என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது தந்தை இறந்த நிலையில் தாய் அம்சவள்ளி (வயது 40) என்பவருடன் வசித்து வருகிறார். அம்சவள்ளிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அம்சவள்ளி கூலிவேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், பண்ருட்டி அருகே புது பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த கார் டிரைவரான கார்த்திகேயன் (30) என்பவருடன் அம்சவள்ளிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த கள்ளக்காதலானது சுமார் 2 வருடமாக இருந்து வந்துள்ளது. இதனால், அம்சவள்ளியும், கார்த்திகேயனும் அடிக்கடி வெளியில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
நாளடைவில் கார்த்திகேயன் அம்சவள்ளி வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். அம்சவள்ளியின் மகள் ஆரம்பத்தில் கார்த்திகேயன், தனது தாயின் நட்பை சந்தேகம் கொள்ளவில்லை. அம்சவள்ளி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற கார்த்திகேயனுக்கு அவரது மகள் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரிடம் சென்று பேசியுள்ளார். ஆனால், அவர் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இவ்வாறு பேசுவதை கள்ளக்காதலன் நிறுத்தியதால் அவரது திட்டத்துக்கு சம்மதித்தார்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு அம்சவள்ளி தனது வீட்டில் மகளை பூட்டினார். சிறிது நேரத்தில் வந்த கள்ளக்காதலன் கார்த்திக்கேயனையும் வீட்டில் பூட்டி விட்டு வெளியே சென்றார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த கார்த்திக்கேயன் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், என்னை திருமணம் செய்து கொள். இதுகுறித்து யாரிடமும் கூறினால், வீடியோவை சமூக வலைத்தளத்தில் போட்டு விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி உடனே சென்னையில் உள்ள தனது சகோதரர்களுக்கு தெரிவித்து உள்ளார். பதறிப்போன அவர்கள் உடனே சொந்த ஊர் திரும்பினர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து தனது தங்கையிடம் கேட்டறிந்தனர்.
இதையடுத்து, அவரது அறிவுறுத்தலின் பேரில், சிறுமி இதுகுறித்து, பண்ருட்டி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிந்து கார்த்திகேயன், அம்சவள்ளி ஆகிய 2பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை காப்பகத்தில்ஒப்படைத்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புதுவெண்ணைகுழி கிராமத்தை சேர்ந்தவர் வேலு. அவரது மகள் கண்ணகி (வயது 20). இவர் விருத்தாசலம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார்.
கடந்த 18-ந் தேதி வீட்டைவிட்டு சென்ற கண்ணகி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கண்ணகியை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசில் கண்ணகியின் தாய் ராஜலட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கண்ணகியை தேடி வந்தனர். இதற்கிடையில் ரூபநாராயணநல்லூர் பகுதியில் உள்ள ஏரியில் இளம்பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான கல்லூரி மாணவி கண்ணகி என தெரியவந்தது. அவரது உடலில் பல இடங்களில் காயம் இருந்தது.
எனவே அந்த மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது உடல் முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் எப்படி இறந்தார் என்ற விபரம் தெரியவரும்.
மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமி வீதிஉலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி, 4 வீதியில் வலம் வந்து காட்சி தந்தனர்.
தேரோட்டம் முடிந்ததும் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் எழுந்தருளினார்கள். பின்னர் இரவு 11 மணி முதல் லட்சார்ச்சனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 4 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 5 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.
இதையடுத்து மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம் பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாலை 6.15 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர். அப்போது சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு தரிசனம் அளித்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் வல்லானே...! நடராஜ பெருமானே...!, சிவ, சிவ... ஓம் நமச்சிவாய என்று விண்ணை முட்டும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர். இதையடுத்து மாலை 5.30 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியும், நாளை (புதன்கிழமை) ஞானபிரகாசம் குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கோவில் வளாகத்துக்குள் தேர் மற்றும் தரிசன விழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றாலும் திருவிழா நடத்த அனுமதிகோரி பக்தர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.
அதன்படி கடந்த 11-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமிகள் வீதிஉலா நடத்தப்பட்டது. தற்போது ஒமைக்ரான் பரவி வருவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேர் மற்றும் தரிசன விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.
இதனையறிந்த சிவனடியார்கள், பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேர்த்திருவிழா, ஆருத்ரா தரிசன விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அனுமதி வழங்கினார்.
அதன் பின்னர் நேற்று காலை பக்தர்கள் புடைசூழ நடராஜர் கோவில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 4 ரதவீதிகளில் வலம் வந்த தேர் மாலையில் கீழரத வீதியில் நிலையை அடைந்தது.
நேற்று இரவு முழுவதும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று (20-ந் தேதி) அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது.
காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா காட்சி நடந்தது.
இன்று மாலை 3 மணியளவில் ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. இதையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் முன்னும் பின்னுமாக 3 முறை சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளிப்பார்கள்.
இதனையடுத்து நடன பந்தல் வழியாக சுவாமிகள் கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறும். பின்னர் சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள 4 ரத வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
நாளை (21-ந் தேதி) முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள நீர்முளை பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 68). இவரது மனைவி லலிதா (58).
இவர்கள் நேற்று நள்ளிரவு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு காரில் சென்றனர். காரை சென்னை ஆவடியை சேர்ந்த டிரைவர் கோதண்டம் (50) என்பவர் ஓட்டினார்.
இந்த கார் இன்று அதிகாலை 5 மணி அளவில் கடலூர் அருகே பச்சையாங்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராமல் சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதி நின்றது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே லலிதா, கார் டிரைவர் கோதண்டம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். ராமு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனை பார்த்த பொதுமக்கள் கடலூர் துறைமுகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர்.
இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமுவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று பா.ஜ. க. தேசிய செயலாளர் ராஜா சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் நடராஜர் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனித் திருமஞ்சன விழா, ஆருத்ரா தரிசன விழா ஆகிய திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாளை 19-ந் தேதி ,20ந் தேதியன்று தேர் திருவிழா நடைபெற இருந்தது. தமிழக கோவில்களில் நடைபெறும் தேர் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
சிதம்பரம் கோவிலில் தேர் ஓட வில்லை என்றால் அது அரசருக்கு தான் ஆபத்து. தற்போது அரசர் யார் என்று உங்களுக்கு தெரியும்.
கோவில் நகைகளை உருக்குவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறையினர் கோவில் நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர். அவர்கள் ஏன் தேவாலயங்கள் மற்றும் மசூதி ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தவில்லை.

சேலத்திற்கு முதல்அமைச்சர் சென்ற போது பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். கொரோனோ கட்டுப்பாடுகள் இருக்கும் போது முதல் அமைச்சர் விழாவில் பொதுமக்கள் கூடலாம். ஆனால் கோவில் விழாக்களில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. இது என்ன நியாயம்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கவில்லை என்றால் பக்தர்கள், இந்து அமைப்பினரை ஒன்று திரட்டி கோவிலின் முக்கிய வீதிகளில் முன்பு திரண்டு சிதம்பரம் நகரை ஸ்தம்பிக்க வைப்போம் இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...பெண்ணின் திருமண வயது உயர்வு - முஸ்லிம் லீக், சமாஜ்வாடி எதிர்ப்பு
இந்த திருவிழா குறித்து ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொடியேற்றம், ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தேரோட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் தினந்தோறும் சாமி வீதி உலாவும், 5-ம் நாள் உற்சவமான தெருவடைச்சான் உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதிலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் ரவி தலைமை தாங்கினார்.
இதில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தாசில்தார்ஆனந்த், ஆணையாளர் அஜிதா பர்வீன் மற்றும் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடராஜர் கோவிலில் தேர்திருவிழா ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் ஆயிரக்கால் மண்டபத்தில் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரி அம்மனும் வைக்கப்பட்டு, அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்.
அதே போல் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. ஆனால் தரிசனம் முடிந்த பிறகு மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்ய கீழ சன்னதி வழியாக, அனுமதிக்கப்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான உத்தரவை கோட்டாட்சியர் ரவி பிறப்பித்தார்.






