என் மலர்tooltip icon

    கடலூர்

    புதிய பஸ் நிலையத்தை வேறு இடத்தில் அமைப்பதை கண்டித்து கடலூரில் அ.தி.மு.க.வினர் 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
    கடலூர்:

    முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.சி.சம்பத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடலூரில் புதிய கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அருகிலேயே புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டால், பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்ற அடிப்படையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 18 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலையில், தற்போது புதிய பஸ் நிலையம் அமைக்க எம்.புதூர் மற்றும் அரிசிபெரியாங்குப்பத்தில் இடம் தேர்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடலூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டால், பஸ் நிலையத்தை அடைவது என்பது மக்களுக்கு பெரும் காலதாமதத்தையும், பண விரயத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். அதனால் பஸ் நிலையத்தை முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது.

    மேலும் கடலூர் மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு அங்கேயே எரிக்கப்படுகின்றன. இதனால் புகை மண்டலம் உருவாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    எனவே மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்படும் அரசை கண்டித்தும், கடலூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் (20ந் தேதி) காலை 9 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எனவே இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    கடலூர் கல்லூரியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமு த்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். அவரது மகள் தனலட்சுமி (வயது 19). இவர் கடலூர் செமண்டலம் தனியார் மகளிர் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி மாணவி தனலட்சுமி தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இறந்தார். அப்போது காலையில் வந்த மாணவிகள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினார்கள். பின்னர் கல்லூரிக்கு விடுமுறை விடுக்கப்பட்டன.

    இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மாணவி தனலட்சுமி உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடையில் கல்லூரி மாணவி தனலட்சுமி இறந்தது தொடர்பாக சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும். மேலும் கல்லூரி நிர்வாகம் இறந்த மாணவி தனலட்சுமியுடன் படித்த மாணவிகள் மற்றும் பாடம் எடுத்த பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முதல்வரை உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் பேச்சுவார்த்தையில் அங்கிருந்து கலந்து சென்றனர்.

    இன்றும் 2-வது நாளாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது‌. மேலும் ஏராளமான போலீசார் காலை முதல் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இறந்த மாணவி தனலட்சுமி உறவினர்கள் ஏராளமானோர் இன்று காலை திடீரென்று திரண்டு கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், இறந்த தனலட்சுமி நன்றாக படிக்கக் கூடியவர். வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் திடீரென்று கல்லூரி வளாகத்திற்குள் உள்ள கழிப்பறையில் எப்படி தூக்கு மாட்டி இறந்தார்? அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா? என்று சந்தேகம் உள்ளது.

    மேலும் கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து நியாயமான முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், அமைப்பு செயலாளர் திருமார்பன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அனுமதி இன்றி இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் டிப்பர்களில் மணல் கடத்தல் நடக்கிறது.

    மேலும் பட்டப்பகலில் சாக்கு மூட்டையில் கட்டி மணல் கடத்தும் கும்பல் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவிக்கிறார்கள்.

    மணல் கடத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் அப்பகுதி ஆய்வுசெய்து தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டை சத்திரம் ெமயின் ரோட்டைசேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 38). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருக்கும்போது இவரது செல்போனில் அலாரம் ஒலித்ததால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு பொதுமக்கள் உதவியுடன் சென்று பார்த்தார்.

    அப்போது கள்ளக்குறிச்சிமூரார் பாளையம் சப்ருதீன் (43) பண்ருட்டிபோலீஸ் லைன் 7வது தெருவை சேர்ந்த அன்வர் (28) ஆகியோர் டவரில் பேட்டரிகளை திருடினர். அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்முடா, சுப உப்பலவாடி ஆகிய மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக 30 அடிக்கு முன்னோக்கி கடல் அலை சீறிப்பாய்ந்து சென்று வந்தன.
    கடலூர்:

    கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அசானி புயல் உருவாகி கரை கடந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.

    கடந்த 2 நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதற்கிடையில் கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்முடா, சுப உப்பலவாடி ஆகிய மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக 30 அடிக்கு முன்னோக்கி கடல் அலை சீறிப்பாய்ந்து சென்று வந்தன.

    இந்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டுள்ள நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் திடீரென்று மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குளிர்ந்து காற்று வீசி வந்த நிலையில் சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் பலர் நனைந்தபடியும், சிலர் குடைப்பிடித்தபடியும் சென்றது காண முடிந்தது.

    மன உளைச்சல் காரணமாக போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேந்தரகிள்ளை மணிக்கொல்லை தெருவை சேர்ந்தவர் முனுசாமி. அவரது மகன் பெரியசாமி (வயது 26). ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுக்குரிய சிதம்பரம் பகுதி விடைத்தாள்கள் அனைத்தும் சிதம்பரம் தில்லை நகரில் உள்ள தனியார் பள்ளியில் அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    கடந்த 6-ந் தேதி முதல் ஆயுதப்படை போலீஸ்காரர் பெரியசாமி இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடன் இன்னொரு போலீஸ்காரர் மற்றும் தீயணைப்பு படைவீரரும் அங்கிருந்தார்.

    இன்று அதிகாலை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த சக போலீசார் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் வந்த பகுதிக்கு சென்றனர்.

    அப்போது அங்கு போலீஸ்காரர் பெரியசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர்.

    தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட பெரியசாமிக்கும், உறவினர் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் ஜூன் மாதம் 10ந் தேதி நடைபெற உள்ளது. ஆனால் பெரியசாமி வேறு ஒரு பெண்ணை காதலித்துள்ளார். தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதனையும் மீறி பெற்றோர் பெரியசாமிக்கு உறவுக்கார பெண்ணை நிச்சயித்துள்ளனர். எனவே இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரியசாமிக்கு உடல் ரீதியாகவும் பிரச்சினை உள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் பெரியசாமிக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த 6-ந் தேதிதான் சிதம்பரத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

    கடந்த சில நாட்களாகவே மனஉளைச்சலில் இருந்துள்ளார். எனவே இதன் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூரில் சுபஉப்பலவாடி, நாணமேடு உள்ளிட்ட 3 கிராமங்களில் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனால் மீனவ கிராம மக்கள் அச்சத்துடன் காணப்படுகிறது.
    கடலூர்:

    வங்க கடலில் உருவான அதானி புயல் சின்னம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியில் கடலில் அதிக அளவு சீற்றம் காணப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் பரலாக மழை பெய்தது.

    அதன்பின்னர் கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் வெயில் வறுத்து எடுத்து வருகிறது. என்றாலும் கடலில் சீற்றம் குறையவில்லை.

    தென்பெண்ணை ஆற்றின் முககத்துவாரமாக தாழங்குடா, சுப உப்பலவாடி, நாணமேடு கிராமங்கள் உள்ளது. இந்த கிராம பகுதியில் மழை காலங்களில்தான் அதிக அளவு தண்ணீர் வரத்து இருக்கும். அப்போது ஆற்று நீர் கிராமங்களை சூழந்து காணப்படும்.

    ஆனால் தற்போது வழக்கத்துக்கு மாறாக கோடை காலத்தில் அதிகளவு கடல் சீற்றம் உள்ளது. குறிப்பாக சுபஉப்பலவாடி, தாழங்குடி, நாணமேடு பகுதியில் கடல் சீற்றம் அதிகம் உள்ளது. கடலில் எழும்பும் ராட்சத அலைகள் சுமார் 30 அடி தூரம் முன்னோக்கி வருகிறது.

    பொதுவாக கடலில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் சவுக்கு மரங்கள் இந்த பகுதியில் நடப்பட்டு உள்ளது. ஆனால் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் சவுக்கு தோப்பை தாண்டி முன்னேறி வருகிறது. இதனால் சவுக்கு மரங்கள் கீழே விழுந்த வண்ணம் உள்ளது.

    தாழங்குடா மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தற்போது தூண்டில் வளைவு அமைப்பதற்காக கற்கள் கொட்டப்பட்டு வருகிறது. இதுபோன்று சுபஉப்பலவாடி கடற்கரையில் எந்த தடுப்பும் இல்லை. எனவே சுபஉப்பலவாடி, நாணமேடு உள்ளிட்ட 3 கிராமங்களில் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனால் மீனவ கிராம மக்கள் அச்சத்துடன் காணப்படுகிறது.

    தாழங்குடா, சுபஉப்பலவாடி, நாணமேடு பகுதியில் பயறு வகைகள் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. கடல் சீற்றத்தால் தண்ணீர் இது போன்ற விளைநிலங்களில் புகுந்தால் நிலம் விவசாயத்துக்கு லாயக்கற்றதாகிவிடும்.

    எனவே கடல் சீற்றம் காரணமாக விவசாயிகளும் கவலை அடைந்து உள்ளனர்.


    கடலூரில் மகளிர் கல்லூரி கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் 2 வகுப்புகள் நடைபெறுகிறது.

    இந்த கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு மாணவிகள் வந்தனர். கழிவறைக்கு சென்றபோது அங்கு ஒரு மாணவி துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

    இதனை பார்த்ததும் மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் கல்லூரி வளாகத்தில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் பேராசிரியர்களும் திரண்டனர். இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    விசாரணையில் அந்த மாணவியின் பெயர் தனலட்சுமி (வயது 19), பி.காம். முதலாமாண்டு படித்து வந்தது தெரியவந்தது. இவர் விழுப்புரம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகள் ஆவார். இவர் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார்.

    இவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தம்பி சத்தி நல்லா படிடா, அப்பா அம்மாவ பாத்துக்கோ யாரையும் நம்பாதிங்க, இது போலியான உலகம், நான் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேனோ என பயமா இருக்கு, நான் இறந்துவிட்டால் என்.சி.சி. யூனிபாமை எனக்கு போடுங்க, எனது அக்கவுண்டில் ரூ.6 ஆயிரம் இருக்கு அதில் வாட்ச் வாங்கிக்கங்க, அப்பா, அம்மாவ எதிர்த்து பேசக்கூடாது. இந்த கடிதத்தை படித்துவிட்டு கிழித்து போட்டுவிடுங்க.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் கல்லூரி மாணவி தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×