என் மலர்
கடலூர்
அந்த வகையில் தமிழ் மாதத்தில் மார்கழி மாதத்தில் போடும் கோலத்திற்கு தனி சிறப்பு உண்டு. ஏனெனில் தமிழ்கால கணிப்பு முறைப்படி ஆண்டின் 9-வது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனுசு ராசியில் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாட்கள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவை தான் மார்கழி மாதம் குறிக்கிறது.
மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் எனவும் குறிப்பிடுகின்றனர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இந்த மாதத்தில் அனைத்து கோவில்களிலும் அதிகாலை 4 மணிக்கு திறந்து திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி போன்ற பல்வேலு பூஜைகள் நடை பெறுவது வழக்கம்.
அதன்படி மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கடலூர் புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவில், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடலூர் முதுநகர் அருகே உள்ள சங்கொலிக்குப்பம் இருளர் நகரை சேர்ந்தவர் ரவி மகன் சதீஷ் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராஜாராம் மகன் ராமமூர்த்தி (24), ராஜேந்திரன் மகன் குமார் (25). இவர்கள் 3 பேரும் கடலூர் முதுநகர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சதீஷ் ஓட்டினார். சங்கொலிக்குப்பம் அருகில் சென்ற போது, எதிரே வேகமாக வந்த கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த சதீஷ், ராமமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பலியான 2 பேரின் உடல்களை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டது.அந்த பஸ்சில் கண்டக்டராக கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வீரமணி(வயது 27). என்பவர் இருந்தார்.
அந்த பஸ்சில் கோமங்கலம் பகுதியை சேர்ந்த கண்ணப்பன் 47). பயணம் செய்தார். கண்ணப்பனிடம் டிக்கெட் எடுக்குமாறு வீரமணி கூறினார்.அதற்கு கண்ணப்பன் நான் டிக்கெட் எடுக்க மாட்டேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து கண்டக்டர் வீரமணி பஸ்சை நிறுத்தி கண்ணப்பனை பஸ்சில் இருந்து இறங்குமாறு கூறினார்.அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வீரமணி, கண்ணப்பனை சரமாரியாக தாக்கி பஸ்சில் இருந்து கீழே தள்ளினார்.பின்னர் கண்ணப்பனை சரமாரியாக தாக்கி விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு வீரமணி அழைத்துச் சென்றார்.
இதனை அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் வீரமணியை கைது செய்தனர். கண்டக்டரால் தாக்கப்பட்ட பயணி கண்ணப்பன் மன நிலை பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அருகே பொன் நகர் சாமிசெட்டிபட்டி போலீஸ் சரகம் போலன நல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பனிமலர் (வயது 30). திருநங்கையான இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் சிதம்பரம் அருகே உள்ள மணலூரில் வசித்து வந்தார்.
இன்று அதிகாலை பனிமலர் பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் பகுதியில் உள்ள தைலக்காட்டில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
அவரது முகம், உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. அவரை மர்மநபர்கள் கொலை செய்து வீசி சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு பிணமாக கிடந்த திருநங்கை பனிமலர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
என்றாலும், பனிமலரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 64 ஆயிரத்து 467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சென்னையில் இருந்து விருத்தாசலம் வந்த ஒருவருக்கும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிதம்பரத்தை சேர்ந்த ஒருவருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த குமராட்சி, நெய்வேலியை சேர்ந்த 3 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதுவரை 873 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நேற்று ஒருவர் பலியானார். இதன் விவரம் வருமாறு:-
பண்ருட்டியை சேர்ந்த 78 வயது முதியவர் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா பாதித்த 56 பேர் கடலூர் மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும், 11 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி கலைச்செல்வி (வயது 60). இவர் சம்பவத்தன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிலம்பிநாதன்பேட்டைக்கு செல்லக்கூடிய பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் இருந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ, கலைச்செல்வி கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதில் பதறிய அவர், கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார். உடனே போலீசார், பஸ்சில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் நகையை பறித்து சென்ற நபர் குறித்து தெரியவில்லை. பறிபோன நகையின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து கலைச்செல்வி, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம் இன்று (11-ந் தேதி) காலை நடைபெற்றது. கோவிலின் சித்ர சபை எதிரே உள்ள கொடி மரத்தில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்நிறுத்தி ஆவாஹனம் செய்து காலை 8.20 மணி அளவில் கொடியேற்றப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்க படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கபட்டிருந்தது.
இன்று அதிகாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 4 கோபுரவாசல்களும் வழக்கம் போல் திறக்கபட்டு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபட்டு வந்தனர்.
ஆருத்ரா தரிசன விழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்பதால் அந்த சமயத்தில் கோவிலின் 4 கோபுர வாசல்களிலும் தடுப்புகள் அமைத்து கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆருத்ரா தரிசன விழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆருத்ரா தரிசன விழா கொடியேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நாளை (12-ந் தேதி) வெள்ளி சந்திர பிரபை வாகன வீதிஉலா, 13-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதிஉலா, 14-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதிஉலா, 15-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 16-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், 17-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா 18-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 19-ந் தேதி கோவில் உள்பிரகாரத்தில் நடக்கிறது. இதற்கும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
20-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்ரசபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்ரசபா பிரவேசமும் நடைபெறுகிறது.
21-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். உற்சவத்தின் 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்ரசபை முன்பு மாணிக்க வாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் கே.ரவி தலைமை தாங்கினார். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், தாசில்தார் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில் நவமணி தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர், ஆலய பாதுகாப்பு சங்க நிர்வாகி செங்குட்டுவன், பா.ஜ.க. நிர்வாகி பாலகிருஷ்ணன், சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோட்டாட்சியர் ரவி பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், கோவில்களில் பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபடலாம் என்றும், கோவில் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது.
அதனால் தற்போது நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை கோவிலுக்குள் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. கொடியேற்றம் நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசனின் மனைவி பவானி அம்மாள் இன்று காலமானார்.
இவரது சொந்த ஊரான விருதாச்சலத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த அவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், பவானி அம்மாள் இன்று காலை உயிரிழந்தார்.
பவானி அம்மாளின் மறைவுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி வட்டாரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்.. ஆற்காடு அருகே ஆசிரியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
வேறு எந்த கோவில்களிலும் இந்த சிறப்பை காண இயலாது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா வருகிற 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
விழாவில் 15-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 19-ந்தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 20-ந்தேதியும் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கு மகா அபிஷேகமும், திருவாபரண அலங்காரமும், மாலை 4 மணி அளவில் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது.
வருகிற 21-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதியில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வசேகர். இவரது மகள் சிவன்யா (வயது 4). நேற்று சிறுமி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அப்போது அந்த வழியாக சேலம் மார்க்கத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சிறுமி சிவன்யா மீது மோதியது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அந்த சிறுமியை, அதே காரில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி சிவன்யா பரிதாபமாக உயிரிழந்தாள். இறந்த சிறுமியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து செல்வசேகர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்பகுதியை சேர்ந்தவர் பரணிதரன் (வயது 18). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்காக பல்கலைகழக வளாகத்தில் உள்ள தென்றல் இல்லத்தில் தங்கி உள்ளார்.
தற்போது விடுமுறைக்காக பரணிதரன் கரூர் சென்றார். அங்கிருந்து இன்று அதிகாலை ரெயில் மூலம் சிதம்பரம் ரெயில் நிலையம் வந்து இறங்கினார். அங்கிருந்து பல்கலை கழகத்துக்கு நடந்து சென்றார். அப்போது பரணிதரன் கொண்டுவந்த பை ஒன்றை ரெயில் நிலையத்தில் விட்டு விட்டார்.
இதனை எடுப்பதற்காக மீண்டும் ரெயில் நிலையத்துக்கு சென்றார். பையை எடுத்துக்கொண்டு பரணிதரன் விடுதி நோக்கி நடந்து சென்றார். அதிகாலை என்பதால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. விடுதி அருகே சென்ற போது மர்மநபர்கள் 3 பேர் வழிமறித்தனர்.
அவர்களை பார்த்ததும் பரணிதரன் அங்கிருந்து ஓட முயன்றார். உஷாரான மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து கண்மூடிதனமாக தாக்கினர். பின்னர் பரணிதரன் வைத்திருந்த ரூ.2,500 ரொக்கப்பணம் செல்போன் புளுடூத் ஆகியவற்றை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பரணிதரன் கூச்சலிட்டார். ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் பரணிதரனை சரமாரியாக குத்தினர். இதில் அவரது முதுகு, கை, தொடை பகுதியில் காயம் ஏற்பட்டதால் அலறிதுடித்தவாறு கீழே சரிந்தார்.
சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த பரணிதரன் சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.






