என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 4 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூர்கீழக் கொல்லைவீணீ சேர்ந்தவர் செந்தில்நாதன் கார் டிரைவர். இவரது மகன் அஸ்வின் (வயது 4).

    இந்த சிறுவனை நேற்று மதியம் 3 மணி முதல் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஊர்மக்கள் சிறுவனை பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காததால் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.

    கலீடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் முத்தாண்டிக்குப்பம் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ரஞ்சிதா என்பவர் இந்த சிறுவனை அழைத்துச்சென்றதாக தெரியவந்தது. இதனைதொடர்ந்து ஏராளமான போலீசார் மற்றும் ஊர் மக்கள் கிராமம் முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.

    சிறுவன் எங்கும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நள்ளிரவில் பண்ருட்டி-கும்பகோணம் சாலை கொள்ளுக்காரன் குட்டையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இரவு முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இன்று காலை அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் சிறுவன் அஸ்வின் பிணமாக கிடந்தான். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். இதுபற்றி அறிந்த பெற்றோரும் அங்கு விரைந்தனர். அவர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

    சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் உடலில் பலத்த காயங்கள் இருந்தது. எனவே அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. சிறுவனை கொலை செய்தவர்கள் யார்? எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனிடையே கொலை செய்யப்பட்டட சிறுவனை பக்கத்து வீட்டை சேர்ந்த இளம்பெண் ரஞ்சிதா என்பவர் அழைத்து சென்றதாக தெரியவந்து உள்ளது. உடனே அந்த பெண்ணை அழைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இதையொட்டி அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன், துணை தாசில்தார், வருவாய்ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பை அடுத்து உள்ள வளையமாதேவியைச் சேர்ந்தவர் வேல்முருகன். (வயது45). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரிவெட்டி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில், வேல்முருகன் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது.

    அதனை தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.

    கரிவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். அவரது மனைவி மகாலட்சுமி (40) என்பவருக்கும், கொலை செய்யப்பட்ட வேல்முருகனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சம்பவத்தன்று வேல்முருகன் கள்ளக்காதலி மகாலட்சுமி வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் மகாலட்சுமியை உல்லாசத்துக்கு அழைத்தார்.

    வேல்முருகன் போதையில் இருந்ததால் மகாலட்சுமி மறுத்துவிட்டார். இதனால் 2 பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் எதேச்சையாக மகாலட்சுமி திடீர் என வேல்முருகனை கீழே தள்ளினார். இதில் தலையில் அடிபட்ட வேல்முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி பயந்து போனார்.

    உடனே இந்த விசயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக வேல்முருகனின் நண்பர் ராமசந்திரனிடம் தெரிவித்தார். தனக்கு உதவி செய்தால் பணம் தருவதாக கூறி உள்ளார். இதனை நம்பிய ராமச்சந்திரன் அங்கு சென்றார். பின்னர் வேல்முருகன் உடலை 2 பேரும் தூக்கி கொண்டு பள்ளி வளாகத்தில் வீசி சென்று எதுவும் தெரியாதது போல் இருந்து உள்ளனர்.

    மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்து உள்ளது

    இதனையடுத்து சேத்தியாத்தோப்பு போலீசார் சந்தேக வழக்கை கொலை வழக்காகப் பதிந்து மகாலட்சுமி, ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். 

    விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வமணி (வயது 25) என்பவர் தமிழக அரசால் தடை சய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்தனர். உடனே போலீசார் செல்வ மணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி பல்பொருள் அங்காடியில் சினிமா பாணியில் பணத்தை கொள்ளையடித்த ஆசாமியை மோசடி நடந்த 12 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி சோமேஸ்வரன் கோவில் தெருவில் பானு கோபன் என்பவரது சூப்பர் மார்க்கெட்டில் டிப்டாப் ஆசாமி ஒருவர் சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் அதிகம் பொருள் வாங்க போவதாக கடை ஊழியரிடம் ரூ.2000 அபேஸ் செய்தார்.

    இதுபற்றி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதில் கிடைத்த காட்சிகளை பதிவு செய்து 4 பக்கமும் தனிப்படை போலீசாரை அனுப்பி விசாரணை வேகப்படுத்தினார். பல்வேறு கோணத்தில் விசாரணை வேகமாக நடைபெற்றது. விசாரணையில் இந்த பலே ஆசாமி சிதம்பரத்தை சேர்ந்தவன் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    உடனே தனிப்படை போலீசார் சிதம்பரம் விரைந்தனர். அங்கு இதேபோன்ற சம்பவத்தை வேறு ஒரு இடத்தில் அரக்கேற்ற தயாராகி கொண்டு இருந்தபோது பலே ஆசாமி சிக்கினான். அவனை மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில் பண்ருட்டியில் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டான்.

    இவனது பெயர் சரவணன் என்பதும், சிதம்பரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. அவனை பண்ருட்டிக்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் கைது செய்து அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறிய மோசடி சம்பவம் தானே என்று அலட்சியமாக இல்லாமல் ஒட்டுமொத்த காவல் துறையே உஷாராகி மோசடி நடந்த 12 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல் துறையை ஒட்டுமொத்த பண்ருட்டி நகரமே பாராட்டுகிறது.
    கடலூர் மாவட்டத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கையில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 398 பேருக்கு கொரோனா தொற்று பரவல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், தூக்கணாம்பாக்கம் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம், சிறுபாக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் என 4 போலீசார் உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களை சார்ந்த பலருக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதா? என்பதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக போலீசாருக்கு தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து போலீசாரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    கடலூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவர் நடுவீரப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக கடலூர் அடுத்த கே.என்.பேட்டையிலும் வீடு உள்ளது. நேற்று முன்தினம் வேல்முருகன் அந்த வீட்டிற்கு வந்தாா். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதை கண்டு பதறிய வேல்முருகன், நகை வைத்திருந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது நகையை காணவில்லை. நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடுபோன நகையின் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    சிதம்பரம், நெய்வேலியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் தாலுகா போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓமக்குளத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிதம்பரம் ஓமக்குளம் ஜமால் நகரை சேர்ந்த முஸ்தபா(வயது 21), தனுஷ் (19) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    நெய்வேலி 21-வது வட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் 21-வது வட்டம் சிவகாமி அம்மன் கோவில் அருகில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் ரத்னநகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் மாதவன்(வயது 20) என்பதும், தற்போது முத்தாண்டிக்குப்பத்தில் தங்கி இருந்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்வதற்காக சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் ஏறி போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.
    சிதம்பரம்:

    குடியரசு தினத்தை யொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக சிதம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சிதம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் போலீசார் சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் மற்றும் ரெயிலில் இருந்து இறங்கி சென்ற பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்வதற்காக சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் ஏறி போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு  சோதனை செய்தனர்.

    பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள இருப்புப் பாதை, தண்டவாளம், நடை மேடை, ரெயில் நிலையம் அருகே  உள்ள பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் மெட்டல் டிடெக்டர்  மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதி‌ மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 46). விவசாயி.

    இவர் இன்று காலை கத்தாழை ஊராட்சிக்குட்பட்ட கரிவெட்டி கிராமத்தில் உள்ள என்எல்சி ஏரிக்கரையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து சேத்தியாதோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இளையராஜ் தலைமையிலான போலீசார் பிணமாக கிடந்த வேல்முருகனின் உடலை பார்வையிட்டனர். அப்போது வேல்முருகனின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வேல்முருகன் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதி‌ மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 2 மடங்கு பொழிந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. அதன் பின்னர் தற்போது மழை ஓய்ந்ததால் நீர்மட்டம் படிபடியாக குறைந்தது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    இந்த ஏரிக்கு மேட்டூர் அணை மற்றும் பருவமழை காலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 2 மடங்கு பொழிந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. அதன் பின்னர் தற்போது மழை ஓய்ந்ததால் நீர்மட்டம் படிபடியாக குறைந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்துவருகிறது. நேற்று இரவும் நீர் பிடிப்பு பகுதியில் சாரல்மழை பெய்தது. இதன் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்று 45.05 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 45.15 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு 652 கனஅடி நீர் வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 63 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    கடலூர் மாவட்டம் முழுவதும் சந்தேக நபர்கள் மற்றும் பழைய குற்றவாளிகள் என 109 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
    கடலூர்:

    நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா நாளை(26-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மேற்பார்வையில் துணைகாவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 2000 காவல்துறையினர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் சந்தேக நபர்கள் மற்றும் பழைய குற்றவாளிகள் என 109 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுமட்டுமின்றி கடலூர் மாவட்டத்தில் 32 முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொண்டு 798 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    உரிமம் கோரப்படாத வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும்72 தங்கும் விடுதிகளில் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தலைமறைவு குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருத்தாசலம் அருகே லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெரால்டு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 லாரிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த டிரைவர்கள் போலீசாரை பார்த்ததும், சற்று முன்னதாகவே லாரிகளை நிறுத்திவிட்டு, இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரிகளில் இருந்த மூட்டைகளை சோதனையிட்டபோது, 2 லாரிகளிலும் 399 மூட்டைகளில் மொத்தம் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, லாரிகளில் இருந்த ஆவணங்களை போலீசார் பார்த்தபோது, அந்த ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்ல முயன்றபோது சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளையும் பறிமுதல் செய்து கடலூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து விருத்தாசலம் கூட்டுறவு பதிவாளர் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உளுந்தூர்பேட்டை ஆண்டிக்குழியை சேர்ந்த அப்பாசாமி மகன் லாரி டிரைவர் மணிகண்டன் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை இளையபெருமாள், அவரது மகனும், லாரி உரிமையாளருமான மணிகண்டன், மற்றொரு லாரி டிரைவர் ராஜா ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    ×