சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேர் கைது

போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.9 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு டவுன், கோபி, வெள்ளி த்திருப்பூர், பங்களாபுதூர், அந்தியூர், கடத்தூர், மலையம் பாளையம், சத்தியமங்கலம் போலீசார் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.

அப்போது சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 130 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com