என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஏலத்துக்கு மொத்தம் 3,788 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
    • இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 49 லட்சம் ஆகும்.

    ஈரோடு:

    பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 3,788 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தர கொப்பரைகள் 1,998 மூட்டைகள் வர பெற்றிருந்தன.

    இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 78.69-க்கும், அதிகபட்சமாக ரூ.85.11-க்கும் விற்பனையாகின. 2-ம் தர கொப்பரைகள் 1,790 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 40.21-க்கும், அதிகபட்சமாக ரூ.80.56-க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.

    இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 49 லட்சம் ஆகும் என விற்பனை கூடக்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • சென்னிமலை டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.
    • மங்கள மஹா நவசண்டியாக யாகம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் சென்னிமலை டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி பூஜைகளும், பவுர்ணமி மற்றும் வாரத்தில் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

    கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், தொழில், விவசாயம் செழிக்கவும் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ மகா சரஸ்வதி ஆகி முப்பெரும் தேவிகளுக்கு மங்கள மஹா நவசண்டியாக யாகம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி காலை 8 மணிக்கு கோ பூஜை, விநாகயர் வழிபாடு, கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் தொடங்கப்படுகிறது.

    அன்று மாலை புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, சப்தசதி வழிபாடு, 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது.

    11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, தேவி கலசத்திற்கு நவாவரண பூஜை, அக்னி காரியம் 13 அத்தியா ஹோமம், நவசண்டியாகம், சண்டியாக ஸங்கல்பம் பஞ்சகவ்யம், சுமங்கலிபூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, மங்கல மஹா பூர்ணாஹுதி, கலச அபிஷேகம் பூஜை தீபாராதனை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கால பைரவ விழாக்குழு அன்பர்கள் செய்து வருகின்றனர்.

    • ஹலோ சீனியர் திட்டம் தற்போது வரை நடைமுறையில் தான் உள்ளது.
    • இத்திட்டம் மாவட்டத்தில் தற்போது வரை நடை முறையில் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தனியாக வசிக்கும் முதியவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்து வந்தது.

    இதனை தடுக்க மாவட்ட காவல் துறை சார்பில் கட ந்த 2019-ம் ஆண்டு 'ஹலோ சீனியர்' என்ற திட்டம் தொடங்கப்பட்டு அதற்கென 9655888100 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் தனியாக வசிக்கும் முதியவ ர்களை பாது காக்கவும், அவர்களுக்கு உள்ள இடையூறுகளை களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டம் மாவட்டத்தில் தற்போது வரை நடை முறையில் உள்ளது.

    இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் எவ்வித பாதுகாப்பு வசதி யும் இன்றி தனியாக வசிக்கும் முதியோர் வீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களை அந்தந்த போலீஸ் எல்லைக்கு உட்ப ட்ட போலீஸ் நிலை யத்தில் பணி யாற்றும் போலீசார் மூலம் கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    வாரத்தில் 2 நாட்கள் அவர்களது வீடுகளுக்கு போலீசார் நேரடி யாக சென்று அவ ர்களிடம் நலம் விசாரித்து விட்டு அவர்க ளிடம் குறைகள் இருந்தால் கேட்டு அதனை நிவர்த்தி செய்கின்றனர்.

    தனியாக வசிக்கும் முதியவர்களின் வீடுகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த அறிவுறுத்தினோம். அதன்படி தற்போது 30 வீடுகளில் கேமிராக்கள் பொருத்தியுள்ளனர்.

    ஹலோ சீனியர் திட்டம் தற்போது வரை நடைமுறையில் தான் உள்ளது. இத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணில் அளிக்கப்படும் புகார்கள் மீதும் உடனுக்கு டன் நடவடிக்கை எடுத்தும் வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கால்வாய்க்குள் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ஈரோடு:

    கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் அமைக்க பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீர்வளத் துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    அரசு உத்தரவுக்கு மாறாக மண் கரைகளை சேதப்படு த்தியும், மரங்களை வெட்டியும் அரசு அதிகாரிகளும், ஒப்பந்தாரர்களும் செயல்பட்டு வருவதை கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட ங்களை சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுக்காப்பு இயக்கத்தினர் கடந்த 21-ந் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் வழித்தடத்தில், வாய்க்காலில் இறங்கி தொடர் ஆர்ப்பா ட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதன்படி இன்று காலை ஈரோடு மாவட்டம், புங்கம்பாடி, ஊஞ்சலூர் பிரிவு கால்வாய் அருகே கீழ்பவானி வாய்க்காலின் 63-வது மைலில் கால்வாய்க்குள் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசன நீர் திறந்துவிட வேண்டும். நல்ல நிலையில் இருந்த மண் கரைகளை சேதப்படுத்தி, அந்த இடங்களில் கட்டுமான பணிகளை வேண்டு மென்றே தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நீர்வளத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை எண். 276-ஐ அரசு உறுதியாக ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் கசிவு நீர் பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும், சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரிய வில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கே.கே.நகர் அருகே உள்ள தண்ட வாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அந்த வாலிபர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இறந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரிய வில்லை.

    சம்பவ இடத்தில் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்ட வாளத்தை கடந்த போது அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

    இறந்த நபர் வெள்ளை நிற முழுக்கை சட்டையும், கருப்பு நிற ஜீன்ஸ் பேன்டும் அணிந்திருந்தார்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆர்த்தி வீட்டில் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • சித்தோடு போலீசார் தற்கொலைகான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பாரதி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சரண்யா. இவர்களது மூத்த மகள் ஆர்த்தி (14). இவர் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆர்த்தி டியூஷன் சென்று விட்டு வீட்டுக்கு வந்து சென்னை யில் இருந்து ஊர் திரும்பிய தனது தாயுடன் இரவு சுமார் 9.45 மணியளவில் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

    பின்னர் ஆர்த்தி வீட்டில் பாட்டி மற்றும் தம்பி ஆகியோர் இருந்த நிலையில் சமையல் அறையில் ஓட்டு மர சட்டத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மாணவி ஆர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்கவேல் விஷம் குடித்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் வாட்ச் மேன் தங்கவேல் (வயது 70). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தங்கவேல் இவரது சகோதரி வனஜா என்பவரது வீட்டில் வசித்து வந்தார்.

    இதையடுத்து தங்கவேல் சேலத்திற்கு சென்று வேலை செய்வதாக கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் தங்கவேல் சித்தோடு லட்சமி நகர் பகுதியில் விஷம் குடித்து கிடப்பதாக வனஜாவிற்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தங்கவேலை ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கவேல் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து வனஜா சித்தோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் இன்று காலை தொடங்கியது.
    • முகாமில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் இன்று காலை ஈரோடு செங்குந்தர் ஆண்கள் பள்ளியில் தொடங்கியது.

    இம்முகாமினை ஈரோடு மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ஜவகர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

    முகாமில் ரத்த அழுத்தம், இதயக்கோளாறு, சர்க்கரை பாதிப்பு, கண் பார்வை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    இதில் ஏராமளான போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் தொழிலதிபர் அக்னி சின்னசாமி, டாக்டர்.சகாதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
    • போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

    ஈரோடு:

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாட்டிற்காகப பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்திப்பரிசு கள் வழங்கப்படுகிறது.

    இதையொட்டி அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்- அமை ச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி வரும் 9-ந் தேதி, 10-ந் தேதி பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.

    இப்போட்டிகள் கலெக்டர் அலுவலக 2-ம் தளம் கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது. பள்ளிப்போட்டி காலை 10 மணி முதல், கல்லூரிப் போட்டி மதியம் 2 மணி முதல் நடைபெறும்.

    மாணவர்கள் பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்புகளை அவரவர்கள் பயிலும் பள்ளித் தலைமை யாசிரியர், கல்லூரி முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

    மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம் , 3-ம் பரிசாக ரூ.2ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படும்.

    மேலும் பள்ளி மாண வர்களுக்கான பேச்சு ப்போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள், அரசு ப்பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2ஆயிரம் வீதம் வழங்க ப்படும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் செல்போன் திருடிய 2 பேரை மடக்கி பிடித்தனர்.
    • போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கரு மாண்டி செல்லிபாளை யத்தை சேர்ந்தவர் தாமோ தரன் (23). இவர் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் மடத்துப்பாளையம் பகுதிக்கு வாடகைக்கு ஆட்டோவில் சென்றார்.

    இதை தொடர்ந்து அவர் தனது ஆட்டோவில் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை வைத்து விட்டு சென்றுள்ளார்.

    அப்போது 2 பேர் தனது செல்போனை திருடி கொண்டு சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாமோதரன் சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் செல்போன் திருடிய 2 பேரை மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து அவர்க ளை பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணை யில் அவர்கள் குன்னத்தூரை சேர்ந்த சபரி (வயது 25), சம்பத்குமார் (37) என்பது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • வாகனங்களில் இருந்து பேட்டரி மற்றும் உதிரிபாகங்கள் திருடி வந்தது தெரியவந்தது.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.

    பவானி:

    பவானி பழனிபுரம் மற்றும் காடையாம்பட்டி, தாளபையனூர், தொட்டி பாளையம், ஜம்பை, சன்னி யாசிபட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் டெம்போ, டிராக்டர், பள்ளி வாகனம் மற்றும் லாரிகளில் உள்ள பேட்டரி மற்றும் பொருட்கள் திருடப்பட்டதாக போலீ சாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று பவானி பழைய பஸ் நிலையம் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, கோபால், கிரைம் போலீஸ் ஸ்ரீரங்கன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரை ஓட்டி வந்தவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் சேலம் மாவட்டம் சங்ககிரி மஞ்சள் பட்டி பொன்னம்பட்டியான் காடு பகுதியை சேர்ந்த சூர்யா (27) என்பதும் என்ஜி னீயரிங் படித்து விட்டு சிலிண்டர் கடையில் பணி யாற்றி வந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நிறுத்தி வைக்க ப்பட்ட வாகனங்களில் இருந்து பேட்டரி மற்றும் உதிரி பாகங்கள் திருடி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். மேலும் அவரி டம் இருந்து 62 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள 11 பேட்டரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதை தொடர்ந்து போலீ சார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மழைப்பொழிவு குறைந்ததால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.
    • 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசல் போக்குவரத்து தொடங்கியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகு தியையொட்டி தெங்கு மரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம் பாளையம் ஆகிய வன கிராமங்கள் உள்ளன. இதில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்ட எல்லை யில் உள்ள இக்கிராம மக்கள் வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றை பரிசலில் கடந்து சென்ற பஸ்சில் ஏறி பவானிசாகர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளை யம், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இதேபோல் இப்பகுதியில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாண வர்களும் பரிசலில் சென்று தான் படித்து வருகின்றனர்.

    மாயாற்றி ன் குறுக்கே பாலம் இல்லாததால் தெங்கு மரஹாடா, அல்லி மாயார், கல்ல ம்பாளையம், சித்திர ம்பட்டி கிராம மக்கள் பரிசலில் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்நி லையி ல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டம் மலை ப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் போக்குவ ரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.

    இதனையடுத்து மழைப்பொழிவு குறைந்ததால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. மாயாற்றில் சாதாரண அளவுக்கு தண்ணீர் செல்வதால் 3 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் பரிசல் போக்குவரத்து தொடங்கியது.

    இதனால் கிராம மக்கள், மாணவ- மாணவிகள் வழக்கம் போல் தங்களது பணிகளை மேற்கொ ண்டு வருகின்றனர். ஆனாலும் இது தற்காலிக மானது தான் என்றும்,

    மீண்டும் மழை பெய்தால் மாயாற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்படும் என்றும், அதன் பின்னர் வழக்க ம்போல் பரிசல் இயக்க தடை விதிக்கப்ப டும்.

    இதற்கு நிரந்தர தீர்வாக மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து ள்ள னர்.

    ×