என் மலர்tooltip icon

    கடலூர்

    நெய்வேலி அருகே மின்சாரம் வழங்க கோரி என்.எல்.சி. நுழைவு வாயிலில் 6 கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள ஐ.டிஐ. நகர், திருவள்ளுவர் நகர், பெரியார் நகர், சிவாஜிநகர் உள்ளிட்ட 6 கிராம பகுதியில் உள்ள மக்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு என்.எல்.சி நிர்வாகம் மின்சாரம் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    எனவே மின்இணைப்பு வழங்காத என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தபோவதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம மக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் என்.எல்.சி. 2-வது சுரங்க வாயிலில் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் மற்றும் நெய்வேலி, மந்தாரக்குப்பம் வர்த்தக சங்கத்தினர், வியாபார பிரமுகர்கள் பங்கேற்றனர்.
    சிதம்பரம் அருகே முன்னாள் காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை மீட்டு தருமாறு கணவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே புதுசத்திரம் போலீஸ் சரகம் தீர்த்தன கிரி கிராமத்தை சேர்ந்தவர் பாரதிதாசன். இவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கலைவாணி (வயது 27). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனவே கடந்த 15-ந் தேதி கலைவாணி நெல்லிக்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் பாரதிதாசன் தனது மாமியாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது கலைவாணி அங்கு வரவில்லை என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாரதிதாசன் தனது மனைவியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே கலைவாணி தனது கணவரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார். அதில் என்னை தேடவேண்டாம். நான் முன்னாள் காதலன் விகாஷ் என்பவருடன் சென்றுள்ளேன் என ஆடியோ பதிவு செய்து அனுப்பி உள்ளார்.

    பதறிபோன பாரதிதாசன் இதுபற்றி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கூறியுள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெண் பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் அந்த பெண் கண்டக்டர் மணிகண்ணனை தனது ஆதரவாளர்களுடன் ஆட்டோவில் கடத்தி சென்றார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து நேற்று பயணிகளை ஏற்றிகொண்டு விருத்தாசலம் நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் கதிர்வேல் ஓட்டினார். கண்டக்டராக மணிகண்ணன் வந்தார்.

    அப்போது பெண் பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் அந்த பெண் கண்டக்டர் மணிகண்ணனை தனது ஆதரவாளர்களுடன் ஆட்டோவில் கடத்தி சென்றார்.

    இதை அறிந்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஒன்று திரண்டு விருத்தசாலம் பஸ் நிலையம் அருகே ஜங்சன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே கண்டக்டரை ஆட்டோவில் கடத்தி சென்றவர்கள், மீண்டும் பஸ் நிலையத்தில் அவரை விட்டுவிட்டு சென்றனர். இருந்தபோதிலும் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்தது. இதனால் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசார் கண்டக்டரை கடத்தி சென்றவர்களை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியதை அடுத்து சமாதானம் அடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை இயக்க தொடங்கினர்.

    இதுகுறித்து போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கண்டக்டர் மணிகண்ணன் போதையில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. உடனே போலீசார் மணிகண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக உள்ளது.
    ஆதிதிராவிட கிராம பொதுமக்கள் 30த்திற்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குறைகளை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து தீர்வு காண்பது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீமுஷ்ணம் க.தொழுர் ஆதிதிராவிட கிராம பொதுமக்கள் 30த்திற்கும் மேற்பட்டோர் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகிறோம் . இது நாள் வரையில் வீட்டு மனை பட்டா வழங்க வில்லை . எங்கள் பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுகக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து 30 வருடங்கள் ஆகின்றது . ஆனால் இலவச மனை கொடுப்பதற்கு அரசு சார்பில் நிலம் எடுக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டது .

    இந்த நிலையில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு இன்று வரையில் எங்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்படவில்லை.

    எனவே இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரியிடம் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் என தெரிவித்தனர். அதனைத தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
    கடலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வக்கீல் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூரை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் (வயது 38). வழக்கறிஞரான இவர் தனது நண்பர் முகுந்தன் உள்ளிட்டோருடன் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று காரில் சென்றிருந்தார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் நேற்று இரவு மதுரையில் இருந்த கடலூர் புறப்பட்டார்.

    இந்த காரை கடலூரை சேர்ந்த ஷேக் உசேன் ஓட்டி வந்தார். இந்த கார் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பாலம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரியை டிரைவர் முந்த முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் டிரைவர் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் உருக்குலைந்து போனது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஹேமந்த்குமார், காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்.

    மேலும் வெளியே வர முடியாமல் டிரைவர் ஷேக் உசேன் மற்றும் முகுந்தன் ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விராலிமலை போலீசார் அவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான வக்கீல் ஹேமந்த்குமார் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அண்ணா கிராமம், தொரப்பாடி, கண்டரக்கோட்டை, காடாம்புலியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அண்ணா கிராமம், தொரப்பாடி, கண்டரக்கோட்டை, காடாம்புலியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது.

    வெயில்அளவு சதம் அடித்தது. அனல்காற்று வீசியது. மக்கள் வெயில் கொடுமை தாங்காமல் பெரிதும் அவதிப்பட்டனர். இதற்கிடையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடி, மின்னலுடன் திடீர் மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ள நீராக பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஊர்ந்தபடியே சென்றனர்.
    விருத்தாசலம் அருகே ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்ட கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து நேற்று பயணிகளை ஏற்றிகொண்டு விருத்தாசலம் நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் கதிர்வேல் ஓட்டினார். கண்டக்டராக மணிகண்ணன் வந்தார்.

    அப்போது பெண் பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் அந்த பெண் கண்டக்டர் மணிகண்ணனை தனது ஆதரவாளர்களுடன் ஆட்டோவில் கடத்தி சென்றார்.

    இதை அறிந்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஒன்று திரண்டு விருத்தசாலம் பஸ் நிலையம் அருகே ஜங்சன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே கண்டக்டரை ஆட்டோவில் கடத்தி சென்றவர்கள், மீண்டும் பஸ் நிலையத்தில் அவரை விட்டுவிட்டு சென்றனர். இருந்தபோதிலும் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்தது. இதனால் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது

    தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசார் கண்டக்டரை கடத்தி சென்றவர்களை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியதை அடுத்து சமாதானம் அடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை இயக்க தொடங்கினர்.

    இதுகுறித்து போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கண்டக்டர் மணிகண்ணன் போதையில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. உடனே போலீசார் மணிகண்ணன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி பரப்பாக உள்ளது. 

    கடலூரில் நேற்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து காணப்பட்டன.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினம் தோறும் நாளுக்கு நாள் வெயிலில் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வந்தனர்.

    மேலும் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி கடும் வெயிலால் அனைவரும் அவதி அடைந்து வந்தனர். மேலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்பவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் சாலை ஓரத்தில் உள்ள குளிர்பான கடைகள், இளநீர், பழச்சாறு கடைகள், கரும்பு சாறு, தர்பூசணி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி சாப்பிட்டு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கு முயற்சி மேற்கொண்டனர்.

    மேலும் இரவு நேரத்தில் கடும் புழுக்கம் காரணமாக மக்கள் அவதி அடைந்து வந்ததையும் காணமுடிந்தது. இந்த நிலையில் வங்க கடலில் அசானி புயல் உருவாகியதால் கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கடந்த சில நாட்களாக பெய்து வந்தது.

    மேலும் மழை பெய்து வந்த நிலையில், வெயிலின் தாக்கம் முழுமையாக குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து வந்தனர். இந்த நிலையில் அசானி புயல் வலுவிழந்து குறைந்த அழுத்த காற்று தாழ்வு மண்டலமாக மாறி கரைய கடந்தது.

    நேற்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து காணப்பட்டன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகத்தில் துணிகளை கொண்டு மூடியும், நடந்து செல்பவர்கள் குடைபிடித்தபடியும், சாலையோர வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வந்தது காண முடிந்தது‌. மேலும் இதன் பாதிப்பு அக்னி நட்சத்திரம் முடியும் வரை இருக்குமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இருந்து வருவதையும் காண முடிந்தது.
    கடலூரில் அரசு போக்குவரத்து மண்டல அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் மண்டல அலுவலகம் முன்பு இன்று திடீர் சாலை மறியல் செய்தனர்.
    கடலூர்:

    மேல்மருவத்தூரில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் பெருமாள் என்பவர் குடிபோதையில் வந்த பயணி ஒருவரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரவியது.

    இதனை தொடர்ந்து கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    என்றாலும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

    அதன்படி கடலூரில் அரசு போக்குவரத்து மண்டல அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் மண்டல அலுவலகம் முன்பு இன்று திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போக்குவரத்து தொழிலாளர்கள் கூறுகையில் இறந்த கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதிஉதவி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, இந்த சம்பவத்தை கொலைவழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    உடனே போலீசார் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் மறியல் கைவிடப்பட்டது.
    கடலூர் மாநகராட்சி மேயர் வெள்ளப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கிய அடிப்படையில் 34 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.
    கடலூர்:

    கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற கூட்டம் நடைபெற்றபோது மனைபட்டா வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.

    இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு மனைபட்டா வழங்க உத்தரவிட்டனர்.

    அதன்படி கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வெள்ளப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கிய அடிப்படையில் 34 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், உங்கள் பகுதியில் எந்தவித குறைகளும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை குறித்து தெரிவித்தால் உடனடியாக அதிகாரியிடம் தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார். அப்போது மாநகராட்சி மண்டல குழு தலைவர் இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர் சரளா, திமுக நிர்வாகிகள் மஸ்கட் புகழேந்தி, ஜெயசீலன், லெனின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூரில் அரசு போக்குவரத்து மண்டல அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் மண்டல அலுவலகம் முன்பு இன்று திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கடலூர்:

    மேல்மருவத்தூரில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் பெருமாள் என்பவர் குடிபோதையில் வந்த பயணி ஒருவரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரவியது.

    இதனை தொடர்ந்து கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக முதல்அமைச்சர் மு.க.ஸடாலின் அறிவித்து உள்ளார்.

    என்றாலும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

    அதன்படி கடலூரில் அரசு போக்குவரத்து மண்டல அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் மண்டல அலுவலகம் முன்பு இன்று திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போக்குவர த்து தொழிலாளர்கள் கூறுகையில் இறந்த கண்டக்ட ர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதிஉதவி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, இந்த சம்பவத்தை கொலைவழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    உடனே போலீசார் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் மறியல் கைவிடப்பட்டது.

    நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதாத்தூர் கிராமத்தில் குறுவை சாகுபடியில் அறுவடை முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள மருதாத்தூர், இறப்பாவூர், மேலூர், சிறுமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து 50 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்ய காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் முறையாக கொள்முதல் செய்யாமல் குறைந்த அளவே கொள்முதல் செய்து வருகிறது. இதனால் தேங்கி உள்ள நெல் மூட்டைகள் அதிகாலை பெய்த திடீர் மழையால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது.

    நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×