சட்டவிரோதமாக மது விற்ற 9 பேர் கைது

சட்ட விரோதமாக அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.32 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமாக மது விற்ற 9 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக அரசு அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வரப்பாளையம், கடத்தூர், ஈரோடு டவுண், கோபி போலீசார் அந்தந்த காவல் நிலையத்திற்குட்பட்ட சரகங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சட்ட விரோத மாக மது விற்றுகொண்டி ருந்த பெரிய சோமூர் ஆனந்தன் (49), ஈரோடு மாரப்பன் தெரு பூங்கோதை (38), சிங்கம்பேட்டை சரவ ணன் (58),

அம்மாபேட்டை சுப்பிரமணி (60), தர்மபுரியை சேர்ந்த அகிலன் (30), கருங்கல்பாளையத்தை சேர்ந்த கௌரி சங்கர் (37), ராயர்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்த 32 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பொதுமக்களுக்கு இடையூராக மது அருந்தி கொண்டிருந்த கோபி பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் (25), தமிழ ரசு (23) ஆகியோரை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com