search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காலாவதியான தபால் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள்

    5 ஆண்டுகளுக்கு மேல் தவணை செலுத்தாமல் காலாவதியான தபால் மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வருகிற 31-ந்தேதிக்குள் பாலிசிதாரர்கள் புதுப்பித்துக்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    5 ஆண்டுகளுக்கு மேல் தவணை செலுத்தாமல் காலாவதியான தபால் மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வருகிற 31-ந்தேதிக்குள் பாலிசிதாரர்கள் புதுப்பித்துக்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் புதுப்பிக்க இயலாது. எனவே காலாவதியான பாலிசிகள் இருந்தால் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் குறித்த விவரம் தேவைப்படுவோர் கிளை, துணை தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் அலுவலர்களை அணுகி, தாங்கள் நலமுடன் இருப்பதற்கான மருத்துவ சான்றிதழ், எழுத்துப்பூர்வமான விண்ணப்பத்தை அளித்து பாலிசியை புதுப்பித்துக்கொள்ளலாம்.

    புதுப்பிக்கப்படாத பாலிசிகளை பின்னர் எப்பொழுதும் புதுப்பிக்க இயலாது. அவை விதிமுறைகளின் படி ரத்து செய்யப்பட்டதாகவே கருதப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பை பாலிசிதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×