search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    அரசு பஸ் கண்டக்டர் கொலை: கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

    கடலூரில் அரசு போக்குவரத்து மண்டல அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் மண்டல அலுவலகம் முன்பு இன்று திடீர் சாலை மறியல் செய்தனர்.
    கடலூர்:

    மேல்மருவத்தூரில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் பெருமாள் என்பவர் குடிபோதையில் வந்த பயணி ஒருவரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரவியது.

    இதனை தொடர்ந்து கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    என்றாலும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

    அதன்படி கடலூரில் அரசு போக்குவரத்து மண்டல அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் மண்டல அலுவலகம் முன்பு இன்று திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போக்குவரத்து தொழிலாளர்கள் கூறுகையில் இறந்த கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதிஉதவி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, இந்த சம்பவத்தை கொலைவழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    உடனே போலீசார் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் மறியல் கைவிடப்பட்டது.
    Next Story
    ×