search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் கண்டக்டர்"

    • எங்களுக்கு எப்படி சீட்டு இல்லை என கூறலாம் எனக்கூறி 2 பேரும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
    • போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்வதற்காக அரசு பஸ் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. பஸ்சில் ரங்கசாமி (வயது 57) என்பவர் நடத்துனராக இருந்தார். பஸ் புறப்பட்டு செல்லும் நேரத்தில் 2 வாலிபர்கள் ஓடி வந்தனர்.

    அவர்கள் இருவரும் நடத்துனர் ரங்கசாமியிடம் தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும், சீட்டு உள்ளதா என கேட்டுள்ளனர். நடத்துனர் சீட் இல்லை என தெரிவித்துள்ளார். எங்களுக்கு எப்படி சீட்டு இல்லை என கூறலாம் எனக்கூறி 2 பேரும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    திடீரென 2 பேரும் சேர்ந்து நடத்துனரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து உடனே திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் திருப்பூரை சேர்ந்த யுவராஜ் (21), புகழேந்தி (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்

    ஈரோடு,

    ஈரோடு வில்லரசம்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மணி (53). இவரது மனைவி கவிதா. மணி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு காசி பாளையம் கிளையில் கடந்த 22 வருடமாக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மணி வீட்டில் அடிக்கடி பீடி குடித்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணி கோபித்து கொண்டு மனைவி யுடன் சில நாட்கள் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மணி வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி யிடம் சாப்பாடு கேட்ட போது நீங்கள் வெளியில் சாப்பிட்டு வந்து விடுவீர்கள் என நினைத்து வீட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டோம் என்று கூறியுள்ளார்.

    இதனால் கோபித்து கொண்டு வீட்டின் மேல் மாடிக்கு மணி தூங்க சென்று விட்டார். காலை கவிதா மாடிக்கு சென்று பார்த்தபோது கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    ×