என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியல்
கடலூர் கல்லூரியில் மாணவி தற்கொலை- மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் 2-வது நாளாக மறியல்
கடலூர் கல்லூரியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமு த்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். அவரது மகள் தனலட்சுமி (வயது 19). இவர் கடலூர் செமண்டலம் தனியார் மகளிர் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரி மாணவி தனலட்சுமி தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இறந்தார். அப்போது காலையில் வந்த மாணவிகள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினார்கள். பின்னர் கல்லூரிக்கு விடுமுறை விடுக்கப்பட்டன.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மாணவி தனலட்சுமி உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையில் கல்லூரி மாணவி தனலட்சுமி இறந்தது தொடர்பாக சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும். மேலும் கல்லூரி நிர்வாகம் இறந்த மாணவி தனலட்சுமியுடன் படித்த மாணவிகள் மற்றும் பாடம் எடுத்த பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முதல்வரை உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் பேச்சுவார்த்தையில் அங்கிருந்து கலந்து சென்றனர்.
இன்றும் 2-வது நாளாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஏராளமான போலீசார் காலை முதல் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இறந்த மாணவி தனலட்சுமி உறவினர்கள் ஏராளமானோர் இன்று காலை திடீரென்று திரண்டு கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், இறந்த தனலட்சுமி நன்றாக படிக்கக் கூடியவர். வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் திடீரென்று கல்லூரி வளாகத்திற்குள் உள்ள கழிப்பறையில் எப்படி தூக்கு மாட்டி இறந்தார்? அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா? என்று சந்தேகம் உள்ளது.
மேலும் கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து நியாயமான முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், அமைப்பு செயலாளர் திருமார்பன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story






