என் மலர்tooltip icon

    ஈரோடு

    • விவசாயிகள் பருவத்திற்கேற்ற பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
    • நெற்பயிருக்கு தேவைப்படும் உரம் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    அம்மாபேட்டை:

    விவசாயிகள் தற்போ தைய சம்பா பருவத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகங்கள் பற்றி அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் கனிமொழி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம் மற்றும் ரகங்களே முக்கிய காரணிகளாக அமைகிறது. எனவே நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் பருவத்திற்கேற்ற பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    தற்போதைய சம்பா பருவத்தில் (ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) நெல் ரகங்களான கோ 52, ஐ.ஆர். 20, ஏடீடி 38, ஏடீடி 54, பிபிடி 5204, வுசுலு 3, தூயமல்லிஆகிய நெல் ரகங்களே இப்பருவத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

    மேற்குறிப்பிட்ட ரகங்கள் அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோ கிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் நெற்பயிருக்கு தேவைப்படும் நுண்ணூட்ட உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பை ரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவை களும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    எனவே தேவைப்படும் விவசாயிகள் மானிய விலையில் விதைகள் மற்றும் இடுபொருட்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்து இறந்து விட்டது.
    • ஆனந்த் கயிறு மூலம் மேலே ஏறிய போது கை நழுவி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை பி.ஆர்.எஸ்.ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனி செயல்படுகிறது. இங்கு கொளத்தூர் சவேரியர்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த ஆனந்த் (35) என்பவர் தங்கி பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கம்பெனி வளாகத்தில் உள்ள கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்து இறந்து விட்டது. இதனையடுத்து பூனையை கிணற்றில் இறங்கி எடுத்துள்ளார்.

    பூனையினை எடுத்து விட்டு ஆனந்த் கயிறு மூலம் மேலே ஏறிய போது கை நழுவி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

    பின்னர் உடனிருந்த ராஜேந்திரன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் ஆனந்தினை கிணற்றில் இருந்து மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலே ஆனந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின்சாரம் சார்ந்த குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு ஈ.வி.என். சாலையில் உள்ள ஈரோடு நகரியம் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    கூட்டம் ஈரோடு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே இந்த கூட்டத்தில் ஈரோடு நகர் முழுவதும் சேர்ந்த மற்றும் கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம்,

    சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என மின் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீர்வளத்துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • கடந்த 21-ந் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் வழித்தடத்தில், வாய்க்காலில் இறங்கி தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் அமைக்க, பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீர்வளத்துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அரசு உத்தரவுக்கு மாறாக மண் கரைகளை சேதப்படுத்தியும், மரங்களை வெட்டியும், அரசு அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் செயல்பட்டு வருவதைக் கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுக்காப்பு இயக்கத்தினர் கடந்த 21-ந் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் வழித்தடத்தில், வாய்க்காலில் இறங்கி தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்று காலை ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த எலத்தூர், செட்டிபாளையம் பிரிவு கீழ்பவானி வாய்க்காலின் 19-வது மைலில் விவசாயிகள், கிராம மக்கள் வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆகஸ்ட் 15-ந் தேதி அன்று கீழ்பவானி வாய்க்காலில், பாசன நீர் திறந்துவிட வேண்டும், முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை எண்: 276ஐ அரசு உறுதியாக ரத்து செய்ய வேண்டும், 68 ஆண்டுகளாக உள்ள மக்களுக்கான மண் கரை மற்றும் மண் அணையை பாதுகாக்க வேண்டும், கரைகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் கசிவு நீர் பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    • பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பானது சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் ஆலைக்கு எடுத்து செல்வது வழக்கம்.

    இதேபோல் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள வெள்ளாள பாளையம் பகுதியில் இருந்து வந்த கரும்பு லாரி அதிக பாரம் ஏற்றி வந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி செல்லும் சாலையில் சத்தியமங்கலம் முக்கிய வீதியில் கரும்பு பாரம் திடீரென ரோட்டில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ஆனாலும் நடுரோட்டில் கரும்பு சரிந்து விழுந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.

    பிறகு சிறிது நேரத்தில் கரும்புகளை முற்றிலு மாக அகற்றி கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை தனியார் ஆலைக்கு அனுப்பி வைத்தனர்.

    • ஒற்றை யானையை பூங்காக்குள் மெதுவாக ஜாலியாக நடந்து சென்றது.
    • பவானி ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் வழியாக பவானி சாகர் வனப்பகுதிக்குள் சென்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் வனச்சரகத்து க்குட்பட்ட பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தினமும் யானைகள் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி அணையின் மேல் பரப்பில் இருந்து அணைப்பகுதிக்கு வந்து தண்ணீர் குடிப்பது வாடிக்கையாகி வருகிறது.

    அதேபோல் இன்று காலை 7 மணியளவில் பவானிசாகர் வனப்பகுதி யில் இருந்து பவானிசாகர் அணை பகுதிக்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்த ஒற்றைக்காட்டு யானை அணையின் மேல் பகுதியில் அப்படியே நடந்து வந்து பவானிசாகர் அணை பூங்காவில் நுழைந்தது.

    இதைப்பார்த்து பூங்கா ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். காலை 7 மணி அளவில் யானை வந்ததால் பயணிகள் யாரும் உள்ளே இல்லை. இதனால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. பின்னர் ஒற்றை யானையை பூங்கக்குள் மெதுவாக ஜாலியாக நடந்து சென்றது.

    பின்னர் யானை மெல்ல மெல்ல பூங்காவில் உணவு கிடைக்குமா என அங்கும் இங்கும் அலை மோதி கடைசியாக ஒரு வழியில் பூங்காவில் நுழைவாயில் இருந்து வெளியே வந்தது. வெளியே வந்த யானை பூங்காவின் எதிரே உள்ள கடைகளுக்கு சென்று ஏதாவது உணவு கிடைக்குமா என தேடி பார்த்தது. அப்போது கடைகள் மூடி இருந்ததால் அவை ஒன்றும் செய்யாமல் சென்றுவிட்டது.

    பின்னர் சிறிது நேரம் அங்கும், இங்கும் பார்த்துவிட்டு பிறகு பவானி ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் வழியாக பவானி சாகர் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • பெரிய புலியூர் பகுதிக்கு சென்று வர பாலம் அமைத்து தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்
    • இந்த பகுதியில் விவசாய நிலங்கள், ஏராளமான குடி யிருப்புகள், விசைத்தறி க்கூடங்கள் உள்ளன.

    ஈரோடு,

    ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொது மக்கள் தங்களுடைய பிரச்ச னைகள் குறித்து கலெக்ட ரிடம் மனுக்களை வழங்கினர். அப்போது பெரிய புலியூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அ வர்கள் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் மாருதி நகர், அம்மன் நகர் உட்பட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் செல்ல பள்ளம் ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பகுதியில் விவசாய நிலங்கள், ஏராளமான குடி யிருப்புகள், விசைத்தறி க்கூடங்கள் உள்ளன. எனவே இப்பகுதி மக்களுக்கு பாலம் அமைத்துக் கொடு த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில்  குப்பை வரிைய நீக்க வலியுறுத்தி மேயரிடம் கவுன்சிலர்கள் மனு அளித்தனர்
    • மாநகராட்சி சம்பந்தமான வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக 23 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    ஈரோடு,

    ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில் இன்று மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. மேயர் நாகரத்தினம் சுப்பிர மணி தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் ஆகி யோர் முன்னிலை வைத்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருளை விளக்கி கூறினார். அதைத் தொடர்ந்து மாநகராட்சி சம்பந்தமான வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக 23 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்ச னைகள் குறித்து விரிவாக பேசினர். அப்போது 40-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் குமார் பேசும்போது, 40 -வது வார்டில் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த பாரதியார் நூலகம் உள்ளது. நூற்றாண்டு கண்ட நூலகம். இதில் தான் மகாகவி பாரதியார் 1921 -ம் ஆண்டு மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் தனது இறுதி உரை ஆற்றினார். இந்த சிறப்புமிக்க நூல கத்தில் அருங்காட்சியகமும் உள்ளது. இந்த சிறப்புமிக்க நூலகம் நீண்ட நாட்களாக சிதிலடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    இதை நிர்வாகிப்பது பராமரிப்பது பொது பணி துறை. இது குறித்து அவர்களிடம் பல முறை முறையிட்டும் கடிதம் கொடுத்தும் பயன் இல்லை. இந்த நூலகத்தை மாநகரா ட்சியே நிர்வாகிக்க வேண்டும் என 2-வது முறையாக கோரிக்கை வைக்கிறேன் என்றார். தொடர்ந்து காங்கிரஸ் கவுன்சிலர் சபுராமா சாதிக் கூறும்போது, எனது வார்டில் உள்ள குந்தவை வீதியில் உள்ள ரோடு மிகவும் குண்டு குழியுமாக மோசமாக உள்ளது. அந்த ரோட்டை உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து மாநகராட்சியில் உள்ள அனைத்து கவுன்சிலர்களும் ஒன்றிணைந்து மாநகராட்சி யில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரிகளை நீக்க வலியுறுத்தி மேயர் நாக ரத்தினத்திடம் மனுக்கள் கொடுத்தனர். 

    • சென்னிமலை அருகே கணவனை கொலை செய்த பெண் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்
    • இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு,

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதூர் நஞ்சியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (63). இவரது மனைவி ஈஸ்வரி (58). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தாராபுரம் மற்றும் தர்மபுரி யில் அவர்களது கணவருடன் வசித்து வருகின்றனர்.பாலுவும், ஈஸ்வரியும் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் சென்னி மலை நாமக்கல்பாளை யத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தனர். பாலு அப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

    மதுவுக்கு அடிமையான பாலு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி ஈஸ்வரியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போதை யில் வீட்டுக்கு வந்த பாலு ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி வீட்டில் இருந்த அரிவாளால் பாலுவை வெட்டி கொலை செய்தார். பின்னர் அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஈஸ்வரியை கைது செய்தனர். போலீசார் ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஈஸ்வரி போலீ சாரிடம் கூறும்போது, எனது கணவர் பாலு தினமும் மது அருந்தி விட்டு இரவில் வீட்டுக்கு வந்து என்னை அடித்து துன்புறு த்துவார். இதனால் நான் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்தேன். இந்நிலையில் நேற்று முன்தினமும் மது அருந்திவிட்டு வந்து என்னை அடித்து து ன்புறுத்தினார். இதனால் ஆத்திரத்தில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்றார்.இதை அடுத்து ஈஸ்வரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.

    • ஈரோட்டுக்கு வரும் ரெயில் ரத்து செய்யபட்டுள்ளது
    • திருச்சியில் இருந்து இரவு 7 மணிக்கு கிளம்பி ஈரோடு வரும் ரெயில் (06611) இன்று ஒரு நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது

    ஈரோடு,

    திருச்சி ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் கடந்த 23-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் திருச்சியில் இருந்து இயக்கப்படும் சில ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரெயில்கள் மாற்று பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சியில் இருந்து இரவு 7 மணிக்கு கிளம்பி ஈரோடு வரும் ரெயில் (06611) இன்று ஒரு நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோட்டில் இருந்து மதியம் 1:35 மணிக்கு திருநெல்வேலி செல்லும் ரயில் (16845) இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே, சேலம் கூட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நம்பியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிலதரகர் பலியானார்
    • சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

    நம்பியூர்,

    ஈரோடு மாவட்டம், நம்பியூர், குருமந்தூர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (70). நிலதரகர். இவரது மனைவி மாசிலாமணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தெய்வ சிகாமணி காளி யம்மன் நகர், குருமந்தூர் மேடு பகுதி யில் காலைக்கடன் கழிப்ப தற்காக ரோட்டில் இடது புறம் நின்று கொண்டி ரு ந்தார். அப்போது அந்த வழி யாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக தெய்வசி காமணி மீது மோதியது.

    இதில் அவருக்கு தலை யில் பலத்த காயம் மற்றும் இடது தொடையில் வலது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இற ந்தார். விபத்தை ஏற்படு த்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து நம்பியூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. விபத்து குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தின் அருகே பொரு த்தப்பட்டி ருக்கும் சிசி.டி.வி. கேமரா காட்சி களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது
    • பிளாஸ்டிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணி கள் வந்து செல்கிறார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கண க்கான பொதுமக்கள் குடு ம்பத்துடன் வந்து தடுப்ப ணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறை விடப்பட்டதால் சனி, ஞாயிறு மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்து டன் வந்து சென்றனர்.

    இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கொடி வேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கூடுவதும், குறைவ துமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். நேற்று முன்தினம் சனக்கிழ மை பொதுமக்களின் கூட்டம் குறைந்த அளவே இருந்தனர். இதே போல் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்ப் பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காண ப்பட்டது.

    இதற்கிடையே கொடி வேரிக்கு வரும் பொதுமக்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். போலீசார் கொடிவேரி அணைக்கு செல்லும் பகுதியில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பொதுமக்கள் பிளாஸ்க் பொருட்கள் எடுத்து செல் கிறார்களா? என்றும் மது மற்றும் தடை செய்ய்ப்பட்ட பொருட்கள் எடுத்து செல்கிறார்களா? என சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். மேலும் போலீசார் சுற்றுலா பயணி கள் கொண்டு சென்ற பிளா ஸ்டிக் மற்றும் தடை செய்ய ப்பட்ட பொருட்களை பறி முதல் செய்த பிறகே அனு ப்பி வைத்தனர்.

    ×