search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூரில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் 2 பேர் கைது
    X

    திருப்பூரில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் 2 பேர் கைது

    • எங்களுக்கு எப்படி சீட்டு இல்லை என கூறலாம் எனக்கூறி 2 பேரும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
    • போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்வதற்காக அரசு பஸ் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. பஸ்சில் ரங்கசாமி (வயது 57) என்பவர் நடத்துனராக இருந்தார். பஸ் புறப்பட்டு செல்லும் நேரத்தில் 2 வாலிபர்கள் ஓடி வந்தனர்.

    அவர்கள் இருவரும் நடத்துனர் ரங்கசாமியிடம் தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும், சீட்டு உள்ளதா என கேட்டுள்ளனர். நடத்துனர் சீட் இல்லை என தெரிவித்துள்ளார். எங்களுக்கு எப்படி சீட்டு இல்லை என கூறலாம் எனக்கூறி 2 பேரும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    திடீரென 2 பேரும் சேர்ந்து நடத்துனரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து உடனே திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் திருப்பூரை சேர்ந்த யுவராஜ் (21), புகழேந்தி (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×