search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பயணியை தாக்கிய கண்டக்டர் கைது

    விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பயணியை தாக்கிய கண்டக்டரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டது.அந்த பஸ்சில் கண்டக்டராக கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வீரமணி(வயது 27). என்பவர் இருந்தார்.

    அந்த பஸ்சில் கோமங்கலம் பகுதியை சேர்ந்த கண்ணப்பன் 47). பயணம் செய்தார். கண்ணப்பனிடம் டிக்கெட் எடுக்குமாறு வீரமணி கூறினார்.அதற்கு கண்ணப்பன் நான் டிக்கெட் எடுக்க மாட்டேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

    இதை தொடர்ந்து கண்டக்டர் வீரமணி பஸ்சை நிறுத்தி கண்ணப்பனை பஸ்சில் இருந்து இறங்குமாறு கூறினார்.அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வீரமணி, கண்ணப்பனை சரமாரியாக தாக்கி பஸ்சில் இருந்து கீழே தள்ளினார்.பின்னர் கண்ணப்பனை சரமாரியாக தாக்கி விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு வீரமணி அழைத்துச் சென்றார்.

    இதனை அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் வீரமணியை கைது செய்தனர். கண்டக்டரால் தாக்கப்பட்ட பயணி கண்ணப்பன் மன நிலை பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×