என் மலர்
கடலூர்
- பண்ருட்டியில் நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து வீட்டில் திருடிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- 50 பவுன் நகை 10 லட்சம் பணம் கொள்ளை அடித்து சென்றனர்.
கடலூர்:
பண்ருட்டி எல்.ஆர் பாளையம் பகுதியை சேர்ந்தவர்சீனிவாசன். இவர் துபாயில் தனி யார் கம்பெனியில்வேலை பார்த்து வருகிறார். கடந்த 30 -ந் தேதி இவரது மனைவி கவுரி, மகன் பாலகிருஷ்ணன் மற்றும் உறவினர் களுடன் கன்னியாகுமரி சுற்றுலா சென்று இருந்தனர். அப்போது வீட்டினுள் புகுந்த மர்ம ஆசாமிகள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் பீரோவில் இருந்த 50 பவுன் நகை 10 லட்சம் பணம் கொள்ளை அடித்து சென்றனர். இந்த கொள்ளை வழக்கில் பண்ருட்டி போலீசார்துரிதமாக செய ல்பட்டு நெல்லிக்குப்பம் எய்தனூர் செந்தில் முருகன் (24) மேல்பட்டா ம்பாக்கம்செல்வமணி(22) உளுந்தூர்பேட்டைபகுதி சேர்ந்த இனிய பெருமாள்ஆகியோரை அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து பணம் நகை பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு)மற்றும் தனிப்படை போலீசார்வலை வீசி தேடி வந்தனர். நேற்று வாகன சோத னையில் ஈடுபட்டிருந்த போலீசார் இந்த கொள்ளை வழக்கில்தேடப்பட்டு வந்தமுக்கியகுற்றவாளி மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம்ஷேக் என்கிற ஜெய்கணேஷ்(22)என்பவனை பொரி வைத்து பிடித்தனர். கைதான ஜெய்கணேஷ் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எங்களது கூட்டாளி உளுந்தூ ர்பேட்டை இளைய பெருமாள் என்பவனது மோட்டார் கொட்ட கைக்கு அடிக்கடி கஞ்சா அடிக்க சொல்லுவோம் அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தில் நாங்கள் விழுப்புரம், நெல்லிக்குப்பம் பகுதியில் 6 இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளோம் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 30-ந் தேதி பண்ருட்டி எல்.ஆர்.பாளைய ம்பகுதியில் நோட்ட மிட்டோம் அங்கு பூட்டி இருந்த வீட்டினுள் நுழைந்து கொள்ளையடித்தோம் அங்கிருந்த நாய் குறைக்காமல் இருக்கதடவி கொடுத்தேன் அந்த நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து குரைக்கா மல்பார்த்துக்கொண்டேன். எய்தனூர் செந்தில் முருகனுடன் வீட்டின் உள்ளே சென்று நகை பணம் கொள்ளை அடித்தோம். பண்ருட்டி போலீசார் எங்களை பொரிவைத்து பிடித்து விட்டனர் இவ்வாறு அவன் அந்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளான் இந்த கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கொள்ளை யர் களைஅதிரடியாக கைது செய்த பண்ருட்டி போலீஸ் டிஎஸ்பி சபியுல்லா,சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார் மற்றும் தனி படைபோலீஸாரை கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் பாராட்டினார்
- பெருமாள் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனுக்காக பலர் முடி காணிக்கையும் செலுத்தினர்.
- இந்தவாரம் மீன்கள் விலை சற்று அதி கரித்து காணப்பட்டது.
கடலூர்:
கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரி புலியூர் ஆகிய பகுதிகளில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு கடலூர் மற்றும் வெளியூரை சேர்ந்த மக்கள் வந்து மீன்கள் வாங்கி செல்வார்கள். புரட்டாசி மாதம் பிறந்த தில் இருந்து கடலூரை சேர்ந்த ஏராளமான மக்கள் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனுக்காக பலர் முடி காணிக்கையும் செலுத்தினர். நேற்றுடன் 3-வது புரட்டாசி சனிக்கி ழமை முடிந்தது. எனவே கடலூரை சேர்ந்த பொது மக்கள் பெருமாளுக்குரிய விரதத்தை முடித்துக் கொண்டனர். இன்று காலை மீன் வாங்குவதற்காக கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், முதுகநர், திருப்பாதிரி புலியூர் மீன் மார்க்கெட்டுக்கு சென்றனர். அங்கு போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர்.
இதேபோல இறைச்சி கடையிலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கூட்டம் அலை மோதியது. இதனால் ஓரளவு விற்ப னையும் அதிகரித்தது.கூட்டம் அதிகரிப்பு காரணமாக கடந்த வாரத்தை விட இந்தவாரம் மீன்கள் விலை சற்று அதி கரித்து காணப்பட்டது. விலை உயர்வு விபரம் வருமாறு:- சங்கரா ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆகவும், வஞ்சரம் ரூ.700-ல இருந்து ரூ.800 ஆகவும், சீலா ரூ.250-ல் இருந்து ரூ.350 ஆகவும், இரால் ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆகவும், கணவாய் ரூ.200-ல் இருந்து ரூ.250 ஆகவும், பாறை ரூ.300-ல் இருந்து ரூ.400 ஆகவும், கானாங்கத்தை ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும் உள்ளது.
- அரசு திட்டங்கள் மீனவர்களுக்கு உரிய முறையில் சென்றடைகிறதா என மந்திரி ஆய்வு
- மத்திய அரசு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்கள் குறித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா நேற்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், 49 மீனவ கிராமங்களில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள் மீனவர்களுக்கு உரிய முறையில் சென்றடைகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

மத்திய அரசு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மத்திய மந்திரியிடம் அதிகாரிகள் விரிவாக விளக்கினர். மீன் வளத் திட்டங்களில் உள்ள நன்மைகள் குறித்து அதிகாரிகள் மீனவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என மத்திய மந்திரி அப்போது அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
- அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை மீட்டு சிதம்பரம் காமராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கடலூர்:
காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) விவசாயி. இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து அதே பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது வயல்வெளிகளில் தரையில் மின்சாரகம்பி கிடந்துள்ளது. எதிர்பாராத விதமாக ரமேஷ் மின்கம்பியை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை மீட்டு சிதம்பரம் காமராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேசிய நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப் பணிக்காக கடந்த சில ஆண்டுகளாக கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த நிழற்குடை அகற்றினர்.
- பயணிகள் நலன் கருதி மந்தாரக்குப்பத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
கடலூர்:
கடலூரிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப் பணிக்காக கடந்த சில ஆண்டுகளாக கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த நிழற்குடை அகற்றினர். இவ்வழியாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பல்வேறு பஸ்கள் தினசரி செல்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் மந்தாரக்குப்பத்திற்கு வந்து செல்கின்றனர். பஸ் நிறுத்தங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள், முதியவர்கள் மழை, வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் மழை க்காலத்தை சமாளிக்க ஏதுவாக பயணிகள் நலன் கருதி மந்தாரக்குப்பத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
- கண்டரக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில்பழமை வாய்ந்த சிவன் கோவி ல்சோமநா தஈஸ்வரர்கோவில் உள்ளது.
- நெடுஞ்சாலைத்துறையினர் வழங்கு வதாக அறிவிக்க ப்பட்ட நிதி பாதியாக குறைக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கண்டரக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில்பழமை வாய்ந்த சிவன் கோவி ல்சோமநா தஈஸ்வரர்கோவில் உள்ளது. இந்த சிவன் கோவில் வளாகத்தில் விநாயகர்,முருகன், வீரப த்திரசாமி உள்ளிட்டசாமிசன்னதிகள் தனித்த னியாக அமைக்கப்பட்டிருந்தன. இந்து சமய அற நிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை தற்போது சாலை விரிவாக்க பணிக்காக இடிப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்க ப்பட்டதால் கடலூர் கலெக்டர்,பிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். புதிதாக கோவில் கட்ட திட்ட அறிக்கையை தயார் செய்து நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து கோவில் கட்ட 80 லட்சம் வழங்க தீர்மானிக்கப்பட்டது இதற்கிடையில் நெடுஞ்சாலைத்துறையினர் வழங்கு வதாக அறிவிக்க ப்பட்ட நிதி பாதியாக குறைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கிரா ம மக்கள் கோவில் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து பண்ருட்டி தாசில்தார் வெற்றி வேல், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், நில எடுப்பு தாசில்தார் சாமிக்கண்ணு, நகாய் அலுவலர்கள்,ரிலையன்ஸ் அதிகா ரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம், கோவில் அறங்கா வலர்கள் ராமானுஜம் ரெட்டியார், தண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் துரைராஜ், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வக்கீல் மதனகுரு, அதிமுக பிரமுகர் சேகர்,நாட்டாமை டெல்லி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் கலியபெருமா ள்,சிவபூஷணம் ஆறுமுகம் லட்சுமணன்,சரவணன் மற்றும் வியாபாரி சங்க பிரமுகர்கள் உள்ளிட்டோர் திரண்டனர். சுமூக முடிவு ஏற்படாததால்வருவாய் வட்டா ட்சியர் அலு வலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்தனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கோபு மோட்டார் சைக்கிளில் சிறுநெசலூர் கிராமத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- விருத்தாசலத்திலிருந்து கர்நாடக கார் கோபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் மகன் கோபு (வயது 32) , இவர் மோட்டார் சைக்கிளில் சிறுநெசலூர் கிராமத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வேப்பூர் கூட்டுரோட்டில் பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 32), என்பவரும், ராமசந்திரன் (வயது 24) ஆகிய 2 பேரும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 2பேரையும் ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நீதிமன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார் சேலம் விருத்தாசலம் சாலையில் வேப்பூர் அடுத்த கண்டபங்குறிச்சி அருகே தே புடையூர் கைகாட்டி அருகே சென்றபோது விருத்தாசலத்திலிருந்து கர்நாடக கார் கோபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய கோபுபலத்த காயமடைந்தார் அவருடன் சென்ற ராமசந்திரன், கிருஷ்ணமூர்த்திக்கு நெஞ்சு பகுதியிலும் காயம் ஏற்பட்டது இவர்கள் 3 பேரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைகாக கோபுவை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும் ராமச்சந்திரன் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையிலும், கிருஷ்ணமூர்த்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைகாக சேர்க்கபட்டுள்ளனர்.
விபத்தில் காயம் அடைந்த 3 பேரும் கனியாமூர் தனியார் பள்ளி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பியதாக கூறி ஏற்கனவே கள்ளக்குறிச்சி போலீசாரால் கைது செய்யபட்டனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வந்து தற்போது விருத்தாசலம் நீதி மன்றத்தில் தினந்தோறும் கையெப்பம் போட்டு வருகின்றனர் நீதிமன்றத்திற்கு கையெழுத்து போட சென்ற போது தான் விபத்தில் சிக்கி கொண்டனர். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்
- கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தது.
- செடிகள் அழுகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
கடலூர்:
தெற்கு ஆந்திரா பகுதியில் மேல்வளி மண்டல சுழற்றி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தது. நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் மழை நீடித்தது.
கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, திருவந்திபுரம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மழை கொட்டியது. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழையையொட்டி நெல் நாற்றங்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மழை விவசாயத்துக்கு ஏற்றதாக உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஊடு பயிராக பயிரிட்டுள்ள செடிகளுக்கு இந்த மழை உகந்ததாக இல்லை என்றும், இதனால் செடிகள் அழுகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை பற்றி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகா ரிகள் தீவிரமடைந்துள்ளனர்
- பல்வேறு அரசு பணிகளுக்கு செல்வதற்கும் காலையில் பஸ்கள்வருவது கிடையாது.
- வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர்.
கடலூர்:
புவனகிரியை சுற்றி சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடலூர், புதுச்சேரி, சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்வதும் பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மற்றும் மருத்துவமனைக்கு செல்வதற்கும் இதுபோன்று பல்வேறு அரசு பணிகளுக்கு செல்வதும் காலையில் பஸ்கள்வருவது கிடையாது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கின்றனர்.
இதேபோல் இரவு நேரங்களில் திரும்பி வருவதற்கும் பஸ்கள் புவனகிரி வழியாக வருவது கிடையாது. அனைத்து தனியார் மற்றும அரசு பஸ்கள் சி .முட்லூர் புறவழிச்சாலை வழியாக செல்கிறது. குறிப்பாக புறவழிச் சாலையில் தான் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புவனகிரி மற்றும் புவனகிரி சுற்றியுள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தலைமையில் விரைவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர்.
- ஆணும், பெண்ணும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருப்பாதிரிபுலியூர் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.
- வனிதா கட்டிடவேலைக்கு சென்று வந்தார். அப்போது கடலூர் அருகே உள்ள பில்லாலி தொட்டியை சேர்ந்த ராம தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் கூத்தப்பா க்கத்தில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை ஆணும், பெண்ணும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருப்பாதிரிபுலியூர் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்ட 2 பேரும் கள்ளக்கா தல்ஜோடி என்பது தெரியவந்தது. கடலூர் அருகே பல்லவ ராயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். அவரது மனைவி வனிதா. இவர்க ளுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு சேகர் இறந்து போனார். எனவே வனிதா கட்டிடவேலைக்கு சென்று வந்தார். அப்போது கடலூர் அருகே உள்ள பில்லாலி தொட்டியை சேர்ந்த ராம தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராமதாஸ் பெயிண்டராக உள்ளார்.
இந்த பழக்கம் நாளடை வில் இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தனிமை யில் சந்தித்துவந்தனர். இவரது தாய் பாலூரில் உள்ள காய்கறி ஆராய்ச்சி பண்ணையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு வனிதாவின் தாய் இறந்தார். எனவே வாரிசு அடிப்படையில் வனிதா வுக்கு காய்கறி ஆராய்ச்சி பண்ணையில் வேலை கிடைத்தது. அங்கு வேலை பார்த்ததால் ராமதாசை அடிக்கடி சந்திக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்துள்ளனர். என்றாலும் வனிதா அடிக்கடி வெளியூறுக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். உடனே உறவினர்கள் அவரை தேடினர். அப்போது அவர் பாதிரிகுப்பத்தில் இருப்பது தெரியவந்தது.
உடனே உறவினர்கள் கண்டித்ததால் சொந்த ஊரான பல்லவராய நத்தம் கிராமத்தில் தனது மகன்களுடன் வசித்து வந்தார். இதனிடையே காய்கறி ஆராய்ச்சி நிலையத்துக்கு வனிதா வேலைக்கு செல்லவில்லை. எனவே அங்குள்ள அதிகாரிகள் வனிதாவை கேள்விகேட்டனர். இதனால் மனமுடைந்த வனிதா வீட்டை விட்டு திடீரென வெளியேறினார். உடனே உறவினர்கள் தேடினர். அப்போது வனிதா கூத்தப்பாக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் வனிதாவும், ராமதாசும் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக உறவின ர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராமதாஸ் மனைவி சென்னையில் உள்ளார். அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- ஏட்டு முத்துக்குமரன் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
- பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் செம்மண்டலம் குண்டு சாலை நடேசன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 43). கடலூர் காவல் கட்டுப்பாட்டு அறை ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை இவரது வீட்டு முன்பு தனது காரை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கார் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து ஏட்டு முத்துக்குமரன் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் இவரது கார் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து முத்துக்குமரன் எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் ஊற்றி அைணத்தார். பின்னர் கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது ஏட்டு காருக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து தப்பி ஓடினார்களா? அல்லது கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததற்கு வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மத்திய சிறைச்சாலையில் பகுதியில் உள்ள உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டிற்கு முன்விரோதம் காரணமாக சிறை சாலையில் பணிபுரிந்த போலீஸ், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் குடும்பத்தை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் , மீண்டும் போலீசார் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த அவரது கார் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
- செந்தமிழ் செல்வி மற்றும் தமிழ் சேரன் என்பவர் என்னை பற்றி அவதூறாக கூறி எனக்கு திருமணம் நடக்கக்கூடாது என்பதற்காக தினந்தோறும் பிரச்சினை செய்து வருகின்றனர்.
கடலூர்:
சிதம்பரம் வல்லம்படுகை வல்லந்துறையை சேர்ந்தவர் செந்தமிழ் அரசி (வயது 30). இவர் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது-
நான் எனது குடும்பத்துடன் வல்லந்துறை பகுதியில் வசித்து வருகின்றேன். இந்த நிலையில் எனக்கு திருமணம் நடைபெற வேண்டி பல்வேறு குடும்பத்தில் வரன்கள் பார்த்துவந்த போது அதே பகுதியை சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் தமிழ் சேரன் என்பவர் என்னை பற்றி அவதூறாக கூறி எனக்கு திருமணம் நடக்கக்கூடாது என்பதற்காக தினந்தோறும் பிரச்சினை செய்து வருகின்றனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக நான் கடும் மன உளைச்சலில் இருந்து வருகின்றேன். இந்த பிரச்சனை தொடர்பாக அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். இது வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால் போலீசார் எங்களை மிரட்டும் நபர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.






