என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "should be set up to"

    • அந்தியூரில் புகழ்பெற்ற வெற்றிலையை சேமித்து வைத்து விற்பனை செய்யும் வகையில் குளிர் பதன கிடங்கை அமைத்து தர வேண்டும்.
    • தோனி மடுவு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக அதற்குண்டான ஆய்வு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி நிறுவனர் முனுசாமி இல்லத்தில் விவசாயிகளை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் மிக அதிக அளவு பயரிடப்படுகின்றன, குறிப்பாக அந்தியூரில் புகழ்பெற்ற வெற்றிலையை சேமித்து வைத்து விற்பனை செய்யும் வகையில் குளிர் பதன கிடங்கை உடனடியாக அமைத்து தர வேண்டும்.

    அந்தியூரில் கிராமங்கள் பயன்பெறும் வகையில் தோனி மடுவு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக அதற்குண்டான ஆய்வு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதனை விரைவு படுத்தி கட்டுமான பணிகளை தொடங்கப்படு–மேயானால் சுமார் 30,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.

    எனவே தோனிமடுவு திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டவர்,

    பர்கூர் கால்நடை ஆராய்ச்சி மையம் தற்போது செயல்பாடு இல்லாமல் உள்ளது. அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    இதில் கொங்குதேச மறுமலர்ச்சி கட்சியின் நிறுவனர் முனுசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×