என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  கொரோனாவுக்கு முதியவர் பலி- புதிதாக 5 பேருக்கு பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா பாதித்த 56 பேர் கடலூர் மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும், 11 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  கடலூர்:

  கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 64 ஆயிரத்து 467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சென்னையில் இருந்து விருத்தாசலம் வந்த ஒருவருக்கும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிதம்பரத்தை சேர்ந்த ஒருவருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த குமராட்சி, நெய்வேலியை சேர்ந்த 3 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதுவரை 873 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நேற்று ஒருவர் பலியானார். இதன் விவரம் வருமாறு:-

  பண்ருட்டியை சேர்ந்த 78 வயது முதியவர் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா பாதித்த 56 பேர் கடலூர் மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும், 11 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  Next Story
  ×