என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரண்ட் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த கார்
    X

    கரண்ட் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

    • கரண்ட் கம்பத்தில் மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்தது
    • அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த இரண்டு பேரும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்

    பெருந்துறை,

    பெருந்துறை, கோவை மெயின் ரோடு பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் ரோட்டோர கரண்ட் கம்பத்தில் மோதிய கார், சாக்கடை பள்ளத்துக்குள் இறங்கி விபத்துக்குள்ளானது.திருப்பூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக நேற்று அதிகாலை இரண்டு நபர்கள் காரில் வந்தனர். இந்த கார் பெருந்துறை, கோவை மெயின் ரோடு, கோட்டை முனியப்பன் கோவில் அருகே வந்த பொழுது ரோட்டின் குறுக்கே ஒரு நாய் வந்துள்ளது. அந்த நாயின் மீது மோதாமல் தவிர்க்க காரின் டிரைவர், காரை இடது புறமாக திருப்பிய போது திடீரென நிலை தடுமாறு ரோட்டோரத்தில் இருந்த கரண்ட் கம்பத்தில் மோதி அருகில் உள்ள சாக்கடை பள்ளத்துக்குள் இறங்கி நின்றது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த இரண்டு பேரும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர் இந்த விபத்தில் கரண்ட் கம்பம் முழுவதுமாக முறிந்து போய், காரின் முன் பகுதியில் மீது விழுந்தது. இந்த சம்பவத்தால் காலை வேளையில் பெருந்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×