search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருத்தாசலம் மாணவி கொலை"

    கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதி படுகொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சென்னை:

    கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதி கடந்த 8-ந்தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, செல்வம், அன்புச்செழியன், அம்பேத் வளவன், ரவிசங்கர், ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவி திலகவதி படுகொலையை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவன் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி கடந்த மே 8-ந்தேதி காட்டுமிராண்டி கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதனை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நியாயப்படுத்த முடியாது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    படுகொலை செய்யப்பட்ட திலகவதியின் குடும்பத்தினருக்கு நீதி வழங்க வேண்டும். கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். திலகவதியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சாதி வெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவாண்டுதுறை கிராமத்தை சேர்ந்த இளைஞர் கொல்லி மலை சாதிய வெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது வாயில் மனித கழிவுகளை திணித்து கேவலமாக அநாகரீகமாக நடத்தி உள்ளார்கள். இது போன்ற சாதி வெறி கும்பல் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்கள் மீதான தாக்குதல் தொடருமானால் விடுதலை சிறுத்தைகள் பொறுத்துக் கொள்ளாது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
    விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கடலூர் கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 49), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கொளஞ்சி (43). இவர்களது மகள் திலகவதி (19).

    இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் இருந்த திலகவதியை பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் சரமாரியாக குத்தி கொன்றார்.

    இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற ஆகாசை கைது செய்தனர். பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கல்லூரி மாணவி திலகவதி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டு சென்றனர்.

    அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், மாணவியின் உடலை உறவினர்களிடம் கொடுத்தனர். ஆனால், அவர்கள் திலகவதியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

    கலெக்டர் அலுவலகம் வந்த கல்லூரி மாணவி திலகவதியின் தாய் கதறி அழுத காட்சி.

    மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு அதன் பின்னர் உடலை வாங்கி கொள்கிறோம் என்று, டாக்டர்களிடம் கூறினார்கள்.

    மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மாணவி திலகவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் தாமரைக்கண்ணன், அசோக்குமார், வக்கீல் தமிழரசன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று காலை 11 மணிக்கு வந்தனர்.

    பின்பு அங்கிருந்த கலெக்டர் அன்புச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோரிடம் மாணவி திலகவதியின் பெற்றோர் கண்ணீர் மல்க ஒரு மனுவை கொடுத்தனர்.

    அதன் பின்னர் அவர்கள் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். மேலும் மிரட்டலும் விடுக்கிறார்கள். குற்றவாளியான ஆகாசுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் அன்புச்செல்வன் கூறும்போது, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலை தொடர்பாக அரசுக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை உடனடியாக பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து மகளின் உடலை பெற்றுக் கொள்வதாக கூறி விட்டு சென்றனர்.
    விருத்தாசலத்தில் மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைதான வாலிபர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வீடியோவாக வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் திலகவதி (வயது 19).

    இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் இருந்த திலகவதியை பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டி கொன்றார்.

    இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற ஆகாசை கைது செய்தனர்.

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    கைது செய்யப்பட்ட வாலிபர் ஆகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கருவேப்பிலங்குறிச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அதனை தொடர்ந்து பா.ம.க.வினர் மற்றும் மாணவியின் உறவினர்கள் மற்றும் கருவேப்பிலங்குறிச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன், இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர்.

    மாணவி திலகவதி கொலை செய்யப்பட்டதை கண்டித்து கருவேப்பிலங்குறிச்சியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    இதற்கிடையே திலகவதியை கொலை செய்தது தொடர்பாக ஆகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீஸ்கரர் ஒருவர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் வாங்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    3.09 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் திலகவதியை பற்றியும், அவரை எப்படி தெரியும், கொலை செய்தது எப்படி என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளை போலீஸ்காரர் ஒருவர் கேட்பதும், அதற்கு ஆகாஷ் பதில் அளிக்கும் காட்சியும் அதில் இடம் பெற்று இருக்கிறது.

    போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் ரகசியமாக வாங்கப்பட்ட வாக்குமூலம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருப்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டு சென்றனர்.

    அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், மாணவியின் உடலை உறவினர்களிடம் கொடுத்தனர். ஆனால், அவர்கள் திலகவதியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

    மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு அதன் பின்னர் உடலை வாங்கி கொள்கிறோம் என்று, டாக்டர்களிடம் கூறினார்கள்.

    மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவியின் சொந்த ஊரான கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 50). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கொளஞ்சி.

    இவர்களது மகள் திலகவதி (19). இவர் விருத்தாசலம்- எருமனூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை சுந்தரமூர்த்தி வேலை தொடர்பாக வெளியூர் சென்று விட்டார். கொளஞ்சி மயிலாடுதுறையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.

    காலையில் மாணவி திலகவதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் அவர் தனியாக இருந்தார்.

    அந்த நேரத்தில் கருவேப்பிலங்குறிச்சி அடுத்த பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் வீட்டுக்குள் புகுந்தார். அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திலவதியின் உடலில் சரமாரியாக குத்தினார்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்த திலகவதி கூச் லிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையறிந்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி திலகவதியை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி திலகவதி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் அலறியடித்து கொண்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு பிணமாக கிடந்த மகளை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த கொலை குறித்து விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது மற்றும் போலீசார் திலகவதியின் குடும்பத்தினரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆகாஷை தீவிரமாக தேடிவந்தனர். இன்று அதிகாலை பேரளையூரில் பதுங்கி இருந்த ஆகாஷை போலீசார் பிடித்தனர். பின்பு அவரை விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஆகாஷ் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். பின்பு தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தது தெரிய வந்தது.

    மாணவியை ஆகாஷ் கொலை செய்ததற்கு ஒருதலை காதல் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×