search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்

    ஆதிதிராவிட கிராம பொதுமக்கள் 30த்திற்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குறைகளை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து தீர்வு காண்பது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீமுஷ்ணம் க.தொழுர் ஆதிதிராவிட கிராம பொதுமக்கள் 30த்திற்கும் மேற்பட்டோர் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகிறோம் . இது நாள் வரையில் வீட்டு மனை பட்டா வழங்க வில்லை . எங்கள் பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுகக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து 30 வருடங்கள் ஆகின்றது . ஆனால் இலவச மனை கொடுப்பதற்கு அரசு சார்பில் நிலம் எடுக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டது .

    இந்த நிலையில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு இன்று வரையில் எங்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்படவில்லை.

    எனவே இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரியிடம் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் என தெரிவித்தனர். அதனைத தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
    Next Story
    ×