என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம் வெளியிடபட்டுள்ளது
    • வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்ட ம்-21.95 அடியாக உள்ளது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவா னிசாகர் அணை. அணை யின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதி யான நீலகிரி மலைப்பகுதி யில் பரவலாக மழைபெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதி கரித்து வந்தது. பின்னர் மழைப்பொழிவு குறைந்த தால் நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 83.83 அடியாக உயர்ந்து ள்ளது. இன்று காலை அணைக்கு 4,261 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இரு ந்து காலிங்கராயன் பாசன த்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோ ட்டை பாசனத்திற்கு 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொட ர்ந்து திறக்கப்பட்டு வருகி றது. இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவ ரப்படி 29.05 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம்- 20.57 அடியா கவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்ட ம்-21.95 அடியாக வும் உள்ளது.

    • சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு வீரப்பன் சத்திரம், பெருந்துறை மற்றும் கடத்தூர் போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த, ஈரோடு, ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் (வயது 50), பெருந்துறை சென்னிமலை ரோடு விக்னேஷ் நகரைச் சேர்ந்த செந்தில் (37), கடத்தூர் மூலவாய்க்காலைச் சேர்ந்த தர்மலிங்கம் (40) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • நம்பியூரில் தனியார் ஸ்பின்னிங் மில் தூய்மைப் பணியாளர் திடீர் உயிரிழந்தார்
    • இதுகுறித்த புகாரின்பேரில் நம்பியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் சின்னரங்கன் (வயது 63). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் கடந்த பல வருடங்களாக தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று, ஓய்வில் இருந்த சின்னரங்கன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் மீண்டும் வேலைக்கு சென்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சின்னரங்கன் தனக்கு காய்ச்சல் இருப்பதாக கூறிக் கொண்டிருந்தவர் திடீரென தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சின்னரங்கன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் நம்பியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் அருகே சாலையோரம் காட்டெருமைகள் உலா வருவதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    • வாகன ஓட்டி கள் காட்டெருமைகளை கண்டால் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தவோ, அதிக ஒளி எழுப்பி ஆரன்களை அடிக்கவோ கூடாது.

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட ஏரா ளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்கு கள் குடிநீர், உணவை தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை யோரம் வருவதும் ஊருக்குள் புகுந்து பயி ர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சத்திய மங்கலம்- மைசூர் தேசிய நெடு ஞ்சாலையில் சாலை யோரம் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்தன. காட்டெருமைகள் கூட்டத்தைக் கண்ட சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு கீேழ இறங்கி ஆபத்தை உணராமல் தங்க ளது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    இதை தொடர்ந்து ரோந்து வந்த வனத்துறை யினர் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்த னர். இதுகுறித்து வனத்துறை யினர் கூறும் போது, காட்டெருமைகள் மாலை வேளையில் தண்ணீர் அருந்து வதற்கு குட்டை களுக்கு வருவது வழக்கமான ஒன்று தான். வாகன ஓட்டி கள் காட்டெருமைகளை கண்டால் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தவோ, அதிக ஒளி எழுப்பி ஆரன்களை அடிக்கவோ கூடாது. அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • மர்ம நபர்கள் அடிக்கடி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு கடைகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள்.
    • போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து அவரை பிடித்து ஒப்படைக்க வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் வணிக நிறுவனங்கள் துணிக்கடைகள், பழக்கடைகள், டீக் கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பணப்புழக்கம் அதிகம் இருக்கும். அந்த இடங்களை குறி வைத்து சில மர்ம கும்பல் 500 ரூபாய் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்தியூர் பகுதிகயில் உள்ள கடைகள், பெட்ரோல் பங்க் மற்றும் வணிக நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்குக்கு நேற்று பலர் வந்து பணம் கொடுத்து பொட்ரோல் போட்டு சென்றனர். இதை பயன்படுத்தி ஒருவர் ரூ.200 கொடுத்து பொட்ரோல் போட்டு கொண்டு சென்றார். இதையடுத்து அந்த நோட்டை ஆய்வு செய்த போது அது கள்ள நோட்டு என தெரிய வந்தது. அந்த கள்ள நோட்டு யார் கொடுத்தது என தெரிய வில்லை.

    இதே போல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பெட்ரோல் பங்கில் ரூ.500 கள்ள நோட்டு கொடுத்து மர்ம கும்பல் பெட்ரோல் போட்டு சென்றது தெரிய வந்தது. இப்படி அடிக்கடி வந்து மர்ம கும்பல் கள்ள நோட்டுகள் கொடுத்து ஏமாற்றி வருவதை அறிந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி அந்த நோட்டுகளை அப்புறப்படுத்த அறிவுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

    அந்தியூர் பகுதியில் சில மர்ம நபர்கள் அடிக்கடி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு கடைகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள். எனவே பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    மேலும் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா வருகின்ற 9-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வார்கள்.

    இதனால் பணப்புழக்கம் அந்தியூர் பகுதியில்இருக்கும். இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பணத்தை வாங்க வேண்டும். பணத்தை 2 புறங்களிலும் திருப்பிப் பார்த்து நல்ல நோட்டா என்பதை உருதி செய்த பிறகு பணத்தை உள்ளே வைக்க வேண்டும்.

    மேலும் விற்பனையாகும் பணததை அவ்வப்போது எடுத்து வேறு இடத்தில் வைத்து விட்டு பணம் வைக்கும் டிராவில் குறைந்த தொகையை வைத்து பண்டிகை காலங்களில் ஏமாற்று கும்பலிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.

    இதே போல் சிலர் 100 ரூபாயை கொடுத்து விட்டு 500 ரூபாய் கொடுத்தேன் என்று ரகளை செய்வார்கள். அவர்கள் வேறு ஒருவர் கொடுத்த 500 ரூபாயை தங்களுடையது என்று ஏமாற்றி பணத்தை பெற்றுச் செல்லும் கும்பல் சுற்றித் திரிவார்கள். அவர்களிடம் இருந்து தங்களை பாது காத்துக் கொள்ள வேண்டும்

    மேலும் கடைகளில் கூட்டம் அதிக அளவில் சேர்வதை தவிர்க்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ அவற்றை விரைவில் கொடுத்து அனுப்பிவிடுங்கள். பெரிய மளிகை கடைகளில் பண்டிகை காலம் முடியும் வரை கண்காணிப்பு கேமராவை பார்வையிடுவதற்கும் கண்காணிக்கவும் ஒருவரை தனியாக நியமித்து கடைகளில் திருட்டு நடைபெறாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் கள்ள நோட்டு கும்பல்கள் பணத்தை கொடுத்து பொருட்களை வாங்குவது போல் வருவார்கள். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் பொருள் கொடுப்பதற்கு தாமதப்படுத்தி அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து அவரை பிடித்து ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    • சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
    • போலீசார் ராமர் என்ற ராம்முருகனை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு கோபி கொங்கரபாளையம் பகுதியை சேர்ந்த ராமர் என்ற ராம்முருகன் (வயது 38) என்பவர் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் ராமர் என்ற ராம்முருகனை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 12 கஞ்சா செடிகள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமாரசாமி கவுண்டர் பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
    • போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் குமார சாமி கவுண்டர் (வயது 66). இவர் விவசாய வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் கை, கால் மற்றும் வயிற்றில் அடிப்பட்டது. அதை தொட ர்ந்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில் மீண்டும் கை, கால் மற்றும் வயிற்று வலி இருந்ததால் மன வேதனை அடைந்த குமாரசாமி கவுண்டர் தோட்ட த்திற்கு வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

    பின்னர் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக புளியம்பட்டி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் குமாரசாமி கவு ண்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து குமாரசாமி கவுண்டரின் மகன் சக்திவேல் முருகன் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடு த்தார். புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோட்டில் இருந்த பாலம் உடைந்து குழி ஏற்பட்டு விட்டது.
    • வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, அம்மன்கோவில் புதூரில் இருந்து முருங்கத்தொழுவு செல்லும் ரோட்டில் இருந்த பாலம் உடைந்து குழி ஏற்பட்டு விட்டது.

    இந்த ரோட்டில் அரசு டவுன் பஸ் மட்டும் அல்லாமல் தனியார் நிறுவன கம்பெனி பஸ்கள், லாரிகள் என போக்குவரத்து மிகுந்த ரோடு. மேலும் இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் செல்கிறது.

    இந்த நிலையில் இந்த குழி ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. அந்த இடத்தில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் முன்பாவது அதிகாரிகள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
    • தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த மேட்டுநாசுவம் பாளையம், பச்சபாலி ஆண்டிகாடு தோட்டம் பகுதியில் முத்துச்சாமி (45) என்பவர் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த கோழிப்பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வளர்த்து வந்தார். இதற்காக தகர செட்டு கூரை அமைத்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை முத்துசாமி கோழி பண்ணைக்கு வந்து கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் தகரசெட்டால் வேயப்பட்ட கூரைகள் தீப்பிடித்து முழுவதும் எரிந்தது.

    இது குறித்து பவானிக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் எரிந்து பரிதாபமாக இறந்தன.

    இந்த விபத்தில் ரூ.18 லட்சம் மதிப்பிலான கோழி பண்ணை செட்டுகள், ரூ.5 லட்சம் மதிப்பிற்கான கோழிக்குஞ்சுகள் என மொத்தம் ரூ.23 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.

    இந்த தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.73 அடியாக உயர்ந்துள்ளது.
    • இன்று காலை அணைக்கு 2,953 கன அடி நீர்வரத்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதா ரமாகவும் உள்ளது பவானி சாகர் அணை. அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலை ப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. பின்னர் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.73 அடியாக உயர்ந்துள்ளது.

    இன்று காலை அணைக்கு 2,953 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடியும்,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • விதிமுறைகளை மீறி கழிவுகள் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.
    • அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட செம்புளிச்சாம் பாளையம் ஆவாரம் காட்டு தோட்டம் பகுதியில் ஒரு நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த தென்னை நார் ஆலையில் இருந்து நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் விதிமுறைகளை மீறி கழிவுகள் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.

    மேலும் தேங்காய் மட்டைகளை குவித்து பரப்பி பதப்படுத்து வதற்காக நீரில் நனைத்து பின்பு கழிவு நீரை அப்படியே நிலத்தடியிலும் ஓடையிலும் விடுவதாக அந்த பகுதி மக்கள் புகார் கூறினர்.

    இதனால் செம்புளிசாம் பாளையம் பகுதியில் குடிநீர், பொது நிலத்தடி நீர், ஆழ்துளைக்கிணறின் நீர் மற்றும் சுற்றுவட்டார வேளாண்மை மக்களின் குடிநீர் ஆதாரங்களும் பகுதியில் உள்ளதால் கடுமையாக மாசடைய வாய்ப்புகள் உள்ளது என அவர்கள் கூறினர்.

    எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார விவ சாயிகள் ஏற்படும் இன்னல் களில் இருந்து பாதுகாத்து தடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அத்தாணி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இதனை அடுத்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அத்தாணி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அறவழியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தனர். அந்த மனுவின் நகலை எம்.எல்.ஏ.வுக்கும் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

    இதனை அடுத்து அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக அந்தப் பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி னார்.

    அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அத்தாணி பேரூராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.வெளியிடங்களில் இருந்து பொதுமக்க ளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் தென்னை நார் கழிவுகளை அத்தாணி பேரூராட்சி கிராமப் பகுதிகளில் மற்றும் விவசாய நிலங்களிலும் கொட்டி வைப்பதை தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்வ துடன் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படும் என பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பு பலகையில் வாசங்கள் எழுதப்பட்டுள்ளது.

    • மீண்டும் தக்காளி வரத்து குறைய தொடங்கியதால் நேற்று முதல் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது.
    • பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் கடந்த சில சில நாட்களாகவே தக்காளி வரத்து குறைந்ததன் எதிரொலியாக தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரி, பல்லடம், ஆந்திரா, பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து 7000 பெட்டிகள் வரை தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு வந்தது.

    இதனால் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் 70 வரை விற்பனையானது. பின்னர் மழை, புதிய விளைச்சல் இல்லாத காரணத்தால் தக்காளிகள் வரத்து குறைய தொடங்கியது. குறிப்பாக தாளவாடியில் இருந்து தக்காளி வரத்து குறைய தொடங்கியதால் விலை மெல்ல மெல்ல உயர்ந்து வந்தது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு ரூ.160 -க்கு விற்பனையானது. இதன் காரணமாக பெண்கள் தக்காளி வாங்குவதை குறைத்து கொண்டனர். ஓட்டல் உரிமையாளர்கள் ஓட்டல்களில் தக்காளி சட்னி போடுவதை நிறுத்திவிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் தக்காளி வரத்து ஓரளவுக்கு வந்ததால் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனையானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் தக்காளி வரத்து குறைய தொடங்கியதால் நேற்று முதல் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது. இன்று வ.உ.சி. மார்க்கெட்டிற்கு ஆந்திரா, பெங்களூரில் இருந்து மட்டும் 1000 பெட்டி தக்காளிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதனால் தக்காளி விலை இன்று அதிகரித்து ஒரு கிலோ சில்லரை விற்பனையில் ரூ.150-க்கு விற்பனையானது.

    இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளதால் ஓட்டல் உரிமையாளர்களும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 

    ×