என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாராயம் காய்ச்சிய முதியவர் கைது
    X

    சாராயம் காய்ச்சிய முதியவர் கைது

    • சாராயம் காய்ச்சிய முதியவர் கைது செய்யபட்டார்
    • 20 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யபட்டது

    ஈரோடு,

    ஈரோடு அடுத்த வடமுகம் வெள்ளோடு ராக்கசாம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த தென்முக வெள்ளோடு பகுதியை சேர்ந்த கண்ணையா என்ற பெரியசாமி (வயது 60) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த பிளாஸ்டிக் பேரலில் உள்ள 20 லிட்டர் சாராய ஊறல், ஏற்கனவே காய்ச்சி வைக்கப்பட்டிருந்த 1 லிட்டர் சாராயம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×