மதுபோதையில் தவறி விழுந்தவர் சாவு

தவறி விழுந்த சேகருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.சிகிச்சை பெற்று வந்த சேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுபோதையில் தவறி விழுந்தவர் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள எரங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (47). கோழிக்கடையில் கறி வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விஜய லட்சுமி (40). சேகருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து மது அருந்திவிட்டு வந்தவர் மதுபோதையில் தொட்டம் பாளையம், ஒத்தப்பனை மரம் அருகில் உள்ள கொப்பு வாய்க்கால் மோரி யில் படுத்து தூங்கியுள்ளார்.

அப்போது மோரியில் இருந்து தவறி விழுந்த சேகருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர் ஒருவர் அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் உயர் சிசிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேகர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சேகரின் மனைவி அளித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com