சென்றனர்.

    இதேபோல் பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான வாலிபர்களும் கட்டுசேவல்கள் வாங்க அதிகாலையில் இருந்தே திரண்டு இருந்தனர். இதனால் சந்தையில் இன்று கூட்டம் அலைமோதியது.

    ஈரோடு மாவட்டத்தில் சிலர் கட்டுசேவல் வளர்ப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். கருவாடு, கொண்டைக்கடலை, கம்பு, சோளம், பொட்டுக்கடலை மற்றும் சத்தான தீவணங்களை போட்டு நன்கு பராமரித்து வளர்த்து வருகின்றனர். இதனால் மற்ற இடங்களை விட இந்த கவுந்தப்பாடி சந்தையில் கட்டுசேவல்கள் தரமானதாக இருக்கும். எனவே இவற்றை வாங்க பல்வேறு இடங்களில் இருந்தும் வியாபாரிகள், கட்டுசேவல் பிரியர்கள் வருவார்கள்.

    தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் இன்று சந்தைக்கு அதிகளவில் கட்டுசேவல்கள் கொண்டு வரப்பட்டது. சேவல்களுக்கு சண்டை விடப்பட்டு வியாபாரிகள் சேவல்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி, அந்தியூர், ஆப்பக்கூடல், பி.மேட்டுப்பாளையம், சிறுவலூர் ஆகிய பகுதிகளில் தை மாதம் பிறந்த முதல் நாளில் இருந்தே சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். எனவே ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இன்று அதிகளவில் கட்டுசேவல்களை வாங்கி சென்றனர்.

    இன்று நடந்த சந்தையில் காலை 6 மணி முதல் 9 மணி வரை சுமார் 3 மணி நேரத்தில் ரூ.50 லட்சத்துக்கு கட்டுசேவல்கள் விற்பனையாகி உள்ளது. அதோடு இல்லாமல் நாட்டு கோழிகளும் அதிகளவில் விற்பனையாகி உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சசிந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வி.வி.சி.ஆர். நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் சசிந்திரன் (24). இவர் திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு ள்ளது.

    இதனால் சசிந்திரன் மனைவி அடிக்கடி கோபித்து கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்று விடுவார். இந்நிலையில் சசிந்திரனின் குடிப்பழக்கத்தை காரணம் காட்டி அவருடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    ஏற்கனவே மனைவி, குழந்தைகளை பிரிந்த சோகத்தில் இருந்த சசிந்திரன் விவாகரத்து நோட்டீசால் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் விரக்தியில் இருந்த சசிந்திரன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொங்கல் பண்டிகை, அடுத்த மாதம் தைப்பூசம் வர உள்ளதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
    • சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 45 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள மாநக ராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய் கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பொங்கல் வியா பாரம் தொடங்கப்பட்டது.

    ஆனால் வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். பொங்கல் பண்டிகை, அடுத்த மாதம் தைப்பூசம் வர உள்ளதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.

    ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்த னர்.

    இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    இன்று சேலம், செஞ்சி, ஆரணி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

    கம்பளி, பெட்சீட் குழந்தை களுக்கான ஆடைகள், காட்டன் துணிகள் அதிக அளவில் விற்பனையானது. சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 45 சதவீதம் நடைபெற்றது. இதேபோல் மொத்த விற்பனை 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது அய்யப்பன் சீசன், தைப்பூசம் வர உள்ளது. இதனால் காவி துண்டு, காவி வேஷ்டி, காவி சேலை விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    வேஷ்டிகள் ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகி–றது. அதேபோல் துண்டுகள் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் இன்று ஈரோடு ஜவுளி சந்தை, மணி கூண்டு பகுதிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    • அந்தியூரில் புகழ்பெற்ற வெற்றிலையை சேமித்து வைத்து விற்பனை செய்யும் வகையில் குளிர் பதன கிடங்கை அமைத்து தர வேண்டும்.
    • தோனி மடுவு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக அதற்குண்டான ஆய்வு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி நிறுவனர் முனுசாமி இல்லத்தில் விவசாயிகளை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் மிக அதிக அளவு பயரிடப்படுகின்றன, குறிப்பாக அந்தியூரில் புகழ்பெற்ற வெற்றிலையை சேமித்து வைத்து விற்பனை செய்யும் வகையில் குளிர் பதன கிடங்கை உடனடியாக அமைத்து தர வேண்டும்.

    அந்தியூரில் கிராமங்கள் பயன்பெறும் வகையில் தோனி மடுவு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக அதற்குண்டான ஆய்வு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதனை விரைவு படுத்தி கட்டுமான பணிகளை தொடங்கப்படு–மேயானால் சுமார் 30,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.

    எனவே தோனிமடுவு திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டவர்,

    பர்கூர் கால்நடை ஆராய்ச்சி மையம் தற்போது செயல்பாடு இல்லாமல் உள்ளது. அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    இதில் கொங்குதேச மறுமலர்ச்சி கட்சியின் நிறுவனர் முனுசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×