என் மலர்
கடலூர்
விருத்தாசலம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் பெண்ணை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்ற அய்யாக்கண்ணு மனைவி தனலட்சுமி தரப்பினருக்கும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வரதராஜன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் அய்யாக்கண்ணுவின் ஆதரவாளரான ரவி மனைவி சுமதி(வயது 40) என்பவரின் வீட்டிற்கு சென்ற வரதராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்களான 15 பேர், சுமதியை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரது வீடு மற்றும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் வரதராஜன் உள்பட 16 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்யராஜ் மனைவி சபிதா(31), பூபாலன் மனைவி நவ ஜெயா(26), சிவப்பிரகாசம் மனைவி சுந்தரி(36), தாமோதரன் மனைவி சசிரேகா(38) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் 4½ மாதங்களுக்கு பிறகு நேற்று உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது.
கடலூர்:
கொரோனா ஊரடங்கால் கடந்த 4½ மாதங்களாக மூடப்பட்டு இருந்த உடற்பயிற்சி கூடங்களை திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து, தமிழகத்திலும் 10-ந் தேதி (அதாவது நேற்று) முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
மேலும் உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதில், 50 வயதுக்கு மேற்பட்டோர், உடல் நலக்குறைவு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 15 வயதுக்கு குறைவான குழந்தைகளை உடற்பயிற்சி கூடங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. உடற்பயிற்சியின்போது அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன.
அதன்படி, தமிழகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் 4½ மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன. இது உடற்பயிற்சி செய்பவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் நேற்று அதிகாலை முதலே சுறுசுறுப்படைந்தன. பயிற்சியாளர்களும், நீண்டநாட்களுக்கு பிறகு உடற்பயிற்சி செய்ய வந்தவர்களுக்கு உற்சாகமாக பயிற்சி அளித்தனர்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் ஒருவர் கூறியதாவது:-
கிட்டத்தட்ட 4½ மாதங்களாக உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருந்தன. தற்போது, உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டாலும் முழுமையான அளவில் இயங்குவதற்கு இன்னும் 2 மாதங்களாவது ஆகும். எனவே, இந்த ஆண்டுக்கான வருமானம் பெரிதும் பாதிப்படைந்து உள்ளது.
எங்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு, இதயத்துடிப்பு அளவீடுகள் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கிறோம். ஒவ்வொரு கட்ட பயிற்சிக்கு பின்னரும், உடற்பயிற்சி தளவாடங்கள் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்படுகிறது. எனவே, உடற்பயிற்சி செய்ய வருபவர்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். மேலும் புதிய உச்சமாக ஒரே நாளில் 18 டாக்டர்கள் உள்பட 287 பேருக்கு தொற்று உறுதியானது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4,779 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2,599 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 62 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சமாக 287 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இவர்களில் கடலூர், கீரப்பாளையம், குமராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 டாக்டர்கள், சிதம்பரம், கடலூர், குமராட்சி பகுதியை சேர்ந்த செவிலியர்கள் 5 பேர், லேப் டெக்னீசியன் 2 பேர், மருந்தாளுனர் ஒருவர், களப்பணியாளர்கள் 5 பேர், மருத்துவமனை ஊழியர் ஒருவர், 3 போலீஸ்காரர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 3 பேருக்கு தொற்று உறுதியானது.
இதேபோல் சென்னை, மும்பை, துபாயில் இருந்து கடலூர் மாவட்டம் வந்த 9 பேருக்கும், 9 கர்ப்பிணிகளுக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி ஒருவருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 62 பேருக்கும், விருத்தாசலம் சிறை கைதி ஒருவருக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 167 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,066 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே மாவட்டத்தில் வாலிபர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிதம்பரத்தை சேர்ந்த 81 முதியவரும், திட்டக்குடியை சேர்ந்த 60 வயது பெண்ணும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 137 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 1,547 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47 புள்ளி 50 அடியை எட்டியுள்ளது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47 புள்ளி 50 அடியை எட்டியுள்ளது.
முழுமையாக நிரம்பியுள்ள வீராணம் ஏரியில் கடல் அலைகள் போல் எழும்பும் அலைகள் தடுப்பு கட்டைகளில் மோதி செல்கிறன. இந்த ரம்மியமான காட்சியை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நின்று ரசித்து செல்கின்றனர்.

5 ஆண்டுகளுக்கு மேல் தவணை செலுத்தாமல் காலாவதியான தபால் மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வருகிற 31-ந்தேதிக்குள் பாலிசிதாரர்கள் புதுப்பித்துக்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5 ஆண்டுகளுக்கு மேல் தவணை செலுத்தாமல் காலாவதியான தபால் மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வருகிற 31-ந்தேதிக்குள் பாலிசிதாரர்கள் புதுப்பித்துக்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் புதுப்பிக்க இயலாது. எனவே காலாவதியான பாலிசிகள் இருந்தால் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் குறித்த விவரம் தேவைப்படுவோர் கிளை, துணை தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் அலுவலர்களை அணுகி, தாங்கள் நலமுடன் இருப்பதற்கான மருத்துவ சான்றிதழ், எழுத்துப்பூர்வமான விண்ணப்பத்தை அளித்து பாலிசியை புதுப்பித்துக்கொள்ளலாம்.
புதுப்பிக்கப்படாத பாலிசிகளை பின்னர் எப்பொழுதும் புதுப்பிக்க இயலாது. அவை விதிமுறைகளின் படி ரத்து செய்யப்பட்டதாகவே கருதப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பை பாலிசிதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடலூர் பெண் சர்வேயர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 4,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 2,502 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,071 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடலூர் பெண் சர்வேயர் ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பெண் சர்வேயர் ராஜேஸ்வரி உடன் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலருக்கும், கிராம உதவியாளருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூரில் விவசாயி வீட்டின் பின்பக்க தகவை உடைத்து 15 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர். நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அருள்ராஜா, விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 29). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் தம்பிப்பேட்டையில் உள்ள விளை நிலத்திற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.4½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து விஜயலட்சுமி, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரப்பாளையம் ஒன்றியத்தில் வீடு, கழிப்பறை கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
கடலூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட வடஹரிராஜபுரம், பரதூர் ஊராட்சி உள்பட பல்வேறு ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மேலும் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வீடு கட்டும் திட்டத்திலும், கழிவறை கட்டும் திட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அதாவது பயனாளி வீடு கட்டாமலேயே அவர் வீடு கட்டியதாக பணத்தை வேறு ஒருவர் வங்கிக்கணக்கில் செலுத்தி மோசடி செய்து எடுத்துள்ளனர். ஆகவே இந்த முறைகேடுகளை விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கடலூர் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து கஞ்சா விற்பவர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாத் தலைமையில், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோரை கொண்ட தனிப்படையை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நெல்லிக்குப்பம் ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், நெய்வேலி இந்திராநகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் முனீஸ் என்கிற முனுசாமி (வயது 23), பில்லாலிதொட்டியை சேர்ந்த ஞானவேல் மகன் விமல்ராஜ்(25), அய்யனார் மகன் ஆனந்தராஜ்(24), கலியவரதன் மகன் பிரதீப்ராஜ்(21), கே.என்.பேட்டையை சேர்ந்த வேல்முருகன் (35) என்பதும், கடலூர் கே.என்.பேட்டை மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, காராமணிக்குப்பம் சந்தை பகுதியில் பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காராமணிக்குப்பம் வாரச்சந்தையில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் 5 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநத்தம் அருகே மனைவி திட்டியதால் தச்சுத்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநத்தம்:
ராமநத்தம் அடுத்த வடகராம்பூண்டியை சேர்ந்தவர் அழகுவேல் மனைவி கருப்பாயி (வயது 42). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கருப்பாயியுடன் பழகி வந்த சிலரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதன்படி மேலக்கல்பூண்டியை சேர்ந்த தங்கராசு மகன் தச்சுத்தொழிலாளி சுப்பிரமணியன் (48) என்பவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் ஏன் தேவையில்லாமல் கருப்பாயியுடன் பழகி வந்தாய். இதனால் தற்போது பிரச்சினை வந்துள்ளது என்று கூறி சுப்பிரமணியனை அவருடைய தந்தை தங்கராசு, மனைவி அம்சவள்ளி ஆகியோர் திட்டியதாக தெரிகிறது.
இதில் மனமுடைந்த சுப்பிரமணியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலியில் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்றுவிட்டு அச்சத்தில் என்.எல்.சி. பாதுகாப்பு படை வீரரும் தற்கொலை செய்து கொண்டார்.
நெய்வேலி:
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் எக்கேலா கணபதி(வயது 33). இவர் நெய்வேலி வட்டம் 22-ல் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் தங்கியிருந்து என்.எல்.சி.யில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சந்தோஷி (24). இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. எக்கேலா கணபதி நேற்று காலை 6 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும். ஆனால் அவர் செல்லவில்லை. இதையடுத்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை பொறுப்பு அதிகாரி, எக்கேலா கணபதியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து அவர் சந்தேகத்தின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் எக்கேலா கணபதியின் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. போலீசார் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து போலீசார் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது அங்கு ஒரு அறையில் எக்கேலா கணபதி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு சந்தோஷி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 பேரும் சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எக்கேலா கணபதி தனது மனைவி என்றும் பாராமல் மின்ஒயரால் கழுத்தை இறுக்கி சந்தோஷியை கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியை கொன்றுவிட்ட அச்சத்தில் அவர் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சக்திகுமார் அளித்த புகாரின் பேரில் இவர்களது சாவுக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை கொன்று விட்டு என்.எல்.சி. மத்திய பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தடை உத்தரவு எதிரொலியாக 43 சுருக்குமடி வலைகள், படகுகளை மாவட்ட கலெக்டரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர். மேலும் மாற்று வாழ்வாதார திட்டத்தில் பயன்பெற விருப்பம் தெரிவித்து மனு அளித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 57.5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை மற்றும் 49 மீனவ கிராமங்களை கொண்டது. இவற்றில் சுமார் 49 ஆயிரம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இதில் 24 ஆயிரத்து 480 மீனவர்கள் நேரடியாக மீன்பிடித் தொழிலும், 15 ஆயிரம் மீனவ மகளிர் மீன்பிடிப்பு சார்ந்த தொழிலையும் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது 250 மீன்பிடி விசைப்படகுகளும், 2 ஆயிரத்து 950 எந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி நாரிழைப்படகுகளும், 868 நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இருப்பினும் சில மீனவர்கள் சுய நலத்துடன் சுருக்குமடி வலைகளை கொண்டு ஒரே நேரத்தில் அதிகளவில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் பயன்பாட்டினை தடுத்திடும் நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு கடலூர் சப்-கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகளை கண்காணித்து, களஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வந்தனர். இது தவிர தமிழக அரசு வழங்கும் மாற்று வாழ்வாதார திட்டங்களான, 40 சதவீத மானியத்துடன் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் வழங்கப்படும், 50 சதவீத மானியத்துடன் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மாநில அரசு திட்டத்தின் கீழ் செவுள்வலை மற்றும் தூண்டில் ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் வழங்கப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள இழுவலை படகுகளை ரூ.15 லட்சம் மானியத்துடன் செவுள் வலை படகுகளாக மாற்றும் திட்டம் பற்றியும் கூறப்பட்டது.
இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவ கிராமங்களில் உள்ள சுருக்குமடி வலை படகுகளில் முதற்கட்டமாக ரூ.6 கோடியே 65 லட்சம் மதிப்பிலான 19 சுருக்குமடி வலை படகுகள் (ஒரு படகின் தோராய மதிப்பு ரூ.35 லட்சம்) மற்றும் ரூ.7 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 24 சுருக்குமடி வலைகளையும் (ஒரு சுருக்குமடி வலையின் தோராய மதிப்பு ரூ.30 லட்சம்) ஆக மொத்தம் ரூ.13 கோடியே 85 லட்சம் மதிப்பிலான படகு மற்றும் வலைகளை நேற்று சோனாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அரசிடம், அதாவது மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் ஒப்படைத்தனர். இதை எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தனர்.
அப்போது மாற்று திட்டத்தில் ஏதேனும் ஒன்றில் பயன் பெற உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் மற்ற மீனவர்கள் பயன்படுத்தும் சுருக்குமடி வலைகளையும் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தினர். இதை கேட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி, ஆய்வாளர் மணிகண்டன், சார் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.