என் மலர்tooltip icon

    கடலூர்

    • வைஷ்ணவிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
    • மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் வைஷ்ணவி கிடைக்கவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் அவரது மனைவி வைஷ்ணவி. (வயது 19). இவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 20-ந் தேதி வைஷ்ணவியின் தந்தை இறந்து போனார். இதற்காக வைஷ்ணவி பெரிய காட்டுபாளையம் கிராமத்துக்கு சென்றார்.

    அதன்பின்னர் அவர் மாளிகம்பட்டு கிராமத்துக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் வைஷ்ணவி அங்கு செல்லவில்லை. அதிர்ச்சி அடைந்த நந்தகோபால் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் வைஷ்ணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து நந்தகோபால் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்து வைஷ்ணவி என்ன ஆனார் எங்கு சென்றார் கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவனை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள பொன்னேரி கிராமத்தில் வசித்து வரும் செந்தில் -மீனா. இவர்களின் 13 வயது மகன் பிரேம்குமார். விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இவர் அவருடைய வீட்டின் எதிர்ப்புற சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். சிறுவனை அங்கிருந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

    இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் மரக்கட்டைகளை போட்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மாணவன் நேரடியாக மாண வியின் வீட்டிற்கு வந்து மாணவியை கடத்திச் சென்றுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வருகி றார். இந்நிலையில் நேற்று மாணவி வீட்டில் தனி யாக இருந்துள்ளார். இதை அறிந்த மாணவியுடன் படிக்கும் விழுப்புரம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த சக மாணவன் பால முருகன் நேரடியாக மாண வியின் வீட்டிற்கு வந்து மாணவியை கடத்திச் சென்றுள்ளார்.

    இதனை அடுத்து வீட்டிற்கு வந்த மாண வியின் பெற்றோர் வீட்டில் மாணவி கடத்திச் செல்ல ப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாணவியின் தந்தை இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து மாணவி மற்றும் மாணவியை வீடு புகுந்து கடத்திச் சென்ற பாலமுரு கனை வலை வீசி தேடி வருகின்றனர். 

    • சித்தேரி பகுதியில் நேற்று பெய்த மழையினால் மின்கம்பி அருந்து கீழே கிடந்தது.
    • கீழே கிடந்த இந்த மின்கம்பி அந்த வழியாகச் சென்ற பெரியசாமி எதிர்பாராத விதமாக மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுபாக்கம் சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68) விவசாயி. இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதி வழியாக சென்றுள்ளார்.

    அப்போது சித்தேரி பகுதியில் நேற்று பெய்த மழையினால் மின்கம்பி அருந்து கீழே கிடந்தது. கீழே கிடந்த இந்த மின்கம்பி அந்த வழியாகச் சென்ற பெரியசாமி எதிர்பாராத விதமாக மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது பற்றி தகவல் அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேப்பூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 50 வயது மதிக்க முதியவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
    • பின்னால் வந்த லாரியின் பின் சக்கரம் இந்த முதியோர் மீது ஏறி இறங்கியது.

    கடலூர்:

    சிதம்பரத்திலிருந்து நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அப்போது கீரப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் அடை யாளம் தெரியாத முதியவர் லிப்ட் கேட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார்.

    இந்நிலையில் புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்த 50 வயது மதிக்க முதியவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரியின் பின் சக்கரம் இந்த முதியோர் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீ சார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முருகன் வீட்டில் இருந்த சென்ட்ரிங் சீட்டை அதே பகுதிைய சேர்ந்த நித்திஷ்,சதிஷ், சக்தி, மற்றும் வினோத்குமார் எடுத்து விற்று விட்டனர்.
    • முருகன் மனைவி தட்டி கேட்டபோது அவர்கள் அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 42)இவரது வீட்டில் இருந்த சென்ட்ரிங் சீட்டை அதே பகுதிைய சேர்ந்த நித்திஷ், (22) சதிஷ், (27) சக்தி, மற்றும் வினோத்குமார் எடுத்து விற்று விட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.

    சம்பவத்தன்று முருகன் வீட்டில் இல்லாத சமயத்தில் நித்திஷ், சதிஷ், சக்தி, ஆகியோர் முருகனின் வீட்டின் கேட்டை உடைத்தும் பொருட்களை சேதப்படுத்தினர். இதனை முருகன் மனைவி தட்டி கேட்டார். உடனே அவர்கள் அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில், வடலூர் போலீ சார்வழக்கு பதிவுசெய்து.நித்திஷ், சதிஷ், ஆகியோர்களை கைது செய்தனர்.  

    • பலத்த மழை காரணமாக கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது.
    • பெரியம்மா கம்பியை தொட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுபாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. அவரது மனைவி பெரியம்மா. இவர் நேற்று இரவு துணிதுவைத்துவிட்டு அதனை காய வைப்பதற்காக வீட்டின் வெளிபுறம் உள்ள கம்பியில் தொங்கவிட்டார்.

    அப்போது பலத்த மழை காரணமாக அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதனை கவனிக்காமல் பெரியம்மா கம்பியை தொட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இவரது அலறல் சத்தம்கேட்டு கணவர் ஆறுமுகம் ஓடிவந்தார். அவர் தனது மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதனை அறிந்த வீட்டில் இருந்த ஆறுமுகத்தின் மகன் மணிகண்டன் (வயது 32). ஓடிவந்து தனது பெற்றோரை காப்பாற்ற முயன்றார். அப்போது மணிகண்டனும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை அறிந்த கிராம மக்கள் அங்கு வந்தனர். 3 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன், ஆறுமுகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பெரியம்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே வீட்டில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியுள்ளது.
    • கடைகாரர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்றி கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையாளர் பார்த்த சாரதி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நெல்லிக்குப்பம் நகராட்சி க்குட்பட்ட 30 வார்டுகளுக்கும் சாலைவசதி, கால்வாய் வசதி, குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியுள்ளது. மின்சார வாரியத்திற்கு மின் கட்டணம் 0.75 லட்சம் பாக்கி உள்ளது. இந்நிலையில் வரிவிதிப்புதாரர்கள் செலுத்த வேண்டியது. சொத்துவரி நிலுவை- ரூ. 206.34 லட்சம், குழாய் கட்டணம் நிலுவை-ரூ. 37.18 லட்சம், காலிமனை வரி நிலுவை-ரூ. 41.93 லட்சம், தொழில்வரி நிலுவை-ரூ. 13.53 லட்சம், கடை வாடகை நிலுவை- ரூ. 13.22 லட்சம், எஸ்.யூ.சி. கட்டணம்-ரூ. 21.61 லட்சம், மொத்தம்-ரூ. 333.81. எனவே, மேற்படி ரூ.333.81 லட்சம் வரி மற்றும் குழாய், வரியில்லா இனங்களை 15 தினங்களுக்குள் செலுத்த வேண்டும் தவறி னால் விதிகளின்படி ஜப்தி, குழாய் இணைப்பு துண்டிப்பு, கடையை பூட்டி சீல் வைப்பு நடவ டிக்கை மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும்.

    அனுமதியற்ற குழாய் இணைப்புகளுக்கு தாமாக முன்வந்து நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி ஒழுங்குபடுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், ஆலை ரோட்டில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் கடை காரர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்றி கொள்ள வேண்டும். தவறினால் நகராட்சி சார்பில் ஆக்கிரமி ப்புகளை அகற்ற நேரிடும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சொத்துவரி குறைக்க வேண்டுபவர்கள் நகராட்சி விதிகளின்படி 2022-2023 முதல் அரையாண்டுக்கான தொகை முழுவதும் செலுத்தி ஆணையருக்கு விண்ணப்பிக்கும் படியும் கோரப்படுகிறது. பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

    • திட்டக்குடி அருகே அனுமதி இன்றி கிராவல்மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் .

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் ஏரியில் அனுமதி இன்றி கிராவல் அள்ளுவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை செய்த போது மாணிக்கம் என்பவரது நிலத்திற்கு அனுமதி இன்றி கிராவல் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வம் (31), அவினாஷ் (19), கவியரசன் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கிராவல் மண்அள்ளுவதற்கு பயன்படுத்திய பதிவு எண் இல்லாத ஜே.சி.பி.,எந்திரம் ஒன்றும், இருசக்கர வாகனம் ஒன்றும், பதிவுகள் இல்லாத கார் ஒன்றும் ஆகிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் .

    • புவனகிரி அருகே கார் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
    • புவனகிரி பஸ் நிலையத்திலிருந்து இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.

    கடலூர்:

    புவனகிரி அருகே ஆதிவரகநந்தம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 54) சிதம்பரத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். நேற்று பணி முடிந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக சிதம்பரத்திலிருந்து புவனகிரிக்கு பஸ்சில் வந்தார். புவனகிரி பஸ் நிலையத்திலிருந்து இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது புவனகிரியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் மோட்டார் சைக்கிள் வந்த போது எதிரே வந்த கார் மோதி ரவி தூக்கி வீசப்பட்டார்.

    இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ரவியை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ரவி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • பண்ருட்டியில் லாட்டரி டிக்கெட் வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
    • 2 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார்பண்ருட்டி பகுதியில்தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகப்படும்படி அங்கு நின்றுகொண்டிருந்த பண்ருட்டி கொக்கு பாளையம்ரோட்டைசேர்ந்த அப்துல்மத்தீன்(வயது45),புதுப்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த யுவராஜ் (48), ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் 2 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் அவர்களிடம்இருந்து ஏராளமான லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

    • வடலூரில் போலீஸ் லாரியில் இரும்பு பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஆண்டார் முள்ளிபள்ளம்பாலக்குமார் தப்பி ஓடிவிட்டார்.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் வடலூர் 4 முனை ரோட்டில் அதிகாலை 5 மணிக்கு வாகன தணிக்கை செய்தனர் . அப்போது மினி லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் ஆண்டார் முள்ளி பள்ளம் அம்பேத்கார் நகர் இளையபெருமாள் (வயது34) பெரியப்பட்டு பாண்டியன் தமிழரசன்(36) ஆகியோர் என தெரியவந்தது.

    இவர்களுடன் வந்த ஆண்டார் முள்ளிபள்ளம்பா லக்குமார் தப்பி ஓடிவிட்டார். லாரியில் கடத்திய இரும்பு பொருட்கள் கடலூரில்மூடிக்கிடக்கும் கம்பெனி இரும்புஎந்திரங்கள் எனவும் இதன்மொத்த எடை,3.5 டன் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×