என் மலர்
ஈரோடு
- மேம்பாட்டு பணியினையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- பஸ்கள் குறித்தும் கேட்டறிந்து கட்டுமான பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஈரோடு:
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினையும் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணியினையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை யினை பார்வையிட்டு, அம்மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு நாள் தோறும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு மேற்கொ ள்ளப்பட்டு வரும் சிகிச்சைமுறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறி ந்தார்.
மேலும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.64.00 கோடி மதிப்பீட்டில் 2,32,602 ச.அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினை பார்வை யிட்டு, கட்டிடத்தினை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.43 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகியவற்றை பார்வையிட்டு, பஸ் நிலையத்தில் நடை பாதை மற்றும் இருக்கைகள் ஆகியவற்றை அமைத்து பயணாளிகள் எந்தஒரு இடையூறும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதிகள் செய்து தர அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக ஈரோடு மாநகராட்சி சம்பத் நகர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையினை பார்வையிட்டு, கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் மற்றும் பொருட்கள் சுத்தமாக உள்ளதா என்றும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்து, பதிவேடுகளில் உள்ள அளவுகளின் படி அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மூட்டைகள் சரியாக உள்ளதா? என்பது குறித்தும், பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி சோலாரில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகிய வற்றை பார்வையிட்டார். மேலும் இப்பஸ் நிலை யத்தின் மார்க்கமாக இயக்கப்பட உள்ள பஸ்கள் குறி த்தும் கேட்டறிந்து கட்டுமான பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் இளஞ்செழியன், இணை இயக்குநர் (குடும்பநலன்) ராஜசேகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு) சண்முகவடிவு (மாநகராட்சி) உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- பூனை திடீரென தவறி கிணற்று க்குள் விழுந்து விட்டது.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு கட்டி கிணற்றில் இறங்கி பூனையை உயிருடன் மீட்டனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடி பாளையத்தை சேர்ந்தவர் வெங்க டேஷ்ராஜ். இவரது தோட்டத்து கிணற்றில் சுமார் 40 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் அந்த கிணற்றின் அருகே ஒரு பூனை சுற்றி கொண்டு இருந்தது. அந்த பூனை திடீரென தவறி கிணற்று க்குள் விழுந்து விட்டது.
இதை தொடர்ந்து கிணற்றின் மேலே வரமுடியாமல் சத்தம் போட்டு கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அந்த கிணற்றுக்குள் பூனை விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு கட்டி கிணற்றில் இறங்கி பூனையை உயிருடன் மீட்டனர்.
- தொழிலாளர் வைப்புநிதி குறித்த விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
- நிறுவனங்களும் தங்களுடைய வைப்புநிதி தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மண்டல தொழி லாளர் வைப்புநிதி ஆணை யாளர் வீரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் உள்ள சக்தி சர்க்கரை ஆலை கலையரங்கத்தில் நாளை (29-ந் தேதி) தொழிலாளர் வைப்புநிதி குறித்த விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
காலை 9.30 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை இந்த கூட்டத்தில் தொழிலாளர் வைப்பு நிதி சந்தாதாரர்களும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தொழில திபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களும் தங்களுடைய வைப்புநிதி தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தீடீர் சோதனை செய்தார்.
- 3 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி, ஸ்வீட்ஸ், பப்ஸ் தயாரிப்பு கடைகளில் பிளாஸ்டிக் மூலம் தயாரி க்கப்பட்ட முட்டைகளால் பப்ஸ் வகைகள் தயாரி க்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தீடீர் சோதனை செய்தார்.
ஆய்வில் பப்ஸ் வகை களை உரிய முறையில் தயாரி க்காமல் முட்டை வெளியே தெரியும்படி மைதா மாவில் தயாரிக்க ப்படும் பப்ஸ் வகைகளை தொடர்ந்து ஓவனில் வைத்து சூடேற்றும் பொழுது முட்டையின் வெள்ளை கருவானது தொடர்ந்து சூடேறி பிளாஸ்டிக் போன்று கெட்டியாகி விடுகிறது.
அவ்வாறு தயாரிக்காமல் உரிய முறையில் உணவு பாதுகாப்பு விதிகளின்படி உரிய முறையில் முட்டை முழுவதுமாக மூடி உள்ளவாறு தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.மேலும் பப்ஸ் வகைகள் மற்றும் எண்ணெய் பல காரங்களை பேப்பரில் வைத்து பொதுமக்களுக்கு உண்ண கொடுத்ததற்காக 3 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பாலித்தீன் கவர்களில் சூடான டீயை பார்சல் செய்து கொடுக்க கூடாது எனவும், அலுமி னியம் பாயில் கவரில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
இதனை மீறி தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள், கேரி பேக்குகளை பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கடை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இது சம்பந்தமான புகார்களை 9444042323 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
- கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் ரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கோபி:
அ.தி.மு.க. சார்பில் தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (29-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் ரோட்டில் உள்ள ஜியான் தியேட்டர் முன்பு நாளை (29-ந் தேதி) காலை 9 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் நடக்கிறது. இதில் பவானி சாகர் தொகுதி பண்ணாரி எம்.எல்.ஏ மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- திம்பம் மலைப்பகுதியில் சிறப்பு இலக்கு படை முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குய்யனூர் வனப்பகுதியில் ஏற்கனவே அதிரடிப்படை முகாம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பகுதியில் 2-வதாக சிறப்பு இலக்கு படை (அதிரடிப்படை) முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அதிரடி ப்படை முகாமை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து இன்று காலை திம்பம் அதிரடி ப்படை முகாம் அலுவல கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு இலக்கு படை காவல்துறை தலைவர் முருகன், இலக்கு படை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இலக்கு படை சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இலக்கு படை போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
திம்பம் சிறப்பு இலக்கு படையில் இலக்கு படை இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் தலைமையில் 30 பேர் கொண்ட போலீசார் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் திம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டு உடல் மிதப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
- இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
பவானி அருகே உள்ள ஒலகடம், எட்டிக்குட்டை பாலக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (57). இவர் பி.எஸ்.என்.எல். டி.டி.ஆக பணியாற்றி தற்போது விருப்ப ஓய்வு பெற்று மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ரங்கசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் அந்த தொழிலில் மிகுந்த நஷ்டம் காரணமாக கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது மனைவியிடம் வெளியே சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றார். பின்னர் இரவு வரை ரங்கசாமி வீட்டிற்கு வராததால் அவரை உறவினர்கள் மற்றும் மகன் சந்தோஷ் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது குட்ட முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சந்தோசுக்கு போன் செய்து ரங்கசாமி தந்தை பவானி அருகில் உள்ள ஜீவா நகரையொட்டி காவிரி ஆற்றில் உடைகளை ஒரு பாறையில் வைத்து விட்டு தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டு உடல் மிதப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சந்தோஷ் பவானி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவயிடம் சென்று காவிரி ஆற்றில் பிணமாக மிதந்த ரங்கசாமி உடலை மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது.
- பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம், ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் கடந்த 25-ந் தேதி தொடங்கி வரும் 31-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.
அதன்படி கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, ஈரோடு மற்றும் நம்பியூர் ஆகிய வட்டங்களில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 29-ந் தேதி வரையிலும், தாளவாடி வட்டத்தில் 25-ந் தேதி அன்றும், அந்தியூர் வட்டத்தில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 30-ந் தேதி வரையிலும், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 31-ந் தேதி வரையிலும் (சனி, ஞாயிறு நாட்கள் நீங்கலாக) அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
அதனால் வரும் 29-ந் தேதி (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- அறையில் தினேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஜரத்தல் அடுத்த மேற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (55). கருத்து வேறுபாடு கார ணமாக மனைவியை பிரிந்து மகன் தினேஷ்குமா ருடன் (24) வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு தினேஷ்குமார் வீட்டுக்கு வந்து அவரது அறையில் தூங்க சென்றார். கணேசன் அருகில் உள்ள தாய் வீட்டில் தூங்க சென்றார்.
பின்னர் காலை எழுந்த கணேசன் தனது வீட்டிற்கு வந்தார். வீட்டு கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டினார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த கணேசன் அக்கம் பக்கத்தி னர் உதவியு டன் கடப்பாறை யால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் தினேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராம கிருஷ்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (77). இவர் தனது மகள் புஷ்பலதா வீட்டில் வசித்து வந்தார். ராமகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு வயிற்று வலி இருந்து உள்ளது.
வயிற்று வலிக்காக ராமகிருஷ்ணன் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கடந்த ஒரு வாரமாக வயிற்று வலி அதிகமாக இருப்பதாக ராமகிருஷ்ணன் கூறி வந்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து அவர் குடித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு சாப்பிட்டு முடித்ததும் வீட்டில் உள்ள அறையில் ராமகிருஷ்ணன் தூங்க சென்றார். அவரது மகள் புஷ்பலதா மற்றொரு அறையில் தூங்கி கொண்டி ருந்தார்.
அதி காலை 4 மணி அளவில் தந்தை படுத்து தூங்கிய அறையில் லைட் எரிந்ததால் என்னவென்று பார்க்க புஷ்பலதா அவரது அறைக்கு சென்றார்.
அப்போது ராம கிருஷ்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராம கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ராமகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாழைத்தோப்பு காட்டில் அருகே முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
- கிராம நிர்வாக அலுவலர் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சலிங்கபுரம் அருகே உள்ள பட்டாணி வயல் பகுதியில் மகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இவரது தோட்டத்தின் வாழைத்தோப்பு காட்டில் அருகே உள்ள சிறிய வாய்க்கால் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு 50 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
இது குறித்து சாத்தம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பூபதி ராஜாவுக்கு பொது மக்கள் தகவல் தெரி வித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மொடக்குறிச்சி போலீ சாருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மொடக்குறிச்சி போலீசார் வாய்க்கால் அருகே கிடந்த அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் கிடந்த முதியவர் பிணத்தை மீட்டனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என தெரிய வில்லை.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டாக்டர் சங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து இது கொலையா? தற்கொ லையா? என தொடர்ந்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
- ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப் படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்க ளுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞ ர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
திட்டம் 1-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00, 000 மிகாமல் இருத்தல் வேண்டும்.
தனிநபர் கடன் திட்டம் 1-ன் கீழ் ஆண்டிற்கு (ஆண்,பெண்) 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000, திட்டம் 2-ன் கீழ் ஆண்க ளுக்கு 8 சதவீதம், பெண்க ளுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000 கடன் வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர் களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கடன் திட்டம் 1-ன் கீழ் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் 10 நபர் முதல் 20 நபர் வரை ஒருவருக்கு ரூ.1,00,000 கடன் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் 10 நபர் முதல் 20 நபர் வரை ஒருவருக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்படுகிறது.
மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில் நுட்பக்கல்வி பயில்பவர் களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் 3 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.20,00 ,000 வரையிலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்ப டுகிறது.
எனவே மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மை யினர்கள் கடன் விண்ணப்பங்களை கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானசான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்டஅறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்கு வரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கிகோரும் இதர ஆணவங்கள் சமர்ப்பி க்கப்பட வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பித்து விண்ணப்பி க்கலாம்.
மேற்குறிப்பிட்ட திட்டத்தி ன் கீழ் அனைத்து சிறு பான்மை ஒயின மக்கள் கடனுதவி பெற்று பயனடை யுமாறு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.






