என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று விட்டு ஈரோடு நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.
    • வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    மொடக்குறிச்சி, 

    ஈரோடு பெரிய வலசு அடுத்த திலகர் வீதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் சக்திவேல் (21). மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள காலனி தெரு பகுதியைச் சேர்ந்த காட்டு ராஜா மகன் ராமன் (25). இருவரும் ஈரோட்டில் மெடிக்கல் துறையில் மார்க்கெட்டிங் பணியாளராக பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் மொடக்குறிச்சியில் தனது சொந்தப் பணிகள் காரண மாக இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று விட்டு ஈரோடு நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.

    இருசக்கர வாகனத்தை ராமன் ஓட்டி வந்தார். பின் பகுதியில் சக்திவேல் அமர்ந்து வந்தார்.அப்போது சின்னியம்பாளையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சக்திவேலும், ராமனும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி பலியானார்.ராமன் லேசான காயத்தோடு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து உறவி னர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காருக்குள் கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
    • காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கு இடமாக பேசியுள்ளனர்.

    சென்னிமலை, 

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் அதே பகுதியில் ஈங்கூர் பாலப்பாளையம் பிரிவு அருகே உள்ளது. கடந்த 23-ந் தேதி மாலையில் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் சத்தியமூர்த்தி (47) என்பவர் பாலப்பாளையம் பிரிவு கிளை நிறுவனத்தில் பண பரிவர்த்தனை முடிந்த பிறகு ரூ.23 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு ஈங்கூரில் உள்ள நிறுவனத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பாலப்பா ளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது வேறு ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் சத்திய மூர்த்தியை வழிமறித்து காருடன் கடத்தி சென்றனர். பின்னர் ஈரோடு அருகே ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் காட்டு பகுதியில் சத்தியமூர்த்தியை காருக்குள் கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.

    இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மகேந்திரன் என்பவர் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் செ ன்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். மேலும் பல்வேறு பகுதி களில் கண்காணிப்பு கேமரா க்களையும் ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நால்ரோடு என்ற இடத்தில் தனிப்படை போலீசார் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கு இடமாக பேசியுள்ளனர். பின்னர் அவர்களை சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுக்கா, கண்ணங்குடி அருகே கள்ளர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மனோகர் (வயது 29) என்பதும், மற்றொருவர் அதே ஊரைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகன் நவநீதன் (வயது 27) என்பதும் தெரிய வந்தது. இதில் மனோகர் கடந்த 8 வருடங்களாக சத்தியமூர்த்தி வேலை செய்யும் அதே நிறுவனத்தில் ஸ்டோர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மற்றொருவரான நவநீதன் என்பவரும் அதே நிறுவனத்தில் 6 மாதங்கள் வேலை செய்து பின்னர் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

    மனோகரும், நவநீதனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக இருந்துள்ளனர். தற்போது மனோகர் தொடர்ந்து அதே நிறுவனத்தில் வேலை செய்து வருவதால் அந்த நிறுவனத்தில் தினமும் சத்தியமூர்த்தி பண பரிவர்த்தனைக்காக அதே பகுதியில் உள்ள கிளை நிறுவனத்திற்கு சென்று வந்ததை மனோகர் கண்கா ணித்து ள்ளார். இது பற்றி தனது நண்பர் நவநீதனுக்கு தெரிவித்துள்ளார். பின்னர் இந்த தகவலை மனோகரும், நவநீதனும் தங்களது உறவி னர்களுக்கு தெரிவித்து ள்ளனர். அவர்கள் இந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

    அதைத்தொடர்ந்து மனோகர் மற்றும் நவநீத னின் உறவினர்கள் 4 பேர் சத்தியமூர்த்தியை கண்கா ணித்து அவர் வரும்போது காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சம் பணத்தை பறித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து பணம் கொள்ளை போன தற்கு உடந்தையாக இருந்த மனோகர் மற்றும் நவநீதனை சென்னிமலை போலீசார் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று இரவு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மனோகர் மற்றும் நவநீதன் கொடுத்த தகவலின் பேரில் பணத்தை கொள்ளை யடித்து சென்ற தலை மறைவான 4 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.
    • சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    இந்த சூறாவளி காற்றில் கடுகாம்பாளையம், தோட்டகாட்டூர், ஆலங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை,நேந்திரன், கதளி உள்ளிட்ட 500-க்கும் வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.

    ஒரு வாழை நடவு செய்ய சுமார் 10 முதல் 150 ரூபாய் வரை செலவு செய்து இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடபட்ட வாழை மரங்களுக்கு காப்பீடு செய்து இருந்தும் காற்றினால் சாய்ந்த மரங்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில்லை எனவும், பெரும்பாலும் இயற்கை சீற்றத்தின் போது காற்றினால் வாழை மரங்கள் சேதம் ஆவதாகவும் அவ்வாறு காற்றினால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கும் காப்பீட்டு தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
    • அழைப்பானை மாணவர்கள் விண்ணப்பித்தபோது வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப ப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023–-24-ம் கல்வி ஆண்டுக்கு இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, 500 இடங்களுக்கு 4,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 30-ந் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

    தேசிய, மாநில, மாவட்ட அளவில் தகுதி பெற்ற விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், தேசிய மாணவர் படையில், 'யு' சான்றிதழ் பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், அந்தமான் நிகோபர் பகுதியை சேர்ந்த தமிழக மாணவர்கள் உரிய சான்றுடன் பங்கேற்கலாம்.

    வரும் ஜூன் மாதம் 1-ந் தேதி காலை 10 மணிக்கு பி.எஸ்.சி.கணினி அறிவியல், கணிதம், விலங்கியல் பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. 2-ந் தேதி காலை 10 மணிக்கு பி.காம் வணிகவியல், பி.காம் சி.ஏ., வணிகவியல் கணினி பயன்பாடு, பி.பி.ஏ., சி.ஏ. வணிய நிர்வாகவியல் கணினி பயன்பாடு மாண வர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

    தொடர்ந்து 5-ந் தேதி காலை 10 மணிக்கு மொழி பாடங்களுக்கான தமிழ், ஆங்கில பாட மாண வர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இளநிலை பட்டப்படி ப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பி த்தவர்களுக்கு அழைப்பானை மாண வர்கள் விண்ணப்பித்தபோது வழங்கிய மின்ன ஞ்சல் முகவரிக்கு அனுப்ப ப்படும். ஏற்கனவே TNGASA என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.

    மாணவர்களின் மதிப்பெண் அரசின் இட ஒதுக்கீடு முறையை பயன்படுத்தி மாணவர் சேர்க்கை வழங்கப்படும். கலந்தாய்வுக்கு வருவோர் உரிய நாளில் காலை 10 மணிக்கு இணைய விண்ணப்பத்தின் நகல், பள்ளி டி.சி. நகல், 10, பிளஸ்- 1, பிளஸ் -2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்று, 2 போட்டோ, ஆதார் கார்டு அசல், நகல் – 5 படிவம், கல்லூரி கட்டணத்துடன் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வர வர வேண்டும்.

    மாணவர்களின் தரவரிசை பட்டியல், கலந்தாய்வு விபரம் www.gascm.in என்ற கல்லூரி இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் கல்லூரி தகவல் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

    • இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் இரவு ரோந்து பணியில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களது செல்போன் எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றதும் ரவுடியிசம், கள்ளச்சாராயம், மது, கஞ்சா ஆகியவற்றை ஒழிக்க பாடுபடுவேன் என்று கூறினார்.

    இதேபோல் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணியும் தீவிரப் படுத்தப்படும் எனவும் கூறியிருந்தார். இதனை த்தொடர்ந்து இரவு நேர ரோந்து பணியில் கவனம் செலுத்தும் வகையில் பல அதிரடி நடவடிக்கை களையும் மேற்கொண்டார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு டவுன் பகுதி, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய 5 சப்-டிவிஷனில் சத்தியமங்கலம் உட்கோட்ட ஏ.எஸ்.பி. அய்மன்ஜமால் தலைமையில் ஒவ்வொரு சப்-டிவிஷனில் இன்ஸ்பெ க்டர்கள் கொண்ட குழுவினர் இரவு ரோந்து பணியில் அதிகாரி களாக நியமிக்க ப்பட்டுள்ளனர்.

    இன்ஸ்பெ க்டர்கள் கீழ் அதற்காக நியமிக்க ப்பட்டு ள்ள குழுவினர் இரவு நேரம் ரோந்து பணியை தீவிரமாக கண்காணிப்பார்கள். மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களது செல்போன் எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி சத்தியமங்கலம் உட்கோட்ட ஏ.எஸ்.பி. அய்மன் ஜமால் செல் நம்பர் 9498111786, ஈரோடு டவுன் பகுதிக்கு மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா-94436 56999 ரோந்து போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்ப ட்டுள்ளார்.

    பவானி சப்- டிவிசனுக்கு பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி-94981 02067, கோபி சப்-டிவிசனுக்கு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி- 83000 37067, சத்தியமங்கலம் சப்- டிவிசனுக்கு பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார்-9498149743, பெருந்து றை சப்-டிவிஷ னுக்கு கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்-9498191545 ஆகியோர் ரோந்து அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களது தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்ப ட்டுள்ள து. புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தவறி விழுந்த சேகருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • சிகிச்சை பெற்று வந்த சேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள எரங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (47). கோழிக்கடையில் கறி வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விஜய லட்சுமி (40). சேகருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து மது அருந்திவிட்டு வந்தவர் மதுபோதையில் தொட்டம் பாளையம், ஒத்தப்பனை மரம் அருகில் உள்ள கொப்பு வாய்க்கால் மோரி யில் படுத்து தூங்கியுள்ளார்.

    அப்போது மோரியில் இருந்து தவறி விழுந்த சேகருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர் ஒருவர் அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    பின்னர் உயர் சிசிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேகர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து சேகரின் மனைவி அளித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு டவுன், கோபி, வெள்ளி த்திருப்பூர், பங்களாபுதூர், அந்தியூர், கடத்தூர், மலையம் பாளையம், சத்தியமங்கலம் போலீசார் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 130 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • விவசாயிகள் 742 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.
    • இதன் விற்பனை மதிப்பு ரூ. 17 லட்சத்து 30 ஆயிரத்து 450 ஆகும்.

    ஈரோடு:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச்சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று நடைபெற்ற கொள்முதல் ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 742 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.

    இதில் 60 கிலோ எடையிலான மூட்டை, முதல் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2,720-க்கும், அதிக பட்சமாக ரூ. 2,730-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் குறைந்த பட்சமாக ரூ.2,600-க்கும், அதிகபட்சமாக ரூ. 2,650-க்கும் விற்பனையானது. இதில் 38 ஆயிரத்து 520 கிலோ எடையிலான 642 நாட்டுச்சர்க்கரை மூட்டை கள் விற்பனையானது.

    இதன் விற்பனை மதிப்பு ரூ. 17 லட்சத்து 30 ஆயிரத்து 450 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பா ளர் தெரிவித்தார்.

    • காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
    • 2 பேரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னி மலை அருகே ஈங்கூரில் தனியா ருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் அலுவலக பணியாளராக பெருந்துறையில் உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி (47) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்த தொழிற்சாலையின் மற்றொரு கிளை அதே பகுதியான ஈங்கூர் பாலப்பாளையம் அருகே இயங்கி வருகிறது. தினமும் காலை ஈங்கூர் தொழிற்சாலையில் இருந்து அலுவலக ஊழியர்கள் பாலப்பாளையம் தொழிற்சா லைக்கு பணம் கொண்டு சென்று அங்கு பண பரிவர்த்தனை முடிந்த பிறகு மீண்டும் மாலையில் தொழிற்சாலைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    அதன்படி கடந்த 24-ந் தேதி மாலை வழக்கம் போல் நிறுவனத்தின் அலுவலக பணியாளர் சத்தியமூர்த்தி பாலப்பாளையம் தொழிற் சாலையில் பணப் பரிவர்த்தனை முடிந்த பின்னர் மீதி உள்ள ரூ.23 லட்சத்தை எடுத்துக் கொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான காரில் ஈங்கூர் தொழிற்சாலைக்கு கிளம்பி சென்றார்.

    பாலப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென எதிரே ஒரு காரில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மேலும் 2 பேர் வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்தி ஓட்டி சென்ற காரை வழிமறித்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து சத்தியமூர்த்தியை அதே காரில் கடத்தி சென்றனர்.

    இதனையடுத்து ரங்கம்பா ளையம் குறிஞ்சி நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தின் அருகே காரை நிறுத்தி சத்தியமூர்த்தியின் கை கால்களை கட்டி ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர். இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் முதற்கட்ட விசாரணையில் கொள்ளை யர்கள் நன்கு திட்டம் போட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே இந்த நிறுவனத்திற்கு நன்கு பழக்கமானவர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    குற்றவாளிகளை பிடிக்க சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்ப ட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் ஒரு கார் சென்றது பதிவாகி இருந்தது. சத்தியமூர்த்தியிடம் அந்த காரை காண்பித்து கொள்ளையர்கள் வந்த கார் இதுதானா என்று கேட்கப்பட்டது. அப்போது அவர் இதுதான் கார் என அடையாளம் காட்டினார். அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி னர்.

    அப்போது அந்த கார் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் விரைந்து சென்றனர்.

    அங்கு சென்று அந்த காருக்கு சொந்தமான நபரை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், திருப்பூரில் பணியாற்றும் ஒருவர் பெயரை சொல்லி அவர் வர சொன்னதால் தான் வந்ததாக கூறினார். உடனடியாக திருப்பூர் விரைந்து சென்ற போலீசார் அவர் கூறிய நபரை கண்டுபிடித்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

    அதாவது திருப்பூரில் வேலை பார்க்கும் அந்த நபர் கொள்ளை நடந்த அந்த தனியார் இரும்பு தொழிற்சாலையில் ஏற்கனவே பணிபுரிந்தவர் என தெரிய வந்தது. சில காரணங்களுக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த நபர் அந்த தொழி ற்சாலையில் இருந்து வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்தது. அதன் பிறகு அந்த நபர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    ஏற்கனவே அந்த நிறுவனத்தில் வேலை பார்த்ததால் அந்த நிறுவனத்தின் பணம் வரவு, செலவுகள், பணம் எப்போது கொண்டு செல்லப்படுகிறது. அதை யார் கொண்டு செல்கிறார்கள் போன்ற விவரம் அவருக்கு தெரிந்துள்ளது.

    இதனையடுத்து அவர் திட்டம் தீட்டி நண்பர்கள் உதவியுடன் இந்த துணிகர கொல்லையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் இந்த கொள்ளைக்கு இவர் தான் மூளையாக செயல்பட்டாரா? அல்லது வேறு யாரும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து முழுவதுமாக தகவல் தெரியவில்லை.

    தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் தான் முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

    • மழை பொழிவு இல்லாததால் நீர்வரத்து குறைந்து விட்டது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.19 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் நீர்வரத்து குறைந்து விட்டது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.19 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 138 கன அடியாக நீர்வரத்து குறைந்து விட்டது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நடராஜ் பணத்துடன் வந்ததும் அவரை தாக்கி விட்டு பணத்துடன் காரில் ஏறி தப்பித்து தலைமறைவாகி விட்டனர்.
    • இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை குன்னத்தூர் சாலையில் தனியார் வங்கியில் நகை கடன் பிரிவில் பணியாற்றுபவர் அரச்சலூர் பகுதியை சேர்ந்த நடராஜ் (29).

    இவர் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு சென்று நகைகடன் தொடர்பாக நோட்டீஸ் வழங்கி அதன் மூலமாக தொடர்பு கொள்ளும் பொதுமக்களின் ஏலத்திற்கு போகும் நகைகளை பணம் வழங்கி மீட்டு இவர் பணியாற்றும் வங்கியில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் பெரு ந்துறையை அடுத்துள்ள வீரணம் பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி செங்காவேரிக்கு வங்கியில் நகை அடமான கடன் பெற்று வழங்கியதன் மூலமாக செங்காவேரிக்கு நடராஜ் நன்கு பழக்கமானார்.

    நாள் பட்ட தொடர் நட்பின் மூலமாக நடராஜ் நாள் ஒன்றுக்கு எவ்வளவு பணம் கையில் வைத்து உள்ளார் என்பதை நன்கு அறிந்து வைத்த செங்காவேரி நடராஜ்க்கு முன்பாகவே வேறு வேலைக்கு திருப்பூர் சென்று வரும் போது திருப்பூரை சேர்ந்த ரத்தீஸ் குமார் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இதன் மூலமாக நடராஜிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்ட செங்கா வேரி நண்பர் ரத்தீஸ்குமார் மூலமாக நடராஜை தொடர்பு கொண்டு 30 பவுன் தங்க நகை அடமானம் வைத்து ள்ளதாகவும், தற்போது நகையை வங்கி அதிகாரிகள் ஏலம் விட போவதாக கூறி உள்ளதா கவும், தங்களது வங்கியில் எனது 30 பவுன் தங்க நகையை அடமானம் வைக்க உள்ளதாகவும் கூறினார்.

    இதனை உண்மை என்று நம்பிய நடராஜ் ரத்தீஸ்குமாரி டம் எங்கு வர வேண்டும், எவ்வளவு பவுன் நகை, எப்போது எந்த வங்கியில், எவ்வளவு பணத்திற்கு அடமானம் வைக்கபட்டது என்ற விபரங்களை கேட்டு கொண்டு ரத்தீஸ்குமார் சொன்ன தகவலின் படி தான் பணியாற்றும் வங்கியில் இருந்து ரூ.1.10 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு ரத்தீஸ்குமாரை தொடர்பு கொண்டு நடராஜ் எங்கு வர வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

    பெருந்துறை அடுத்துள்ள பொன்முடி பகுதியில் இருப்பதாக ரத்தீஸ்குமார் கூறியதை நம்பி நடராஜ் பணத்துடன் அங்கு சென்றுள்ளார். திருப்பூரை சேர்ந்த நண்பர் ஒருவரின் காரை எடுத்து வந்த ரத்தீஸ் குமார் தனது நண்பர்களான சரன் நித்தி, மணிகண்டன், சரத் ஆகியோருடன் காரில் காத்திருந்தனர். நடராஜ் பணத்துடன் வந்ததும் அவரை தாக்கி விட்டு பணத்துடன் காரில் ஏறி தப்பித்து தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் தொட ர்பாக பொதுமக்கள் உதவியு டன் நடராஜ் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் கார் சென்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த கார் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓரு நபரின் கார் என்றும், நண்பர்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் வாடகைக்கு டிரைவர் இல்லாது வழங்கியது தெரியவந்தது.

    இந்த கார் உரிமையாளர் மூலமாக காரை வாடகைக்கு எடுத்து சென்றவர்களை பிடித்து பெருந்துறை ேபாலீசார் தீவிர விசாரணை மேற்கொ ண்டதில் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது செங்காவேரி என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செங்காவேரி, ரத்தீஸ்குமார், சரன் நித்தி, மணிகண்டன் ஆகிய 4 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்காவேரியை கோவை சிறையிலும், மற்ற 3 பேரை மாவட்ட சிறையிலும் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனை யடுத்து கார் மற்றும் ரூ.1.10 லட்சம் பணத்தையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் பெருந்து றை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றும் பணி நடை பெற்றது.
    • நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் அனுமதி யின்றி வைக்கப்ப ட்டுள்ள விளம்பர பல கைகள், பேன ர்கள் மற்றும் பிளாஸ்டிக் போர்டு களை அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில், துப்பு ரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வை யாளர் ஈஸ்வரமூர்த்தி, செந்தில்கு மார் ஆகியோர் தூய்மை பணியாளர்களை கொண்டு அகற்றும் பணி நடை பெற்றது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்புக்கள் 2023-2024-ன்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

    அதன் அடிப்படையில் இந்த விளம்பர பலகைகளை அகற்றும் பணி நடை பெற்றது.

    ×