வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

அறையில் தினேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஜரத்தல் அடுத்த மேற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (55). கருத்து வேறுபாடு கார ணமாக மனைவியை பிரிந்து மகன் தினேஷ்குமா ருடன் (24) வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு தினேஷ்குமார் வீட்டுக்கு வந்து அவரது அறையில் தூங்க சென்றார். கணேசன் அருகில் உள்ள தாய் வீட்டில் தூங்க சென்றார்.

பின்னர் காலை எழுந்த கணேசன் தனது வீட்டிற்கு வந்தார். வீட்டு கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டினார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த கணேசன் அக்கம் பக்கத்தி னர் உதவியு டன் கடப்பாறை யால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் தினேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com